நேரடி அனுபவம் என்றால் என்ன?

அனுபவமே தேவைப்படாத அளவுக்குத் தெளிவான, விழிப்பான, தனக்குத்தானே ஓர் ஒளியாக இருக்கிற மனம் உள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வது சாத்தியமா? அப்படி என்றால் போராட்டம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வது; அப்படியென்றால் அதற்கு சவால் விடவோ அல்லது அதை எழுப்பிவிடவோ ஒரு விஷயம் தேவைப்படாத மிகுந்த உணர்வுக் கூர்மையும் நுண்ணறிவும் உள்ள ஒரு மனம் என்று பொருள். மனத்தின் அசைவின்மைக்கும் அதன் முழு அமைதிக்கும் ஓர் அசாதாரண ஒழுங்கு தேவைப்படுகிறது.

தன்னையே மையமாகக் கொண்ட சுயநலச் செயல்களுக்கப்பால் செல்வது எப்போதாவது சாத்தியமா? ஒன்று ‘சாத்தியம்’ எனும்போது ஒருவருக்கு மிகுந்த சக்தி இருக்கிறது; ஆனால் எது சக்தியை வீணாக்குகிறதென்றால் ‘இது சாத்யமில்லை’ என்ற உணர்வு. அதனால் ஒருவர் இடம் பெயருகிறார். நம்மில் பெரும்பாலோர் செய்வதுபோல மனிதனின் சூழ்நிலையை அது இருக்கிறது போலவே காணும் போது ஒருவர் என்ன செய்வது? நான் நினைக்கிறேன், இந்த ஒரு கேள்வியை தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்கு உணர்வுடனும் உயிர்ப்புடனும் விழிப்புடனும் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தவறாமல் அவசியம் கேட்க வேண்டும். இது ஒரு படிப்பறிவு பூர்வமான அல்லது அனுமானமாக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. ஆனால் வாழ்வதன் உள்ள நிலையிலிருந்து எழுந்த ஒன்றாகும். இக்கேள்வி சில அரிதான நேரங்களுக்கான ஒன்றல்ல. ஆனால் பகல், இரவு முழுவதும் வருடங்கள் முழுவதும் ஒருவர் முழுமையான இசையோடு தன்னுள்ளும் உலகத்துடனும் போராட்டமின்றி இருக்கும் வாழ்க்கையை வாழும் வரையிலும் உறுதியாகத் தொடர்ந்து இருக்கின்ற ஒரு கேள்வியாகும். போராட்டம் ஒருவர் பார்வையில் சுயநலம் பொருந்திய அக்கறையிலிருந்து எழுகிறது. அச்சுயநல அக்கறை வேட்கைகளுக்கு அவ்வளவு அசாத்திய முக்கியத்துவம் அளிக்கிறது. எப்படி ஒருவர் இந்த அற்பமான, மட்டரகமான, சிறிய ‘தான்’ என்பதற்கப்பால் செல்வது? எப்படி ஒருவர் அப்பால் செல்வது?

உளவியல் ரீதியாக மாற்றங்களுக்கான ஆற்றல் இன்மையால் நாம் வெளி ஏற்பாடுகளை நாடுகிறோம். சூழ்நிலையைமாற்று! சமுதாய மற்றும் பொருளாதார அமைப்பை மாற்று! மனிதனும் தவிர்க்க முடியாமல் மாறுவான் என்று கம்யு+னிஸம் கூறியது. அது முழுவதும் தவறு என்று நிரூபணமாகிவிட்டது. இப்போது, மதத் தலைவர்களோ, நம்பு, ஏற்றுக்கொள், உன்னைவிடப் பெரியதாய் புறத்தே உள்ள ஒன்றின் கையில் உன்னை ஒப்படை என்று கூறினர். அதுவும்கூட அதன் உயிரோட்டத்தை இழந்து விட்டது. ஏனெனில் அது மெய்யானதல்ல. அது வெறுமையான படிப்பறிவின் கண்டுபிடிப்பு;; வரட்டுப் பேச்சு. அதில் எந்தவித ஆழமும் இல்லை. ஒரு நாட்டுடன் தன்னை இனம் காண்பது; அதுகூட பயங்கரமான போர்களை, துயரம் மற்றும் குழப்பத்தைக் கொண்டு வந்துள்ளது. எப்போதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் பிரிவினை தான் இதன் விளைவு. இதை எல்லாம் பார்த்து ஒருவர் என்ன செய்வது?

ஏதோ ஒரு மடாலயத்துக்குத் தப்பி ஓடி விடுவதா? ‘ஜென’; தியானம் கற்றுக் கொள்வதா? ஏதோ ஒரு தத்துவக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதா? தப்பித்தலுக்கும் சுயவசியத்திற்கும் வேண்டி தியானம் செய்வதா? ஒருவர் இதையெல்லாம் காண்கிறார். மெய்யாகவே வாய்மொழியாக அல்ல அல்லது படிப்பறிவு மூலமாக அல்ல அது எங்கேயும் இட்டுச் செல்லவில்லை என்பதையும் காண்கிறார். ஒருவர் தவிர்க்க முடியாதபடி அவை அனைத்தையும் மொத்தமாக மறுத்து ஒதுக்க மாட்டாரா?

ஒருவர் பெரியதான ஒன்றுடன் தன்னை இணைத்து இனம் காணும் எல்லாவகைகளிலும் சூழல் மனிதனை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் உள்ள பொய்மையை காண்கிறார். அவர் நம்பிக்கைகளின் மேலோட்டமான தன்மையாகக் காண்கிறார். அப்போது அவற்றையெல்லாம் கருத்தாக்கமாக இல்லாமல் மெய்யாகவே ஒதுக்கிவிடமாட்டாரா? ஒருவர் அப்படிச் செய்தால் அதுவே பெரும்பணி. பொருள்களை முழுமையாக எப்படி இருக்கின்றனவோ அப்படியே எந்த திரித்தலுமின்றி ஒருவரின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்த மாதிரி விளங்கிக் கொள்ளாமல் பார்க்கும் திறனுடைய ஒரு மனத்தைக் குறிக்கிறது. அப்போது அந்த மனதின் தன்மைக்கு என்ன நேரிடுகிறது. உடனடியாகச் செயல் இருக்கிறது. நுண்ணறிவான செயல் அபாயத்தைக் காண்பதும் செயல்படுவதும் காண்பதற்கும் செயற்படுவதற்கும் இடையே பிளவு இல்லாத நுண்ணறிவு காண்பதிலேயே செயல்பாடு இருக்கிறது. ஒருவர் செயல்படவில்லை என்றால் மனநலம் குன்றிய நிலை தொடங்குகிறது. நிதான நிலையின்மை ஏற்படுகிறது. அப்போது “நான் அதைச் செய்ய முடியாது, அது மிகவும் கஷ்டம், நான் என்ன செய்வது?” என்று நாம் கூறுகிறோம்.

உளவியல் ரீதியாக ஒரு கருத்தாக்கத்திற்குத் தகுந்தாற்போல் செயல்பாடு தீர்மானிக்கப்படுகிறது என இருந்தால் அங்கு வேறுபாடு இருக்கிறது. எனவே போராட்டமும் நிச்சயம் இருக்கும். கருத்துக்கும் செயலுக்கும் இடையே உள்ள இந்தப் போராட்டம் வாழ்வில் மிகவும் குழப்பமான காரணியாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு மரபு, ஒரு தவறான அபிப்பிராயம் இருந்தால் நீங்கள் ஒரு இந்து, ஒரு கிறிஸ்தவன், ஒரு முஸ்லிம், ஒரு கம்யு+னிஸ்ட், இன்னபிற என்றிருந்தால் அந்தப் பிரிவினை விரோதத்தை, வெறுப்பை, வன்முறையை வளர்க்கிறது. எனவே நடப்பில் உள்ளதைக் காணும் ஆற்றல் உங்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. கருத்தாக்கத்திற்கும் செயலுக்கும் இடையே உள்ள எந்த பிரிவினையிலும் போராட்டம் கட்டாயம் இருக்கும். இப்போராட்ட மன நோயானது புத்தி சுவாதீனமற்றது. மனம் நேரடியாகக் காணமுடியுமா? காண்பதிலேயே செயல் இருக்குமாறு இது கவனத்தை வேண்டுகிறது. ஒரு விழிப்iபுணர்வு அதற்குத் தேவைப்படுகிறது. ஒருவர் ஒன்றை வெகு தெளிவாகப் பார்க்கும் போதும் செயல்படும் போதும் அங்கு பிரிவினை இல்லை. இது தன்னை அறிதல் மூலமாக மட்டுமே கற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று; நேரடியாகக் கற்றுக் கொள்கிற ஒன்று. இதுவே நேரடி அனுபவமாகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *