நீங்கள் இப்போது உங்கள் மனதில் ஆசையினால் அடுக்கப் பட்ட விஷயங்களை இல்லாமல் செய்து மரபுவழிக் கர்மாவால் பதிக்கப்பட்ட மனதையும் தூய்மைப்படுத்தி விட்டீர்கள். உங்கள் மனதில் இன்னும் யோசிக்கவென்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறதா? உங்கள் நவீன வாழ்க்கை முறை உங்களுக்குச் சில நிகழ்ச்சி நிரல்களைப் போட்டுக் கொடுக்கும். அவைகூடக் கர்மாவாக மாறுவதற்கு ஒரு ஆரம்பமாக இருக்கும். நீங்கள் ஆரம்பிக்கின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கே பிரச்சனையைக் கொடுக்கும். இதுவரை நீங்களே ஒரு திட்டத்தைப் போட்டு அது எந்தவிதத் தடையுமின்றி நிறைவேறி இருக்கிறதா அல்லது வேறு யாராவது திட்டத்தைப் போட்டு அதை நீங்கள் முன்னெடுத்துச் செய்து அதில் முழுத்திருப்தி அடைந்திருக்கிறீர்களா?

பணமும் வசதியும் இருந்தால் பல பிரச்சனைகள் இருக்காது என்னும் சமூகத்தினரின் மேற்போக்கான கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஒருவர் சந்தோஷமாக இருப்பதற்கும் கவலைப்படுவதற்கும் அதுதான் காரணமா? உண்மையில் எது இருந்தால் சந்தோஷம் நிலைத்திருக்கும் என்றால் தன்னோடு தான் இருந்து நிறைவுடன் இருக்கப் பழகினால் போதும் என்னும் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டால் எந்தச் சூழ்நிலை யிலும் சந்தோஷமாக இருக்கலாம். அதற்கு மிகக் குறைந்த அளவில் மனதைப் பாவிக்கப்பழகுதல் மிகச் சிறந்தது.

சிலவேளைகளில் யோசித்துப் பார்த்தால் எதிர்காலத்தில் இப்போது இருக்கின்ற அளவிற்குக் கோவில்களோ வழிபாட்டுத் தலங்களோ இருக்காது என்றே தோன்றுகின்றது. நாத்திகர்களே இப்போது இல்லை என்று சொல்லலாம். ஒரு தெய்வீகச் சக்திதான் அனைத்தையும் கொண்டு செலுத்தி இயக்குகின்றது என்பதை உலகமே ஏற்றுக் கொண்ட உண்மையாகிவிட்டது. அந்தத் தெய்வீகச் சக்தி எனக்குள்ளே இருந்து வழிகாட்டிக் கொண்டே இருக்கிறது. நான் அதை உணராமல் இருப்பதற்குக் காரணம் எனது ஈகோ.

தாவரங்கள்தான் சூரிய ஒளியை எடுத்து இலைகள், காய், கனிகள் எல்லாவற்றிற்கும் பிரித்துக் கொடுக்கின்றன. சூரிய ஒளியால் நிரம்பிய அந்தத் தாவர உணவை எடுத்துச் சாப்பிட்டால் நம்மிலும் அந்த சூரிய சக்தி ஒளியாக வந்து சேரும். இறைவனுக்கு நன்றி தெரிவித்து அந்த உணவுகளை உண்ணப் பழக வேண்டும். நம்மில் ஒளித்தன்மை ஏற்பட வேண்டுமென்றால் பச்சை நிறத் தாவர வகைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். தாவர உணவு உண்பவர்களிடம் ஒளித்தன்மை அதிகம் காணப்படும். கவனித்துப் பார்த்தால் இது தெரியும். ஒளியில் ஒளிர்வதற்குத் தாவர உணவு ஒரு முக்கிய காரணியாகும்.

குடும்பத்தாலோ, உறவினராலோ, சமுதாயத்தாலோ மனதில் விதைக்கப்பட்ட வெறுப்புத்தான் வளர்ந்து பகையாக மாறித் தீமையை விளைவிக்கின்றது. நமது நாட்டில் வாழ்ந்தபோது நாம் பார்த்துப் பழகிய இந்த வெறுப்பு இங்கே இந்த நாட்டில் அதுவும் தற்போதைய சூழ்நிலையில் இல்லை. எதையும் சாதாரணமாக ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் இங்குள்ள சூழ்நிலையால் ஏற்பட்டிருக்கிறது. மனிதாபிமானம் அதிகரித்திருக்கிறது. பூமியின் பரிணாம உயர்வினாலும் மனித உணர்வு இதய சக்கரத்தை அடைந்துள்ளதாலும் இந்த வளர்ச்சி ஏற்படடுள்ளது. வளர்கின்ற காலத்தில் இந்த மனம் எத்தனையோ பிரச்சனைகளால் இழுபட்டு அவற்றில் சிக்குப்பட்டுத் தடுமாறியிருக்கின்றது. உடலியல் ரிதியாகவும் உளவியல் ரிதியாகவும் பலவிதத் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உடலியல் ரிதியாக ஏற்படுபவர்களுக்கு உணவும் பாலுணர்வும் காரணமாகின்றன. மனம் இவை இரண்டிலும் திருப்தியடைவதில்லை என்று காம சூத்திரம் சொல்கிறது. இவற்றைத் தூண்டுவது உயிர். பரமாத்மா என்னும் எல்லாவற்றிற்கும் மேலான ஒன்றுடன் இந்த உயிராகிய ஆத்மாவிற்குத் தொடர்பு இருக்கிறது. ஆத்மாவின் சைகைதான் உயிரிலிருந்து மனதிற்கும் மனதிலிருந்து உடலுக்கும் அனுப்பப்படுகின்றது. என்னால், அதாவது எனக்குத் தரப்பட்டிருக்கின்ற புத்தியால் மனதையும் உடலையும் ஒதுக்கி ஆத்மாவுடன் சென்று சேர முடியும்.

படித்தவர்கள் எல்லோரும் தங்களது மனப்பதிவுகளான கர்மாவை நெரசழவசயளெஅவைவநசளஆல் மாற்றுகிறார்கள். இதைத் தான் தளர்வின்றித் தொடர்ந்து முயல்பவர்கள் விதியையே மாற்றியமைத்து விடுகிறார்கள் என்று கூறினர். ஊழ் என்ற விதியில் நான் தலையிடாவிட்டால் அதுதான் என்னை இழுத்துக்கொண்டு போகும். நான் படிக்கிறேன் அல்லது வேறு ஒரு தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்கிறேன் என்றால் நான் என் கர்மாவை மாற்றுகிறேன் என்று அர்த்தம். இருந்த கர்மாவை நான் மாற்றியமைப்பதுதான் நான் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, புதிய விஷயங்களைக் கற்பது போன்றவை எல்லாம்.

என்னுடைய கர்மாவின் பிரதிபலிப்புத்தான் எனது அறிவாக இயங்குகின்றது. படித்துப் புதிய விஷயங்களைப் புரிந்து கொள்வதால் எனது கர்மாவை நான் மாற்றியமைக்கிறேன். அந்தப் புரிதலுக்கு ஊடாகத்தான் இனி வர இருக்கின்ற விஷயங்களை நான் அணுகுவேன். இந்த விதத்தில்தான் நீங்கள் இந்த சாகாக் கல்வியான வேதாந்தத்தை அறிவதன் மூலம் புதிய புரிதலுக்கு உங்களை ஆட்படுத்தியிருக்கிறீர்கள். இந்தப் புதிய புரிதலின் வழியாக இப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறீர்கள். அறிவுத் தெளிவுடன் அவற்றை அணுகித் தீர்க்கின்றபோது அவை புதுக் கர்மாவாக மாறிப் பதியப்படுகின்றன. பெற்ற அறிவின் அடிப்படையில் செயல்படும்போது அவை பரிணாம உயர்விற்கு வழிவகுக்கின்றன. தர்ம நெறிப்படி நடப்பதால் பிரச்சனைகளும் சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றன. இவற்றில் பல படிகள் இருக்கின்றன. பிரச்சனையை அறிந்து கொண்டு, சரியான விதத்தில் அதைப் புரிந்து கொண்டு அனுபவிப்பது இதில் ஒன்று. ஒன்றை அறிந்து கொண்டால் அதை அனுபவிக்கத் தான் வேண்டும். புரிந்து கொண்டு அனுபவிப்பது சாலச் சிறந்தது. இப்படி வருபவற்றைச் சரியாக அறிந்து, புரிந்து அனுபவிப்பதுதான் வாழ்க்கையின் பூரணத்திற்குக் கொண்டு செல்லும்.

எது பூரணம்? எது நிறைவு? ஒரு நாளில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நிறைவாக இருக்கிறேன் என்பதுதான் பூரணம் அல்லது நிறைவு. இந்த நிறைவு சாதாரண மனிதர்களுக்கு ஆட்களில், சம்பவங்களில், பொருட்களில் இருக்கின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் நிறைவடைந்தவர்களாக இருந்தால் தான் நாம் அனுபவிக்கின்ற அனைத்திலும் நமக்குத் திருப்தியை அடைய முடியும். இந்த ஆன்மீகக் கல்வியைப் பெறாத நிலையில் நீங்கள் வாழ்வதாக வைத்துக் கொள்ளுங்கள். பத்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சனை இப்போது மீண்டும் வருகிறது. இந்த அறிவைப் பெறாத நிலையில் அந்தப் பிரச்சனையைப் பத்து வருடங்களுக்கு முன்பு அணுகியதைப் போல்தான் தீர்ப்பீர்களா? அல்லது வித்தியாசமாகச் செயல்படுவீர்களா? உங்கள் அணுகு முறையில் அறிவுசார் நிலை இருக்குமா? உணர்ச்சிசார் நிலை இருக்குமா? நீங்கள் அறிவு சார்ந்த இனமா? உணர்ச்சி சார்ந்த இனமா? எதையும் சரியாக ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்காதவரை உணர்ச்சிதான் முன்னிற்கும்.

உணர்ச்சி சார்ந்த இனமாகத்தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். காலம், வயதில் முதிர்ச்சி, அனுபவம் எல்லாம் ஓர் அனுபவத்தைக் கொடுக்கும். அந்த அனுபவம் அறிவை அதிகரிக்கச் செய்யும். அதன்படி நடந்தால்தான் நீங்கள் அனுபவசாலியாகவும் அறிவார்ந்த விதத்திலும் செயல்படு வீர்கள். நான் கற்பிக்கின்ற இந்த ஆன்மீகக் கல்வி நீண்ட நெடுந்தூரம் செல்லக்கூடிய கல்வி. ஏனெனில் படைப்புக்கள் எல்லாம் ஒரு தொங்கலில் நிற்கின்றன. ஒன்றோடொன்று தொடர்புபட்டும் ஏற்கெனவே ஒழுங்குபடுத்தப்பட்டு;ம் இருக்கின்றன. இந்நிலையில் நான் தனிப்பட்ட முறையில் மேலே எழும்ப வேண்டுமென்றால் என்னை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும். நான் இதற்குத் தயாரா? என்று சிந்தியுங்கள். குடும்பம், சூழ்நிலை போன்றவை உங்களை முன்னேறிச் செல்ல விடாமல் தடுக்கும். ஆத்மாவின் தூண்டலால்தான் மனம் தன்னைப்பற்றி அறிய முற்படுகின்றது. அந்தத் தூண்டல் னுNயு ஐ மாற்றி அமைக்கின்றது. முன்பு னுNயு பழைய கர்மாவில் நின்று பிறந்த சூழ்நிலை, வளர்ந்த சூழ்நிலை என்று வாழ்ந்தது. புது கர்மாதான் மனதை மாற்றிச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகின்றது.

உங்களிடம் கொஞ்சமாவது பழைய நிகழ்ச்சி நிரல்கள் இன்னும் இருக்கின்றதா? அப்படி இருப்பதால்தான் ஆன்மீகக் கல்வியைத் தேடி முயன்ற செயல் உங்களில் ஏற்பட்டது. மன அலைகள் தற்போது னுNயு விலிருந்து, பக்டீரியா விலிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஒழுங்காக உடலின் எல்லா மண்டலங்களையும் மிகச்சரியாக வேலை செய்ய வைப்பதால்; உடல் நலம் சிறக்கின்றது. அடுத்து மன நலம் கெடாமல் இருக்க நற்பண்புகளையே தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஏழு ஆதார சக்கரங்களில் குண்டலினி உயர்ந்து இயங்கினால்தான் அந்த ஆதார சக்கரங்கள் சக்தியை வெளிப்படுத்திச் சரியாகச் செயல்பட வைக்கும்.

இரவில் மூன்று மணி நேரமாவது ஆழ்ந்த தூக்க நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஆழ்துயில் கொள்ளாதவர்களுக்கு நித்திரை செய்யத் தெரியாது என்று சொல்லலாம். ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்து எழுந்த பின்பு ஒரு சுகம் ஏற்படும். அப்படி அதை அனுபவித்தால்தான் ஆழ்ந்த தியானம் சித்திக்கும். இறை சக்தி இரவில் எட்டு மணி நேரம் உங்கள் உடலை சுவாசனத்தில் கிடத்தி, உள் உறுப்புக்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி, ஏராளமான வேலைகளை உள்ளுக்குள் நிகழ்த்தி உடலைப் புத்துணர்ச்சி பெற வைக்கின்றது. இந்த நிலையில் உலக விவகாரங்களை எல்லாம் தலைக்குள் ஏற்றி ஆழ்ந்த நித்திரை கொள்ளாமல் எழுந்தால் உடல் நலம் கெடும். ஒழுங்காக நித்திரை கொள்பவர்களுக்குத் தியானம் ஒழுங்காக அமையும்.
ஒழுங்காக நித்திரை கொண்டால் வாயு, பித்தம், கபம் மூன்றும் சம நிலையில் நிற்கும். வாயு அதிகரித்தால் புத்தி தடுமாறும். பித்தம் கூடினால் படபடப்பு அதிகமாகும். மூன்றும் ஏறிவிட்டதென்றால் அடி, தடி என்ற அளவிற்குப் போய்விடும். இதையெல்லாம் சமப்படுத்தாமல் எவ்வளவு அறிவைப் பெற்றாலும் பயனில்லை. அடிப்படை சமமாக இருக்க வேண்டும். உணவில் மிகக் கட்டுப்பாடாக ஆறு சுவைகளுமே அளவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று காரணிகளும்தான் (வாயு, பித்தம், கபம்) நித்திரையைத் தீர்மானிக்கின்றன. நித்திரை ஆழ்நித்திரையைத் தீர்மானிக் கின்றது. ஆழ்நித்திரை பழகிவிட்டால் உங்களுக்குப் பிரச்சனைகள் குறைவு என்று பொருள். பிரச்சனைகள் ஏராளம் வெளியில் இருந்தாலும் அதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்பது உங்களது ஆழ்நித்திரையில் இருந்து புலப்படும்.

நீ சம நிலையிலேயே இருக்கிறாய் என்பதற்கு அடையாளம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதுதான். மகாபாரதத்தில் கிருஷ்ணரின் தன்மையைக் கவனித்தால் இது தெரியும். அவருக்குப் பிறந்த அன்றிலிருந்தே பிரச்சனை. பாரதப்போர் முடிந்த பிறகும் ஏராளமான பிரச்சனைகள். எல்லாப் பிரச்சனைகளுக்கிடையேயும் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் எதையுமே தனக்குள் எடுத்துக் குழம்பவில்லை. தனது சக்தியையும் பயன்படுத்த வில்லை. தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பது மட்டும்தான் அவரது நோக்கம்.

இறைத் தன்மை சடப்பொருளாகி, சடப்பொருள் பிறகு ஆற்றலாகி, அந்த ஆற்றல் இறைத் தன்மையாகி அதுதான் பிரம்மமாகின்றது. சடப்பொருளிலிருந்து வந்ததுதான் ஆற்றல். சடப்பொருள் சித்தத்திலிருந்து வந்தது. சித்தம், ஆற்றல் இவற்றிற்குள் எல்லா அழுக்குகளும் கரைந்து போகின்றன. சித்தம் சுத்தமானால் பிறகு அதுதான் பிரம்மம். பிரம்மம் என்னும் ஒரே சக்திதான் பல்வேறு சக்திகளாகப் பிரிந்து படைப்புகளாகிப் பல்வேறு தொழில்களைப் புரிகின்றன. இருப்பது ஒரே பிரம்மம். அதனை இந்து தர்மம் செயல்படும் விதத்தை வைத்து படைத்தல், காத்தல், அழித்தல் என ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு தெய்வத்தை உருவாக்கி அவற்றின்கீழ் பல்வேறு ஆற்றல்கள், இயற்கை நியதிகள் மூலம் செயல்படுவதை வகைப்படுத்தி வைத்துள்ளது. செயல்படும் விதங்கள் வேறுவேறு என்றாலும் ஒரே ஆற்றல் தான் இப்படி வகைவகையாக மாறிச் செயல்படுகின்றது.

இதன்மூலம் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட ஆத்மா என்ற பிரம்மசக்தி படைப்பிற்கு என்று வித்தியாசமான சக்தியாக இருந்தாலும், அழிவிற்கு என்று வித்தியாசமான சக்தியாக இருந்தாலும் எல்லா சக்தியும் ஒன்றேதான். ஆனால் செயல்படு கின்றவிதம்தான் வேறுபடுகின்றது. மஹா சிவராத்திரி பண்டிகை மிக விமரிசையாக அபிஷேகம், ஆராதனை, சடங்கு சம்பிரதாயங்கள் எனப் பலவிதமான கோலாகலங்களுடன் கொண்டாடப்பட்டாலும் அதன் மிக எளிமையான வழிபாடு என்பது அந்த நாள் முழுவதும் வேறுநினைவின்றி ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டிருந்தாலே போதும். உங்களால் மிகக் குறைந்த அளவிலேயே மனதை இயங்கச் செய்ய முடியுமென்றால் எல்லா நாட்களுமே உங்களுக்கு சிவராத்திரிதான். மனம் அடங்கியிருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நான் தூண்டுகின்ற அடுத்த சிந்தனை உனது உள்ள ஆற்றலைப் பயன்படுத்திப் பல்வேறு திட்டங்களைப் போட்டு அதைச் செயற்படுத்தி அதில் வருகிற திருப்தி சிறந்ததா? ஒன்றுமே யோசிக்காமல், திட்டம் போடாமல் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பது சிறந்ததா? இரண்டில் எது சிறந்தது என்றால் வருவதை அவதானிப்பது தான் சிறந்தது என்று சொல்வீர்கள். அப்படியென்றால் உங்களது ஆளுமை என்னாவது? பிரம்மத்தைப் புரிந்து கொண்டு அதை நிறை வேற்றினால் என்ன? அதனால் சமுதாயம் பலனடையுமே? அப்படிச்செய்யக் கூடாதா?

எதற்காக நான் இப்படியெல்லாம் கேட்கிறேன் என்றால் inநெச ளநியசயவழைn எனப்படும் நான், அவன் என்ற உள்ளார்ந்த தனித்துவம் உங்களுக்கு வந்துவிட்டதா என்று அறியத்தான். உள்ளுக்குள் ஒன்று இருக்கிறது. நீங்கள் வெளியில் வேறு ஒன்றாகச் சொல்கிறீர்கள். இரண்டும் ஒன்றாகி விட்டால் என்ன? சோம்பேறிகளை உருவாக்கினார் என்று சொல்லாமல் ஆக்க பூர்வமான மனிதர்களை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லக்கூடிய விதத்தில் ஏன் நீங்கள் செயல்படக்கூடாது? சேவையென்று செய்யப்போனால் அங்கு ஈகோ வந்துவிடும். ஊழல் வரப்பார்க்கும். இவை எழாமல் என்னால் செயல்பட முடியாதா? இறையருளை வேண்டி அதனுடைய உதவியுடன் நீயும் நானும் என்று அதனிடம் நம்மை ஒப்படைத்துச் செயல்பட்டால் தீமைகள் குறுக்கிடாது நற்பயன் விளையும்.

கர்மா இருக்கும்வரை நாம் என்னதான் நமது செயல்கள் அனைத்தையும் அவனுக்கு அர்ப்பணம் செய்து தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டித் துவங்கினாலும் அந்தக் கர்மா நாம் எதிர்பாராத பலன்களையும் அளிக்கக்கூடும். ஆனால் எதிர்மறைக் குணங்கள் அவ்வளவையும் நீக்கிய நிலையில் இப்போது நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய நற்செயல்களைச் செய்யப் பரிட்சார்த்தமாகப் பயிற்சி செய்து பார்க்கலாம். ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று சோம்பேறித் தனமாக இருப்பதைவிட்டு ஆக்க பூர்வமான செயல்களுக்குத் திட்டம்போட்டு அவற்றை நிறைவேற்றலாம்.

முயற்சி என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அது என் கர்மாவிற்கு ஏற்ற பலனைத் தருகிறது. நான் மாற்றி அமைத்த கர்மாவின்படி எனது முயற்சியைத் திருப்பிச் செய்ய முடியாதா? எந்த அளவில் எனக்கு இறையருள் இருக்கிறது? எந்த அளவில் ஆன்மீக முயற்சி என்னில் காணப்படுகிறது? எனக்குத் தேவை என்றில்லாமல் யாருக்காவது நன்மை கிடைக்கட்டுமே என்று செயல்படலாமே. நமக்கென்று இல்லாமல் நாலு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எதுவும் செய்யலாம். ஒரு வருமானம் தரக்கூடிய தொழில் ஏதேனும் செய்து ஒரு சிலருக்கு வேலை வாய்ப்புத் தரலாம். தன்னை ஒரு கருவியாகக் கருதிக்கொண்டு ஒரு எளிய சேவையாளனாக, நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும். ஆன்மீகவாதியாக இந்த சமுதாயத்தில் இணைந்துதானே நீங்கள் பயிற்சி எடுக்க வேண்டும்.

நாம் எல்லோருமே ஒன்றால் வழிகாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்படும் உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாமே எல்லோருக்கும் பொது. இந்த அடிப்படை விளங்கிவிட்டால் எனக்கு வேறாக யாருமே இருக்கமாட்டார்கள். அனைவருமே எனது சகோதரர்கள் என்ற மனநிலை எனக்கு ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் இந்த எனது மனநிலை அவர்களுக்கும் இருக்க வேண்டும் என நான் எண்ணினால் அது தவறு. ஏனெனில் அவர்கள் தங்களது பரிணாமத்தில் இன்னும் உயர்வடையவில்லை. நான் பரிணாமத்தில் உயர்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் எல்லாம் என் குடும்பம் என்ற மனோநிலை எனக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கு எதிராக சமுதாயம் எந்த நிலையில் நிற்கிறதோ அதற்கேற்றபடி எனக்குப் பூவும் போடும்; கல்லும் எறியும். நான் இப்போது சமுதாயப் போக்கில் போகவில்லை. அதைமீறி வளர்கின்றேன் என்னும்போது அனைத்தையும் சமநிலையில் இருந்து ஏற்க வேண்டும்.

என்னுடைய கர்மாவாலும் எனது அறிவாலும் ஏற்பட்ட பிரச்சனைகள்தான் எனது பிரச்சனைகளாக இருக்கின்றன. அதைமீறி நான் எனது மனதிலுள்ள எதிரான பதிவுகளையெல்லாம் அறிவால் விரட்டிவிட்டேன். நான் இப்போது நடுநிலையான தன்மைக்குப் போய்க்கொண்டிருக்கின்றேன். இந்நிலையில் இறையருளை நிலைநாட்டுவதற்கு ஒளிச் சாட்சியாய் நான் ஒரு திட்டத்தைப் போட்டு அதை நிறைவேற்றினால் என்ன? அதற்குத் தேவை சமுதாயத்தில் இருக்கிறது. எனது குடும்பத்தினர் எனக்கு இன்பமளிப்பதற்காக இருந்தாலும் அவர்கள் இந்த சமுதாயத்தில் ஓர் அங்கம். அவர்களிலும் ஆத்மா இருக்கிறது. அவர்களுக்குத் தேவை யானவற்றை நான் நிறைவேற்றிவிட்டேனா? என்னைச் சேர்ந்தவர்களான நலிவடைந்த உறவினருக்கு நான் ஏதாவது உதவி செய்திருக்கிறேனா? இந்த நாடு என்னை சர்வதேசக் குடிமகனாக ஆக்கியிருக்கிறது. இந்த நாட்டிற்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம். உண்மையான சேவைகள் செய்திருக்கிறேனா? என்றெல்லாம் இதுவரை அறிந்து வைத்திருக்கின்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் தியானிக்கிறோம். இங்கு வேறு ஒரு கருத்தை எடுத்துக் கொள்வோம். சிறு குழந்தையாக இருந்தபோது பல சூழ்நிலைகள் இன்பத்தையும் துன்பத்தையும் கொடுத்தன. அவை இப்போது இன்பத்தையோ துன்பத்தையோ கொடுப்பதில்லை. அதே சூழ்நிலைகள் இப்போது மீண்டும் வந்தாலும் அவை அதேவிதமான இன்ப துன்பங்களைக் கொடுப்பதில்லை. இப்போதுள்ள இன்ப துன்ப சூழ்நிலைகள் பலகாலத்திற்குப் பிறகு மீண்டும் வரலாம். அவை மீண்டும் அப்படி வந்தாலும் துன்பத்தைக் கொடுப்பதில்லை. துயரத்தைக் கொடுக்காத சூழ்நிலையை, சில காலத்திற்குப் பிறகு வர இருக்கின்ற சூழ்நிலையை இப்போதே அனுபவிக் கலாம். அதாவது இன்பத்தையும் துன்பத்தையும் முன்பு அனுபவித்தோம்; இப்போதும் அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றின் தன்மை வேறுவேறாக இருக்கும். இந்த இன்பமும் துன்பமும் எதிர்காலத்திலும் வரக்கூடும். அந்தத் துயரத்தை இப்போதே அனுபவிப்போம்.

இயற்கையின் நியதிப்படி இன்ப துன்பங்கள் மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். சிறுவயதில் அவற்றை அனுபவித்தோம். இப்போதும் அந்த இன்ப துன்பங்களை வேறுமாதிரி அனுபவிக்கத்தான் செய்கிறோம். இனியும் அவை வரும். அவற்றையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அப்படி வரக்கூடிய துயரத்தை இப்போதே மனோரிதியாகச் சிந்தித்து அனுபவித்து விடுவது சிறந்தது. மனப்பக்குவத்திற்கான பயிற்சி இது. இன்ப துன்ப சூழ்நிலை சில காலத்திற்குப் பிறகு இருந்தாலும் அது துக்கத்தைக் கொடுப்பதில்லை. துயரத்தைக் கொடுக்காத அந்தச் சூழ்நிலையை இப்போதே அனுபவிக்கலாம். இக்கருத்தைத் தியானிப்போம். எனக்குத் துயரமே இல்லாத நிலைதான் இனி இருக்க வேண்டும். எதிர்காலத்தில் துன்பமே இல்லாத சூழ்நிலைதான் எனக்கு இன்றிலிருந்து என்ற கருத்தைத் திரும்பத் திரும்பத் தியானித்தால் உளவியல் ரிதியாக அந்தத் துன்பம் வராது. எதிர்காலத்தில் எனக்குத் துன்பம் இல்லை என்ற பயிற்சியை மனதிற்குத் திரும்பத் திரும்ப அளிக்கும்போது மனம் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டால் மாற்றி அமைக்கின்ற பதிவின்படி ஆத்மாவின் இயக்கத்தால் எதிர்காலத்தில் துன்பம் வராது.

நாம் செய்து வருகின்ற தியானத்தில் கற்பனைகளுக்கும் இடமுண்டு. இக்கற்பனைகள் ஒருவிதமான பாவம். இப்போது ஒரு கற்பனையை மேற்கொள்வோம். நாம் ஒரு திருமண வீட்டில் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள், ஆரவாரங்கள், மங்களகரமான ஓசைகள், அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி போன்றவை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. அவற்றை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கலந்து கொள்ளவில்லை; கவனித்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் முகமலர்ச்சி யுடன் பேசி மகிழ்ந்திருக்கின்றனர்.

இப்போது மற்றொரு காட்சியைப் பார்ப்போம். மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் ஓர் அறையில் நம் உறவினர் ஒருவர் நோய்ப்படுக்கையில் அவதிப்படுகிறார். சில நாட்கள்தான் இருக்கப் போகிறார். சுற்றியிருப்பவர்கள் சாவைப்; பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரு சூழ்நிலைகளையும் எண்ணிப்பார்ப்போம். ஒன்று மகிழ்ச்சி; அடுத்தது சோகம். நான் இரண்டையும் கவனிக்கிறேன். திருமண மண்டபம், நோயாளியின் அறை என்று மாறிமாறி; பார்க்கிறேன். இதில் நான் வேடிக்கை பார்ப்பவனாகவோ உறுப்பினராகவோ இருக்கலாம். சாட்சியாக இருக்கலாம். நம்மைச் சாட்சியாக வைத்திருப்பது வேதாந்த ஞானம். பங்கு பெற்றிருப்பது சம்சாரம். சூழ்நிலை வசப்பட்டிருப்பது சம்சாரம். சாட்சியாக இருப்பது மோட்சநிலை.

இன்பத்தைக் கொடுக்கும் சூழ்நிலை, துயரத்தைக் கொடுக்கும் சூழ்நிலை என்று இரண்டு வேறுபட்ட சூழ்நிலைகளைக் கற்பனை செய்து பார்த்தோம். ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளது. அனைவரும் மகிழ்கின்றனர். இன்னோரிடத்தில் இளம் வயதினன் ஒருவன் மரணித்து (இறந்து) விட்டான். மகிழும் கூட்டத்திலும், குமுறும் கூட்டத்திலும் நாம் இல்லை. வேடிக்கை பார்க்கின்ற நான் இன்ப துன்பத்தை அனுபவிப் பவனும் இல்லை. அறிபவனாக இருக்கிறேன். அறிபவன் மோட்ச நிலை. இப்படி இன்ப துன்பங்களை அனுபவிப்பவன், சம்சாரி. நம்மைச் சுற்றிச் சூழ்நிலை மாறிக்கொண்டு வருகின்றன. தொடர்ந்து நிற்பதில்லை. தொடர்ந்து நிற்பவன் நான்; மாறாதவன் நான். இந்த நானைச் சூழ்நிலையிலிருந்து பிரிப்பதே நமது குறிக்கோள். நான் அனுபவிப்பவனல்ல; நான் இன்ப துன்ப நிலைகளை அறிபவன். அனுபவிப்பவை உடலும் மனமும்; அறிபவன் நான். இந்த உண்மையை அறிவது ஞானம்.

வேதாந்தம் சொல்கின்ற இந்தச் சூழ்நிலைகளில் உங்களை உங்களால் நிறுத்திப் பார்க்க முடிகிறதா? அந்நிலைகளில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? உடைந்து போனீர்களா? உறுதியுடன் இருந்தீர்களா? என்றெல்லாம் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் ஒரு நாளில் எப்போதாவது எந்தவித நினைவுகளுமே இல்லாத ஒருநிலையில் இருந்திருக்கிறீர்களா? இரவு வேளைகளில் கனவுகளில்லாத ஆழ்நிலைத் தூக்கத்தை அனுபவித் திருக்கிறீர்களா? ‘சித்த விருத்தி நிரோதஹ’ என்று பதஞ்சலி முனிவர் சொல்லியிருக்கிறார். சித்தத்தை வளர்க்காமல், விருத்தி செய்யாமல், எண்ணமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். எண்ணமென்பது நேற்றிலிருந்தும் வரும், நாளை என்பதிலிருந்தும் வரும், வேறு எங்கிருந்தும்கூட வரும். கர்மாவின் தூண்டுதலால் அப்படிப்பட்ட எண்ணங்கள் எழும். ஆழ்ந்த நித்திரையில் சில வேளைகளில் சமாதி நிலையை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். விழிப்பு நிலையில் நினைவுமில்லை; எண்ணமுமில்லை என்ற சமாதி நிலையை சற்றேனும் அனுபவித்திருக்கிறீர்களா?

இறைவனை அணுகுவதென்பது சித்தத்தைச சுத்தம் செய்த பின்பு தான் முடியும். சித்தம் கர்மாவால் நிறைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. எனவே முதலில் சித்தத்தை சுத்தப் படுத்த வேண்டும். அதன்பிறகு சி;த்தத்தில் தித்திக்கும் தேனா கிய அது வந்துவிடும். அதற்கு ஞானம் உதவி செய்யும். சித்தம் என்பது ஞாபகப் பெட்டகம். சித்தத்தில் இருந்துதான் எண்ணம் வருகிறது. அது வெளிப்பட்டுக்கொண்டே இல்லாமல், சித்தத்தில் கலங்காமல் இருக்கிறதா என்று கவனியுங்கள். திட்டங்கள், அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்ற அலைபாய்தல்கள் இல்லாமல் அமைதி நிலையில் சித்தம் தெளிவாக இருக்கிறதா என்று உற்று நோக்குங்கள். அதாவது சித்தத்தால் திட்டம் போட்டுப் போட்டுக் குழம்பாமல் ஞான பலத்தால் அனைத்தையும் கொண்டு செல்லக்கூடிய தன்மை உங்களுக்கு ஏற்பட்டு விட்டதா?

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் அல்லது உங்களுக்குத் தேவையானது நடக்க வேண்டுமென்றால் முதலில் நீங்கள் திட்டம் போடுவதை நிறுத்த வேண்டும். ஒன்றும் யோசிக்கக் கூடாது. நான் திட்டம் போட்டு அதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன் என்றும் சொல்லக் கூடாது. சித்தம் உண்டு அதில் திட்டங்களில்லை; இறை சக்திதான் நிரம்பி இருக்கிறது என்று இருக்க வேண்டும். சித்தம் வெறுமையாக எந்தவித எண்ணமோ, கருத்தோ இல்லாமல் இருக்க வேண்டும். சமுதாயம் சொன்னது, மரபு அணு வழியாக வந்தது, இது நல்ல விஷயம். இது நான் பின்பற்றி வந்தது என்றெல்லாம் எண்ணச் சேமிப்புக்கள் என்னில் இன்னும் இருக்கிறதா அல்லது அவையெல்லாம் நீங்கிய நிலையில் சித்தம் வெறுமையாகி விட்டதா என்று ஆராய்ந்து பாருங்கள்.

கர்மாவின் எந்தவிதப் பிரதிபலிப்பும் எங்களில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நிகழ்காலத்திலேயே இருக்கப் பழகியவர்களுக்கு சித்தத்தில் எந்தவிதத் திட்டங்களும் இருக்க முடியாது. உங்களது சித்தத்தில் உள்ளவை நிறை வேற்றப்பட்டால் அவற்றிற்கு எதிர் விளைவு உண்டு. சித்தம் முழுமையான ஆற்றல் நிறைந்த ஞாபகப் பெட்டகம். அதில் உங்களது கர்ம மனதால் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று எதையெதையோ திட்டங்களாகப் போட்டு வைத்திருப்போம். ஆனால் அப்படிப் போட்டவுடன் தூய்மையான அந்த சித்தம் அழுக்காகிவிடும். ஞாபகத்திலே கூட எந்தத் திட்டமும் பதிக்கப்படக்கூடாது என்று நான் சொல்வேன். சித்தத்தைச் சுத்தப்படுத்துங்கள்.

சித்தத்தை விருத்தி செய்யாதே. ஏனெனில் கர்ம வழிகாட்டலில் தான் நாம் வந்திருக்கிறோம். அதில் மேலும் கர்மாவைக்கூட்ட வேண்டாம் என்பதே இதன் பொருள். ஏனெனில் உங்கள் கர்மாவின் வழியில்தான் நீங்கள் திட்டங்களைத் தீட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் பாதை ஆன்மீகத்திற்குத் திரும்பியபிறகு கர்மவழிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கர்மவழிச் செல்லாமல் நின்றாலே பிறகு அங்கு நீயாகிய ஜீவன் இல்லை. அவன் மட்டும்தான் உன்னில் இருந்து செயல்படுகிறான். இந்நிலையில் சித்தம் அடங்கி சிவம் முழு ஆற்றலுடன் இயங்க வேண்டும்.

இப்போது நான் தங்கியிருப்பது வெறுமையான சித்தத்திலேயே. அங்கு உள்ளம் இல்லை. வெறுமையாகிவிட்ட அந்த சித்தத்தில் தொடர்ந்து ஒளி பிரகாசித்துக் கொண்டிருப் பதற்குத்தான் தியானமும் சமாதியும். தியானத்தின் மூலம் நான் மனதைப்பார்த்தேன். அதில் ஏராளமான வக்கிரங்கள் கிடந்தன. அந்த வக்கிரங்களை ஒவ்வொன்றாக எடுத்தேன். என்னுடைய சித்தத்தில் எனது பிறப்பு, வளர்ப்பு, என் சாதனைகள், என் அவமானங்கள் இவையெல்லாம் இருந்தன. இப்போது கொஞ்சம் கொஞ்சம் ஏதும் இருக்கலாம்; இல்லா மலும் போயிருக்கலாம். அது ஞாபகமறதியா? என்னால் விலக்கப்பட்டதா? எந்தச் சூழ்நிலையிலும் எனது சித்தம் அழுக்குப் படாது என்று உறுதியாகச் சொல்ல உங்களால் முடியுமா? உள்ளே கிடந்த சின்னச் சின்னத் துண்டு, துணுக்குகளை எல்லாம் பொறுக்கித் தூக்கி எறிந்துவிட வேண்டும். இந்த ஞாபகப் பெட்டகத்திலிருந்துதான் ஒவ்வொரு கர்மாவும் எண்ணங்களாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆகையால் சித்தம் கலங்காத நிலையில் இனி நான் இருக்க வேண்டும். அதற்கு எனது கர்ம மனதால் சேர்க்கப்பட்ட அனைத்தையும் நான் மறக்க வேண்டும். சித்தத்தால் தான் சிவனை இழுக்க முடியும்.

சித்தம் தெளிந்திருந்தால் நாள்தோறும் நீங்கள் ஆழ்ந்த நித்திரையை அனுபவிக்க முடியும். எண்ணங்களும் கனவுகளும் இல்லாத உறக்க நிலை அது. எனது நினைவுகள்தான் ஆழ் உறக்கத்திற்குப் போக விடாமல் தடுக்கின்றன. ஆழ்நிலைத் துயிலை அனுபவித்தால்தான் சமாதி நிலை ஏற்படும். கர்மா இருந்தால் ஆழ்துயில் வராது. உள்ளத்தில் வாங்கிய அல வாங்குக் குத்துத் தாக்குதல்கள் மறைய நீண்டகாலம் எடுக்கும். ஆழ்ந்த தியானம்தான் இதற்கு உதவி செய்ய முடியும். எண்ணமில்லாத நிலையில் இருக்கப் பழகினால் அது இனிமையாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் தன்னை இழக்கக் கூடாது. சித்தமென்பது மனதோடு, உணர்வோடு சார்ந்த ஒரு பெட்டகம். என்னோடு நான் ஒடுங்குதல் என்பது தான் ‘சித்த விருத்தி நிரோதஹா’ என்னும் சொற்றொடரின் உட்பொருள்.

ஆதிக்குச் சமமான நிலையை சமாதி என்று சொல்கின்றோம். அன்றாட அலுவல்கள் பற்றிய தகவல்களை சித்தத்தில் அடு;க்கக்கூடாது. எவர் ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக் கிறாரோ அவருக்குச் சமாதி சித்திக்கும் என்பது உண்மை. ஆழ்ந்த தூக்கத்தை அடைய விடாமற் செய்பவை, நினைவு களும் காரணங்களும். நாம் நம்மைப் புத்திசாலிகளாக நினைத்திருக்கிறோம். ஆனால் எத்தனை இடங்களில் தடுமாறி இருக்கிறோம், எத்தனை விஷயங்களைக் கோட்டை விட்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தால்தான் தெரியும். நீ உன்னை அவனாக நினைப்பதற்கு முதல் நீ செய்ய வேண்டியது உனது சித்தத்தைச் சுத்தப்படுத்துதல். எதுவுமே எனது திட்டமாக இருக்கக்கூடாது. நான் விரும்புவதை விடக் கூடுதலாகத்தந்தால் என்ன செய்வது? வாழ்க்கையில் எதையெதையோ பெற்று பெற்று செத்துப் போகிறோம். நல்லதைப் பெற்றால் அதிர்ஷ்டக்காரன் என்கிறார்கள். கெட்டவை வந்தால் துரதிர்ஷ்டம் பிடித்தவன் என்கின்றனர். எல்லாமே அவனுடைய கணக்கே தவிர இதில் என் விருப்பமென்ன? நான் பெற்ற வெற்றிகள் எனக்குத் தேவையில்லாத குணங்களையே தந்தன.

ஆன்மீகத்திற்குத் தேவையான அமைதி, நிம்மதி போன்ற நல்ல குணங்கள் எல்லாம் நம்மிடம் இருந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் வரும். ஒவ்வொரு மனிதனும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்தலாம். இனி உங்களது சித்தம் அங்குமிங்கும் அலைபாய்ந்து விரிந்து விரிந்து போகக்கூடாது. சித்தத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் சமாதிநிலையை அடையலாம். சமாதி நிலை என்பது கர்மாவைத் துப்புரவாக என்னிலிருந்து எடுத்து விட்டேன் என்ற வெற்றியின் அடையாளம். ஆனால் இன்னும் எல்லோரிலும் கர்மா இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எந்தச் சிதறலும் இல்லையென்றால் என்னில் கர்மா இல்லை என்று பொருள்.

நாம் படித்து வருகின்ற குணங்களை, தெய்வீகப் பண்புகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சிந்திக்க வேண்டும். நற்பண்புகள் எவை என அறிவதனால் அவற்றை அடைய முடியாது. முயற்சியுடன் பின்பற்றுவதனால், பயிற்சி செய்வதனால்தான் அடைய முடியும். பயிற்சி செய்யும்போது சிலவேளை தோல்வி யில் விழுந்து விடுவதைக் காணலாம். இது இயற்கை. இருந்தாலும் மனம் தளராது பயிற்சி செய்ய வேண்டும். இம்மாதிரி அவரவர் விரும்பிய பண்பை எடுத்துத் தியானிப்போம்.

தியானம் பலவகைப்படும். முதலில் நமது உடல், மனம், புத்தி முதலியவற்றை அமைதிப்படுத்தினோம். அமைதிப்படுத்தும் தியானத்தைப் பயிற்சி செய்தோம். (சுநடயஒநன அநனவையவழைn) மனதை அமைதிப்படுத்த ஜபத்தைப் பயிற்சி செய்தோம் அடுத்து நற்பண்புகளைப் பயிற்சி செய்தோம். அடுத்த தியானம் நிதித்யாசனம். இதுவரை செய்தது உபாசனம். நிதித்யாசனம் என்றால் அறிவுக்கு முன் செய்வது; அறிவுக்குப் பின் செய்வது. (ஏநனயவெiஉ ஆநனவையவழைnஇ ஊழவெநஅpடயவழைn) அறிவை அடைந்ததற்குப்பின் செய்யும் தியானம் நிதித்யாசனம். இதில் தியானப்பொருள் நாம் பெற்ற ஞானம்.

பகவத்கீதை உபநிஷத்துகளிலிருந்து எந்த அறிவைப் பெற்றோமோ அதுவே ஞானத்தியானம் (கற்றதை மீண்டும் மீண்டும் மனதில் நிறுத்திச் சிந்தித்தல்) ஞானத்தைத் தியானமாக்கலாம். (ஞான நிஷ்டா) அறிவில் நிலைபெறுதல். ஞானத்தின் துணைகொண்டு நிலைபெறும் அறிவிற்கும் வாழ்க் கைக்கும் உள்ள இடைவெளியை நீக்குதல் நிதித்யாசனம். சிரவணம் (கேட்டல்) என்ற சாதனையில் எந்த அறிவைப் பெற்றோமோ அதை மீண்டும் கொண்டு வந்து அசை போடுவது இத்தியானம். பலன், ஞான நிஷ்டை, மோட்சம்.

தியானம் பலவகைப்படும். நாம் படிப்படியாகப் பலவிதமாகத் தியானப் பயிற்சியை மேற்கொண்டோம். இறுதியாக நிதித்யா சனம் என்ற தியானத்திற்கு வருகிறோம். உண்மையைப் பின்பற்றியதற்கு அதாவது பரமாத்மாவைப் பின்பற்றியதற்கு முன், பின் செய்யும் தியானம் இது. மேற்சொன்ன எதைக் கேட்கிறோமோ, எந்த அறிவை சிரவணம் – மனனம் மூலம் அறிந்தோமோ அந்த ஞானமே தியானத்திற்கு மெய்ப்பொருள். சிரவணம் என்பது காதுகளால் பிரம்மத்தைப் பற்றிக் கேட்டல். மனனம் என்பது கேட்டவற்றை மனப்பாடம் செய்தல், ஞானத்தை அடைந்தபோதிலும் விபரித பாவனைகளைப் பழக்க தோஷத்தால் காண்கிறோம். பழக்க தோஷத்தினால் மீண்டும் மீண்டும் பழையமுறை வாழ்க்கைக்கே போய்ப் போய்த் திரும்புகிறோம். அறிந்தும் பலவீனமாகி விடுகிறோம். அப்படி இல்லாமல் ஞானத்திற்குப் பலத்தைக் கொடுப்பது நாம் மேற்கொள்ளும் தியானம்.

இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இரண்டு தத்துவங்களைத் தியானிக்கப்போகிறோம். ஒன்று ஆத்ம சொரூபம் (இறையாற்றல்), இரண்டாவது அநாத்ம சொரூபம் (ஆற்றல் இல்லாத உருவம்). இதைப் பற்றிய அறிவை அடைந்துள்ளோம். அடைந்த அறிவை மீண்டும் மனதிற்குக் கொண்டு வந்து பழகுதல் இப்போது செய்யும் தியானம். ஆத்மாவின், அநாத்மாவின் தன்மைதான் தியான விஷயம். ஆத்மா அறிவு சொரூபம். அநாத்மா என்பது உடல்களும,; பார்த்து அனுபவிக்கின்ற உலகமும். ஆத்மா சைதன்ய, ஞான சொரூபம். அநாத்மா நாம் அனுபவிக்கின்ற உலகம்.

நாம் எடுத்துக் கொண்ட தியானத்தில் இரண்டு விஷயங்க ளைத் தியானிக்க இருக்கின்றோம். இவ்விரண்டும் வேதாந்தத் தின் மையக் கருத்து. பிரம்மம் சத்யம்; ஜகம் மித்யா. பிரம்மம்தான் உண்மை; உலகம் பொய்.

நான் ஆத்ம சொரூபமாய் இருப்பவன்; சத்தியமானவன். உடல், உலகம் வெறும் தோற்றம். சாரமற்றது; உண்மை யல்ல. இந்த அறிவை சாத்திரங்களில் இருந்து பெற்றபின் இந்த அறிவிலேயே நிலைத்து இருக்க முடியாததனால் நாம் நிதித்யாசனத்தில் நிலைபெறுகிறோம். இதில் நியதிகள் இல்லை. காலம், இடம் இல்லை. நியதியைப் பின்பற்று வதிலும் தவறில்லை. இவ்விதம் நிதித்யாசனம் மேற்கொள்ள வேண்டும். அதாவது காலம் இடம் பார்க்காமல் ஆத்மா சத்யம் என்பதை நாம் உணர்ந்து பார்க்கிறபோது இந்த உலகமே சத்தியமாகத் தெரியும். சத்தியமற்றவை எல்லாம் சத்தியமாகப் பிரம்ம வடிவாகத் தெரியும். இந்த உண்மையை இடைவிடாமல் தியானித்தால் மனதில் அப்படியே பதியும்.

நாம் அனுபவிக்கின்ற இந்த உலகம் என்னைப் பண்படுத்து வதற்கான சாதனமே தவிர துன்புறுத்த அல்ல. நாம் அனுபவிக்கும் சூழ்நிலை, தட்ப வெப்ப நிலை, மக்கள் போன்றவை என்னைப் பண்படுத்துவதால் துயரம் ஒரு பகுதி யாக இருப்பினும் அல்லது இவை சில இன்பங்களைக் கொடுத்தாலும் இந்த உலகம் இன்பத்திற்காக அல்ல. இவ்வுலகம் என்னைப் பக்குவப்படுத்த ஒரு சாதனம். புண்படுத்தவோ துயரப்படுத்தவோ இவ்வுலகம் இல்லை. இதுவரை நாம் இதைப் பிழையாகப் புரிந்து வைத்திருந்தோம். நாம் இந்த உலகத்தில் பெறுகின்ற அனுபவப் பாடங்கள் அவை. இன்பமோ துன்பமோ நாம் பண்படுவதற்கே.

நாம் இப்போது செய்துவரும் தியானத்தில் நாம் பெற்ற அறிவை எடுத்துக கொண்டு அந்த அறிவிலேயே அந்த ஞானத்தை மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்பொழுது அந்த அறிவு நிலை பெறுகிறது. நாம் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருளைப் புகட்டுவதே வேதாந்தம். ஆத்ம ஆற்றலும் சடப்பொருளான உடலும் ஒன்று சேர்ந்ததே நாம் ஆகும். அறிவு சொரூபமான ஆத்மா, சடரூபமான உலகம். அநாத்மாவில் அடங்கும் ஆத்மாவையும் ஆத்;மா இல்லாத அநாத்மாவைப் பற்றியும் சிந்திப்பதே இந்தத் தியானம். முதலில் அநாத்மா.

தியானம் செய்கின்ற முறை இவ்விதம் அமைய வேண்டும். நான் பார்க்கின்ற மனிதர்கள், சந்திக்கின்ற சூழ்நிலைகள், எனக்குள்ள சங்கடங்கள், உள் மகிழ்ச்சிச் சூழ்நிலைகள், துயரத்தைத் தரும் சூழ்நிலைகள், எனது பொறுப்புக்கள் அனைத்தும் சில வேளைகளில் மாறிப்போய் விடுகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் மாற்றத்தை அடையும். சில காலத்திற்குப்பின் நான் அறிகின்ற சூழ்நிலைகள் அனைத்தும் வேறாக இருக்கப்போகிறது. இக்கருத்தைத் தியானித்துக் கொண்டு அமர்ந்திருப்போம். அவை தற்காலிகமானவை என்றும் சிந்திக்க வேண்டு;ம்.

நாம் அனுபவிக்கின்ற இன்பம், துன்பம், சூழ்நிலைகள் எல்லாமே ஒருகாலகட்டத்தில் தலைகீழாக மாறும். ஆகை யால் என்ன நடந்தாலும் அதற்காகத் தலையை உடைத்துக் கொள்ளக் கூடாது. எத்தனையோ சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன.

ஞானம் பெறுவதற்குமுன் அநாத்மா உங்களை இழுத்துக் கொண்டு சென்றது. இப்போது ஆத்மாதான் உங்களை இழுக்க வேண்டும். அநாத்மா இழுத்தபோது உங்களுக்கு அனுபவங்கள் அதிகம். அவற்றில் சிக்கி நீங்கள் அல்லல்பட்டீர்கள். என்னை ஆத்மாவை அறிகின்ற சூழ்நிலைக்கு அனுப்பி வைத்தது அநாத்மா என்று சொன்னால் மிகையாகாது. இந்த உலகம் மற்றும் நான் உண்மையென்று நம்பியவை எல்லாம் அநாத்மா. வாழ்க்கையின் ஒரு கட்டத்திலாவது ஏன் என் மனம் அமைதிகொள்ளவில்லை என்றால் அறியாமைதான் அப்போது இருந்தது. ஆத்மா, அநாத்மா ஆகியவைபற்றி நான் அப்போது அறிந்திருக்கவில்லை. இப்போது ஞானம் பெற்ற நிலையில் உங்கள் மனம் நிம்மதியாக, அமைதியாக இருக்கின்றது அல்லவா? சாதாரணமாக சிக்கல்களிலிருந்து விடுபட்டுவிட்ட நிலை, நிம்மதி என்று சொல்லப்படுகிறது. நிம்மதி வரும்; போகும். அமைதி என்பது நீண்ட நிலையான நிம்மதி. அமைதி அடைகின்றபோது உடல், உள்ளம் ஆகியவை அடையும் நிலை யாது? உடலின் ஒவ்வொரு னுNயுயும் ஒழுங்காக வேலை செய்வதற்கு உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி தேவை. அதனால்தான் நோயாளிகளை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையளிக்கிறார்கள். உடற்கூறு சாத்திரத்தில் அமைதிக்கு மிகமிக முக்கியமான ஒரு பங்கு உண்டு. மனத்திலும் உடலிலும் பூரண அமைதி இருந்தால் முழு நலத்துடன் இருப்பார்கள்.

நிம்மதியைத் தேடுபவர்களுக்கு உடல் பலவீனமாக இருக்கும். நான் நிம்மதி இல்;லாமல் தவிக்கிறேன் என்று பலரும் கூறுவார் கள். சாந்தியில் உள்ளம் தோய்ந்தால் நிம்மதி தானாகவே ஏற்படும். எனக்குள்ளேயே இருக்கின்ற அமைதியை நான் தேடிப் பெற்றுக்கொள்வது சாந்தி. எல்லோருக்கும் நிம்மதி இருக்கலாம். ஆனால் பலருக்கும் அமைதி இருக்காது. அதை அடைய முயற்சி செய்யுங்கள். இந்த அமைதிக்கும் சித்த சுத்திக்கும் ஆழ்ந்த நித்திரைக்கும் ஆழ் தியானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஒன்று மற்றொன்றிற்குக் கொண்டு செல்லும். அமைதி அடைந்தவர்களிடம் படபடப்பின்றி செயலிலும் பழகும் விதத்திலும் ஒரு நிதானமிருக்கும். பதட்டம் இராது, செயல் இராது, ஆரவாரம்; இராது, மௌனம் மிகுந்திருக்கும், எண்ணம் இராது. அமைதி அடைந்தவர்களைப் பார்த்தால் தெரியும். அமைதி, ஆனந்தம் எல்லாம் பிரம்ம நிலை. அதை அனுபவிக்கத்தான் முடியும். விவரிக்க இயலாது. சும்மா இரு, சொல் அற! எல்லாம் செய்ய முடிந்தாலும் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது இதன் பொருள்.

பூமிக்கு வந்தது, உடல் எடுத்திருப்பது எல்லாம் இயங்குவதற் காகத்தான். கை, கால் முதலியவை செயல்படத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உனது மிஞ்சிய கர்மாவை அனுபவிப்பதற்காக இந்தக் கர்மேந்திரியங்களும் (செயல்படும் உறுப்புக்கள்) நீ போக வேண்டிய இடத்தை அடைய உதவுவதற்கு ஞானேந்திரியங்களும் (அறியும் உறுப்புக்கள்) உனக்குத் தரப்பட்டிருக்கின்றன. இந்த உண்மை நன்றாகப் புரிய வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்க வேண்டும் என்றில்லை. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டால் உலக வாழ்வு முறையிலிருந்து ஓய்வு எடுத்து அரைவாசி வாழ்க்கையிலேயே அதன் போக்கை மாற்றி ஞானப் பாதைக்குத் திரும்ப வேண்டும். இந்த ஆன்மீகப் பாதை உங்களைப் பரிணாம உயர்விற்குக் கொண்டு செல்லும். அப்படி உயர்கின்றபோது மற்றவர்களுக்குப் புரியாதவை உங்களுக்கும் புரியும்.

இதனால் என்ன லாபம்? பிறவி இன்மை, சக்தி சேமிப்பு, நிம்மதி, அமைதி, நற்பண்புகள், அறநெறி வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டே போகலாம். எனது இயல்பு, சாந்த சொரூபம். அமைதியின் வடிவம். என்னிடம் உள்ள மற்ற அனைத்தும் ஏற்றிவைக்கப்பட்டவை. இதை உணர்த்தத்தான் வேத மந்திரங்கள் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! என்று முடிக்கின்றன. மூவகைகளிலும் அமைதி நிலவுக என்பது இதன் பொருள். மனிதனுக்கு வருகின்ற துன்பங்களெல்லாம் மூன்று விதத்தில்தான் ஏற்படும். அவை தெய்வச் செயலாக நிகழும் பூகம்பம், வௌ;ளம், தீ, விபத்து போன்றவை. (ஆதி தெய்வீகம்) முற்பிறவிகளில் செய்த பாவங்களை அனுபவிப் பதற்காக வருபவை கர்மப் பலனை அனுபவித்தல் (ஆதி ஆத்மீகம்). உடலுக்கு வருகின்ற நோய்கள், விபத்துக்கள், காயங்கள் போன்றவை (ஆதி பௌதிகம்). இந்த மூன்று வகைத் துன்பங்களிலிருந்தும் விடுபட அருள்க என்னும் பிரார்த்தனையே இதன் பொருள். வெளியில் சாந்தி, உடம்பில் சாந்தி, உள்ளத்தில் சாந்தி. மூவகையிலும் சாந்தி நிலவ வேண்டும். இவை அனைத்தும் என்னில் நான் பதிக்கப்பட வேண்டியவை.

மனித மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் மூளையில் இருந்து வருகின்றன. இந்த எண்ணங்கள் மூளையில் இருந்து வரும்போது நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற இரண்டாகப் பிரிகின்றன. இப்படி இரண்டாகப் பிரிவதைப் பார்த்து நல்லது கெட்டதைத் தீர்மானிப்பது இன்னொரு எண்ணம். அந்த எண்ணம் என்பது என்ன? அது எங்கே இருந்து வருகிறது? எப்படித் தீர்மானிக்கிறது என்றால் அதற்குப் பதிலில்லை. ஒவ்வொரு மரபணுவினுள் எது படிந்திருக்கிறதோ அதற்கு அந்த சக்திக்குத் தூண்டலைக் கொடுப்பது உயிர்ச்சக்தியான பிரம்மம். அந்தப் பிரம்மம்தான் அவரவர் கர்மப் பின்னணிக்கு ஏற்றபடி எண்ணங்களைத் தீர்மானிக்கிறது என்பதே உண்மை.

உபநிஷத் என்பது கேள்வி; அதற்குப் பதில்; அந்தப் பதிலில் இருந்து அடுத்த கேள்வி என குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையே நடைபெறுகின்ற உரையாடல்களால்தான் தொகுக் கப்பட்டிருக்கின்றது. உபநிஷத் என்றாலே குருவின் அருகில் மாணவன் அமர்ந்து ஞானத்தைப் பெறல் என்பதே ஆகும். அதன்மூலம் சத்தியத்தை அடைதல். நீயே ஞானம் என்றால் நீ சத்தியம். மறைந்திருக்கும் அந்த அறிவைத் தெளிய வைத்தல்தான் ஞானம். பொருள் அடிப்படையில் அமைந்தது இந்த உலகம். பொருளுக்கு அடியில் ஆற்றல் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம். நீங்களோ அதையும் தாண்டி ஒவ்வொரு படைப்புமே மூலத்தில் தங்கி இருக்கிறது. இந்த மூலம் என்பது பிரம்மம். எது எல்லையற்றதோ, எது எல்லா வற்றையும் செய்விக்கிறதோ, எது எல்லாவற்றையும் செய்கின்றதோ அந்த முழுப் பிரம்மம் இந்த உலகமுமாக இருக்கிறது என்பதுவரை இப்போது அறிந்திருக்கிறீர்கள்.

பிரம்மம் உயிரைக் கொடுக்கிறது. அந்த உயிர்கள் பலவாகப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மனித குலத்தைப் பொறுத்தவரை பிரம்மத்தை மீண்டும் அடைவதுதான் சரியான போக்கு. அதில்தான் நிம்மதியும் சந்தோஷமும் அடங்கி இருக்கின்றன. நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றைக் கொண்டு சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்று சந்தர்ப்பத் திற்கு ஏற்றபடி பாவிக்கிறோம். ஆனால் நமக்குள் பூரணமான ஆனந்தம்தான் எப்போதும் இருக்கிறது. அந்த ஆனந்தத்தைப் பூரணமாக அடைகின்றவரை இந்த உலக இன்பங்கள்தான் மகிழ்ச்சி, சந்தோஷத்தைத் தருவதாக நினைக்கிறோம்.

என்னில்தான் அது (பிரம்மம்) இருக்கிறது. அதில்தான் நான் இருக்கிறேன். எனது கர்மா எனது மரபணுக்களின் உள்ளே இருந்து கொண்டு வழிகாட்டுகிறது. நல்லதோ கெட்டதோ எது என்றாலும் முயற்சி என்ற பெயரில் என்னை வாட்டி எடுக்கிறது. இப்படிச் செய்கின்றபோது எனது கர்மா கழிகின்றது. மேலும் கர்மா ஏறாமல் இருக்கவும் ஒருவன் உண்மையில் தான் பிரம்ம நிலையை அடையவேண்டும் என்றாலும் வேதாந்தத்தை அறிந்தால் மட்டும்தான் அது முடியும். இப்படி வேதாந்தத்தின் மூலம் வாழ்க்கை பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்து வருவதால் தற்போது உங்களின் வாழும்முறை சரியான மனிதர்களாக அதிகப் பிழை செய்யாமல் வாழ்கின்ற மனிதர்களாக உங்களை ஆக்கி இருக்கிறது அல்லவா. பிரம்மத்தின் விருப்பம் இல்லாமல் உங்களால் இங்கு வந்திருக்க முடியாது.

உங்களை இந்த விதத்தில் மாற்றி உயர்த்திக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக என்னையும் உங்களுக்கு ஏற்ற விதத்தில் தயார் செய்து வடிவமைத்ததும் பிரம்மம்தான். எனது கடந்த கால வாழ்க்கையை பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். எனக்கு ஏராளமான திருப்பங்களைத் தந்து ஆசீர்வாதங்களை அள்ளிக் கொட்டியது. இந்த அற்புதப் பணிக்கு மீண்டும் பிறவாமை என்னும் உயரிய பலனும் உண்டு. நான் சொல்கின்ற உண்மைகளைச் சரிதான் என்று உங்களை ஏற்றுக்கொள்ள வைத்துத் தொடர்ந்து இங்கு வரச் செய்ததும் பிரம்மத்தின் செயலே.

ஞானம்தான் இறைவன். பக்தியோகம் என்றால் மனம் உருகி அழலாம். அவனருளை வேண்டலாம். ஆனால் மரபணுக்களில் உள்ள பதிவுகள் அழுவதால் போகாது. ஞானத்தால் மட்டும் தான் நீ பிரம்மம் ஆகலாம். இதனைத் தொடர்ந்து பயிற்சி செய்வதனால் அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். அவனது அருளால் உங்களது சக்தி முழுவதும் ஒன்றுபடுத்தித் தியானத்தில் அவனை நோக்கிச் செலுத்துகிறீர்கள். தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். அதற்குப் பலன் உண்டு. விஞ்ஞான ரிதியாக இறைவன் இல்லை என்று சொல்ல முடியாது. விஞ்ஞான ரிதியாக மனதை ஒன்றுபடுத்து வதால் ஏற்படுகின்ற சக்தியை நிராகரிக்க முடியாது. விஞ்ஞான ரிதியாக ஒரே ஒரு பிறப்புத்தான் என்பது உண்மை அல்ல என்பதை நிரூபிக்கலாம். மத இலக்கியங்கள் இதை ஏற்றிருக்கின்றன.

பல பிறப்புக்கள் எடுத்ததால்தானே இந்த ஆன்மீக உணர்வு வந்தது உங்களுக்கு? உங்களது செயற்பாட்டைப் பொறுத்து உங்களின் இந்த ஞான அறிவு ஞானமாக மாறவேண்டும். இப்போது யாரைப் பார்த்தாலும் அவர்களை வேறாக நினைக்காமல் அவரும் நானும் ஒன்று என்று நினைக்கிறீர் களா? யாருக்கென்றாலும் தகுந்த சமயத்தில் உதவி செய்ய முன்செல்கிறீர்களா? அதில் எல்லைகள் ஏதும் இருக்கிறதா? பிரபஞ்ச அளவிற்கு உங்கள் மனம் விரிவதற்கு எல்லோரையும் தனதாக உணர்ந்து செயல்படுவதற்கு இவை போன்றவைதான் உதவி செய்யும்.

ஆன்மீகப் பயிற்சிக்குத் தேவையான பண்புகளை எடுத்து அவற்றைப்பற்றி நன்கு ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் உள்ள பண்புகளில் ஏராளமான விசத்தன்மைகள் கலந்திருக்கின்றன. அவற்றை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும். மரபணுக்களில் இப்படிக் கெட்ட பண்புகள் படிந் திருந்தாலும் தெளிந்த அறிவு ஊட்டப்படும்போது மூளை அவற்றைச் சுத்தப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்ற னர். மரபணு ஞானத்தால் திருத்தி வடிவமைக்கப் படுகிறது. ஏனெனில் பல பிறப்புக்களில் மரபணுக்கள் பிடித்து வைத்திருந்த பதிவுகள்தான் இந்தப் பிறப்பின் வாழ்க்கையாகத் தொடங்கின. மரபணுக்களில் உள்ள ஜீன்களில் உள்ள பதிவுகளும் அவரவர் வளர்கின்ற சூழ்நிலைகளின் கலவையும் தான் நாங்களாக வாழ்ந்தோம். இப்படி உள்ள ஜீனையே மாற்றி அமைக்கின்ற கல்விதான் சாகாக்கல்வியான வேதாந்தம். இதைத் தற்போது நன்கு அறிந்துள்ள உங்களுக்கு இனி உங்களை மாற்றுகின்ற வேலை மட்டும்தான்; இருக்கிறது. வேதாந்தத்தின் சாராம்சத்தைக் கரைத்துக் குடித்துவிட்ட நீங்கள் இனி கற்றவற்றைப் பயிற்சியாக எடுத்து வாழ்க்கை யின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுத்தி அனுபவித்தால் தான், செயல் முறைக்குக் கொண்டுவந்தால்தான் உங்கள் ஞானம் முழுமைபெறும். அப்போதுதான் உங்களது மரபணுக் களில் உள்ள ஜீன்ஸ் எடுக்கப்பட்டு புதிய ஞானத்தோடு கூடிய ஜீன்ஸ் பதியப்படும். அந்தப் பழைய மரபணுக்களைச் சுத்தப்படுத்தத்தான் நீங்கள் தியானத்தை மேற்கொள்கிறீர்கள். சமயக் கல்வியைப் பயின்று அதைப் பின்பற்றி வாழ்ந்தபோது இந்தத் தெளிவு உங்களுக்குக் கிடைத்திருக்காது. அதைத் தாண்டி மேம்பட்டு தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்களுக்குத் தான் இது கிடைக்கும். அரிதினும் அரிதான இக்கல்வி இனிவரும் பிறவிகளையே இல்லாமற் செய்துவிடக் கூடியது. அதற்கு அவன் அருள்தேவை.

உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்து அவற்றின் ஊடாக துன்ப துயர ஏமாற்றங்களையும் தந்து இப்படி ஏன் நடக்கின்றன என்று சிந்தித்திருப்பவர்களைத் திசை திருப்பித் தன்னை அறியவைத்து பேரின்பமாகிய பரசுகத்தை வழங்கு கின்றது அந்தப் பரம்பொருள். உங்களது கர்மாவையும் உங்களை மயக்குகின்ற மாயையின் தன்மையையும் புரிந்து கொண்டு தியானத்தில் புதிய இடத்திற்கு போகின்றபோது கிடைக்கின்ற சுகம் தொடர்ந்து உங்களில் இருக்கின்ற நிம்மதி போன்றவற்றை விபரிக்க இயலாது. பரம்பொருள், சிற்றின்பங் களாகிய உலக சுகங்களை வைத்தது இதைக்காட்டிலும் பெரிய சுகம் உனக்குள்ளேயே இருக்கிறது என்பதை நீ அறி வதற்காகத்தான் என்று நான் சில வேளைகளில் யோசித்திருக்கிறேன்.

“பிரம்மம் வாழ்க்கையின் இழைகளைக் குறுக்கு நெடுக்காக ஓடவிட்டு உருவாக்கி இருக்கிறது” என்று ஒரு உபநிஷதம் உரைக்கின்றது. இடியப்பச் சிக்கல்தான் வாழ்க்கை. பிரம்மத் தின் உதவியுடன் சென்றால்தான் சரியான வழி திறக்குமே யொழிய அது இல்லாமல் தனது மூளை, தனது முயற்சி என்று போனால் நடுவில் சிக்கி வெளியேறத் தெரியாமல் திணற வேண்டியதுதான். விஞ்ஞானத்தின்படி பார்த்தாலும் மின்சக்தியும் காந்த சக்தியும் எதிரும் புதிரு மாகத்தான் சுழன்று கொண்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்கின்ற மையப் புள்ளி சிவலிங்கம் என்று குறிப்பிடப் படுகின்றது. விஞ்ஞானம் கூறி உள்ள உண்மை இது.

‘பிரஸ்தானத்ரயம்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்து மதத்தின் மிகச்சிறந்த மூன்று முக்கிய வேதாந்த சாத்திரங்கள் ஆன பகவத்கீதை, உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம் உங்களுக்குத் தகுந்த விதத்தில் உபதேசிக்கப்பட்டு உங்களைத் தூய்மைப் படுத்தி ஆயிற்று. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மரபணு மாற்றத்தைத் தடுக்க இயலாது. தெய்வம் என்று ஒன்று இருக்கிறது. அதுவேறு நான்வேறு என்ற நிலையில் இருந்து அதுவே நான் என்றும் எல்லாமே அது என்றும் அறிந்து அதன் சூட்சும அமைப்பையும் புரிந்து மூலத்தை அறிந்து விட்டீர்கள். இப்போது உங்களுக்குப் படைப்பின் ரகசியம், பிறப்பின் ரகசியம் தெரிந்துவிட்டதா? ஓர் உயிர் பல உயிர்களாயின என்று விஞ்ஞானம் கூறுகின்றது. உயிரில் இருந்துதான் படைப்பு வந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இரும்பு ஏன் துருப்பிடிக்கிறது. சும்மா கிடக்கின்ற மரம் மக்கிப் போகின்றது. ஏன் வெட்டப் பட்ட மரம் மக்குகின்றது. உயிரில்லாததால்! என்ற பதில் ஞானம் ஆக இருக்கிறது.

இந்த ஞானப் பாதையில் நீங்கள் உயர்ந்து செல்லச் செல்ல மற்றவர்கள் உங்களை மதிக்கத் துவங்குவார்கள்; வணங்கு வார்கள். யார் என்ன செய்தாலென்ன, எல்லாமே அவனது ஆற்றலின் மகிமை. இறைவனின் விபூதி என்று அடங்கி இருக்கத் தெரிய வேண்டும். உறவுகளுடனும் சமுதாயத் துடனும் இப்போது நீங்கள் இந்நிலையில் தொடர்பு கொண்டு பழகும்போது நீங்கள் தற்சமயம் எந்த நிலையில் இருக்கிறீர் கள் என்பது தெரியவரும். உபநிஷதங்கள் தந்த பதிவுகள் எப்படி உங்களில் இருந்து வெளிப்படுகின்றன என்பதை முன்பு உங்களிடம் பழகிவந்த உறவுகளும் சுற்றமும் மிக நன்றாக உணர்வார்கள்.

நீங்கள் பெற்றுள்ள இந்தக் கல்வி அல்லது அனுபவம் மிக வலிமையான பதிவு பெற்றுவிட்டதொன்று. சிலவேளை உங்களில் சிலருக்கு இந்த சாகாக் கல்வி பெற்ற எனக்கு அசாதாரணமாக ஒன்றும் நடக்கவில்லையே என்ற எண்ணம் எழக்கூடும். அதிசயங்களை நாடுவதல்ல உங்கள் நோக்கம். பிறவியை இல்லாமல் செய்வதுதான் உங்கள் நோக்கம். பிறப்பின் நோக்கம் எப்போதுமே ஆனந்தமாய் இருப்பது என்னும் ரகசியத்தை அறிந்தாயிற்று. ஆனால் உலகத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும்தான் இருக்கிறதே தவிர ஆனந்தம் என்பது இல்லை. அவையும் வந்த விரைவில் போய்விடும். அந்த மகிழ்ச்சி, சந்தோஷத்தின் நிலைபெற்ற தன்மைதான் ஆனந்தம். அவனுடன் இணைந்திருக்கின்ற நிலைதான் ஆனந்தத்தைத் தரும். வேறு வெளி உலக விஷயங்கள் எதுவும் நிரந்தர ஆனந்தத்தைத் தராது. அந்த ஆனந்தத்திற்கு பூரண அமைதி தேவை. அந்தப் பூரண அமைதியை இந்தக் கல்வி உங்களுக்குத் தந்திருக்கிறது.

உங்களுக்கு என்று தனிப்பட்ட கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யலாம், செய்யாமல் விடலாம். அப்படிச் செய்யாமல் இருப்பதற்கு 24 மணி நேரமும் ஞானநிலையில் இருக்க வேண்டும். மனம் இயங்காமல் இருந்தாலும்கூட உடல் இயங்கத்தான் வேண்டும். முன்பு அர்த்தமின்றி ஈடுபட்டுக்கொண்டிருந்த பல உலக விவகாரங்களை இப்போது நீக்கி விட்ட நிலையில் தேவையானவற்றை மட்டுமே செய்து கொண்டு போகின்றபோது சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு போய்விட்டதுபோல் தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல, மனதின் விளையாட்டு. மனதைச் சுத்தப்படுத்தி ஆயிற்று. பண்புகளை அலசி ஆராய்ந்து இருக்கின்ற பண்புகளுக்கு மாறான பண்புகளை ஒவ்வொன்றாக விளங்கி எடுத்தாயிற்று. எனவே மூளையில் அந்தப் பகுதி இல்லை. மீதி உள்ள அழுக்குகளைத் தியானம் மூலம் அழிக்கிறோம். தியானம் என்பது இந்த உடலையும் உயிரையும் பிரித்துப் பார்த்தல்.

இப்படித் தியானம் செய்கின்றபோது தற்போது என்னிடம் என்னென்ன நற்பண்புகள் சிறந்திருக்கின்றன எந்தெந்த தீய பண்புகளை இன்னும் நீக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பண்புகளில் இலாப நஷ்டம் பார்க்க வேண்டாம். எல்லாமே நன்மை தருபவை. இந்தப் பாதையில் உங்களுக்கு எல்லாமே பெறுதலே தவிர இழப்பு ஒன்றும் இல்லை. இலாப நஷ்டம் பார்த்தீர்களானால் உலகத்திற்குப் போய்விடுவீர்கள். இந்த உபதேசங்களை இடையறாது கேட்டு மனதில் பதிப்பதே மிகப்பெரிய லாபம். நீங்கள் இப்போது கட்டுப்படுத்தக்கூடிய நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டாயிற்று. மதம் என்பது வரையறுக்கப்பட்ட நம்பிக்கைகளுக்கு உட் பட்டது. அதைத்தான் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

உங்களது முழுமையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்க்கையின் நோக்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதும் அடைய வேண்டிய இடம் எது என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தற்போது அனுபவிக்கின்ற அமைதி அளவிட முடியாததாக எல்லையற்றதாக இருக்கிறது. ஆத்மாவை நோக்கிய பயணமும் ஆன்மீக வளர்ச்சியும்தான் ஜீவனுடைய இலட்சியமாக இருக்கிறது. ஆனந்தம் நிரம்பிய தொடர் வாழ்க்கையையே மனம் விழைகிறது. நானல்லாத நான் வைத்திருக்கின்ற எல்லாம் இந்நிலையில் என்னில் இருந்து விலகிச் செல்கின்றன.

நமது உடலை எவ்வளவு நவீன உபகரணங்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் னுNயு ஐயே ஊடுருவித் தேடினாலும் நான் யார்? என்று கண்டு பிடிக்க இயலாது. அதாவது நான் ஆத்மா என்பதை இந்த உடலைக் கொண்டு கண்டறிய முடியாது. ஆர்கானிசம் என்று எதை எடுத்து ஆராய்ந்தாலும் வாழ்க்கையின் ரகசியத்தை அறிய முடியாது.

இந்து மதம் மனித மனதை மானுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றது. நடராஜர் சிலையைக் கவனித்தால் அவரது ஒரு கரத்தில் மானைப் பிடித்திருப்பார். ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் உடுக்கை, ஒரு கையில் மான். அவர் ஏன் மானைப் பிடித்திருக்கிறார்? மான் சிறிய சலசலப்புக்கும் பயப்படும். மான் என்பது சலனம். மான் ஒரு வினாடி கூட அமைதியாக இருக்காது. ஆடிக்கொண்டே இருக்கும். ஓடும். மான்மாதிரி ஓடுகின்ற மனதை, எதற்கெடுத்தாலும் பயப்படுகின்ற மனதை, சதா சலனப்படுகின்ற மனதை கட்டுப்படுத்திப் பிடித்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பிரபஞ்ச நடனத் தோற்றத்தில் நடராஜர் மானாகிய மனதைக் கரத்தில் பிடித்திருக்கிறார்.

அமைதியாய் இருக்கின்ற இறை மனதை பயம் உடைத்து விடும். சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். ஆனால் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற நீங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மனம் போன போக்கிற்கு நீங்கள் ஓடக்கூடாது. பெண்கள்தான் மன தோடு சிக்கி ஓடித்திரிபவர்கள். மனக்கட்டுப்பாடு எவ்வளவோ விதத்தில் எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது.

நம்முடைய பயத்திற்கு எவை காரணம் என்று நினைக்கிறோமோ அவை காரணங்கள் அல்ல. குழந்தைப் பருவத்தில் எவற்றிற்குப் பயப்பட்டோமோ அவற்றிற்கு இப்போது பயம் இல்லை. இன்று நாம் பயப்படுபவை சில காலத்திற்குப் பிறகு பயப்படுத்தாது. இவை இல்லாம் கற்பனை, அறியாமை, தியான நேரத்தில் எவற்றைப் பயக் காரணமாக நினைக்கின் றோமோ அவற்றைக் கண்முன் நிறுத்தி அனுபவிக்கும்போது இவை பயக் காரணம் இல்லை என்பதைச் சிந்திக்க வேண்டும். மனதில் பதிப்பதுதான் தியானிப்பது. இப்போது எவை பயப்படுத்துகின்றனவோ அவற்றை மனதிற்குக் கொண்டு வருவோம். அவை பயத்தின் காரணம் அல்ல என்று தியானித்து அமர்ந்திருப்போம்.

ஒரு சூழ்நிலை, சில மனிதர்கள், சில பொருட்கள் பயக் காரணமாகத் தெரியலாம். அந்தச் சூழ்நிலைகளை, மனிதர்களைப் பயக் காரணமாகக் காட்டியது நம் மனம். மரணம் உட்பட எந்தச் சூழ்நிலைக்கும் நம்மைப் பயப்படுத்தும் சக்தி இல்லை. பயத்திற்குக் காரணம் நம்மனம். நம்மைக் கண்டு தான் நாம் பயந்து கொண்டிருக்கிறோம். நமது மனதில் தோன்றும் பயத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகத் தோன்றினாலும் எல்லாப் பயமும் துயரத்தை அனுபவிக்க வேண்டுமே என்பதாகத்தான் இருக்கும். கஷ்டம், துயரம் இவற்றைக் குறிப்பதே பயம் என்பது நாம் உணர வேண்டிய உண்மை. நம்மால் எவ்வளவு துயரத்தைத் தாங்க முடியுமோ அனுபவிக்க முடியுமோ அவ்வளவு துயரத்தைத்தான் இறைவனோ இயற்கையோ தர முடியும். இது மிகப்பெரிய உண்மை.

இந்தத் துயரத்தை அந்தச் சமயத்தில் தாங்கக்கூடிய சக்தி தானாகவே வந்துவிடும். துயரத்தைக் குறித்த பயத்தை இந்த உண்மை நீக்கிவிடும். துயரத்தைக் குறித்து நான் பயப்படத் தேவையில்லை. என்னுடைய சக்திக்கு மீறிய துயரத்தை இறைவனாலும் கொடுக்க முடியாது. துயரம் வரும்முன் அதைச் சந்திக்கக்கூடிய சக்தியை இறைவன் கொடுத்து விடுகிறான். பயம் பழக்கத்தால் வந்துள்ளது. மெதுவாக நம்மிடமிருந்து அந்தப் பயம் அகன்றுவிடும். எதைக் குறித்து பயப்படுகிறோமோ அதை தியான காலத்தில் பார்த்து பயம் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அறியாமையைத் தவிர வேறு பயம் காரணமில்லை. இறைவன் அபய சொரூபன். அதர்மம் பயத்திற்குக் காரணம். தர்மம் அபய காரணம். தர்மத்தைப் பின்பற்றினால் பயமின்மையை அடைவோம்.

அதர்மம் தைரியத்தை இழக்கச் செய்யும். தர்மத்தைப் பின் பற்றுகின்ற நிலையில் பயப்படுதல் தேவையற்றது. அதர்மத் தைக் கண்டு பயப்படுதல் நன்மையைத்தரும். தர்மத்தைக் கண்டு பயப்படுதல் பலனற்றது.

இறைவன் எனக்குள் இருக்கின்றான் என்ற உண்மையை அறிந்த பிறகு எனக்கு எதற்குப் பயம்? நாம் நற்பண்புகளைச் சாத்திரங்கள் மூலம் அறிகின்றோம். நமக்குள் இயற்கையாக சில பண்புகள் வருகின்றன. என்ன பண்புகளை வளர்க்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற அறிவு மட்டும் போதாது. நாம் அடைய வேண்டிய குணங்களைத் தவத்தின் மூலம், பயிற்சியின் மூலம் காலக் கிரமத்தில் அடைய வேண்டும். ஒருவிதமான பயிற்சி பண்புகளைத் தியானித்தல். சில பண்புகளை இப்போது எடுத்துத் தியானிப்போம். அவரவர்களுக்குத் தேவையான பண்பை எடுத்துத் தியானம் செய்யுங்கள். எடுத்துக் கொண்ட பண்பின் தன்மை, அதனால் விளையும் பயன், இல்லையானால் அதன் இழப்பு, பலன்கள் ஆகியவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் அடைய வேண்டிய பண்புகளை அறிந்தோம். பண்பு களை நம்வயமாக்கிக் கொள்ளச் சில பண்புகளைத் தியானித்துப் பழகினோம். பண்பின் தன்மை, அதன் நன்மை, அது இல்லையென்றால் விளையும் தீமை இவைகளை மீண்டும் மீண்டும் மனம் பார்க்கின்றபோது பண்புகளின் மதிப்பு உயர்கிறது. அதிக மதிப்பு கொடுக்கினறபோது உற்சாகம், ஊக்கம் தோன்றுகிறது. எதைத் தொடர்ந்து சிந்திக்கிறோமோ அது நம்முடைய குணமாக மாறுகிறது. அதன் அடிப்படையில் அமைதியான முறையில் தொடர்ந்து சிந்தித்தல் முக்கியமான தியானமாகிறது. இப்போது ஏதோ ஒரு பண்பை எடுத்து அது இருப்பதால் ஏற்படும் பலன், இல்லாவிடில் ஏற்படும் இழப்பு பற்றி சிந்தித்து அதையே தியானமாகச் செய்யுங்கள். பயமின்மை பற்றி இப்போது தியானிப்போம்.

அறிவை வளர்க்க வேண்டும் என்ற சொற்றொடர் எல்லாச் சமுதாயத்திலும் இனக் குழுக்களிடத்தும் அனைத்து மனிதர்களிடத்திலும் பொதுவான ஒன்று. எந்த அறிவை? என்ற கேள்வி எழுப்பும்போது திகைப்பு ஏற்படுகிறது. என்னையும் சுற்றியுள்ளவைகளையும் அறிவதே அறிவென ஆரம்பத்தில் எண்ணத்தோன்றும். உலக அறிவென்பது பொருட்களால் ஆன ஒழுங்கையும் அதன் நிகழ்வுகளையும் அறிதல் என அறிய லாம். பொருட்கள் எல்லாம் அலைகளின் வடிவ இருப்பே, என விஞ்ஞான அறிவு கூறுகிறது.

மின்காந்த அலைகளால் ஏற்பட்டதே பார்வையில் படும் உலகம் எனக் கொள்ளலாம். அலைகளே அதிர்வுகளின் உருவாக்கம் என்றும் அதிர்வுகள் ஈர்ப்பால் உருவாகின என்றும் அவற்றின் மூலம் பிராணன் என்கிற உயிர் அல்லது ஆத்மா என்றும் முடிகிறது. ஆத்மாவோ பரமாத்மாவாக அண்டமெல்லாம் விரிந்து எல்லையில்லாமல் திகழ்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. அதனால் வேத – வேதாந்த அறிவே உண்மையான அறிவு என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் அறிவைத் தேடுபவர்கள் இருக்கிறார்கள். இந்த அறிவு எல்லாருக்கும்; இலகுவாகக் கிடைத்து விடுவதில்லை. ஒரு ஒழுக்கத்தைப் பின்பற்றி அதை அறிவதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும். அந்த நல்லொழுக்கம் எப்படி அமையும்? அன்பால்தான் அமையும். மனித இனத்துக் குள்ளேயே பாகுபாடு இல்லாமல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒற்றுமை மனப்பான்மையோடு வாழும் சீரிய வாழ்க்கைக்கு அன்புதான் அடிப்படை.

அன்பைப் பாரபட்சம் இல்லாமல் விரித்தால் உலகெங்கும் அமைதி தானாக நிலவும். அதற்குத் தேவை பரமாத்மா என்று கூறப்பட்ட கடவுளின் அருள். என்ன அற்புதம்! அன்புக்கு இறைவன் அருள் தேவை. அறிவு இறையருளில் ஞானமாக நிறைவடைகிறது. ஞானம் என்பது தெளிந்த அறிவு. இந்த ஞானத்தை விசாரம் என்று கேள்விகளால் சந்தேகமற குருவின் வழிகாட்டலுடன் ஆய்ந்து, உண்மை நிலையை அறிவது. அறிந்தவுடன் அதற்கான பயிற்சியை மேற்கொள்வது என்பவைகள் சாதனை என்று அழைக்கப்படுகிறது. அறிந்த வுடன் ஞானம் பெற்றவுடன் என்னை அதுவாக ஆக்க வேண்டும் என்ற உந்தல் வாழ்க்கையில் அர்ப்பணிப்பை ஏற்படுத்தும்.

இந்த உலகம் ஏன் படைக்கப்பட்டது? நான் அனுபவிக்கும் இன்பங்களுக்கோ துன்பங்களுக்கோ என்ன காரணம்? உணவு, உறவுகள், உறையுள், இயற்கை என்றால் என்ன? என்று சுலபத்தில் விடை காண முடியாத கேள்விகளுக்கு விடை கிடைத்ததும் அதன் பின்னர் அடைய வேண்டியதை அடைவதே பிறப்பின் நோக்கம் என்ற தெளிவு ஏற்பட்டு மனிதப் பரிணா மத்தின் உயர்வாகிய ஆத்ம வாழ்வை விரித்துக் கொள்ளும் நிலையை எனக்கருளிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதே என்முன்னாலுள்ள கடமை. எல்லா வாழ்வும் அவனுக்கே. எனது பிறப்பை நீக்கி தன்னோடு என்னை அணைத்துக் கொண்ட அவனுக்கு – இல்லை – எனக்கு – வாத்சல்யமான நன்றிக் கண்ணீர் அரும்புகிறது. அவன் என்பது நானே என்ற அத்வைத அறிவு அவன் அருளை விரிக்கிறது.

அறிவுத் தேடல் அருளாகி நானும் அவனும் ஒன்றாகி வாழ்வின் நிறைவில் நான் மறைந்து அவனே மிளிர்கின்றான்.

எனது வாழ்க்கை என்னும் நீண்ட பயணத்தில் என் வேடத்தில் நீ எனக்காக, என்னுடன் பயணிக்கிறாய் என்ற உண்மையை ஞானத்தால் நான் இன்று பூரணமாக அறிந்து கொண்டேன். நான் என்பது நீயே.

நன்றி பரமாத்மாவாகிய இறைவனே!

 

 

தியானம், ஞானஉபதேச உரைகளைத் திரும்பத் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து மனதில் பதித்தல் ஆகியவை நிதித்யாசனம் (திரும்பத் திரும்பச் சிந்தித்தல்)எனப்படுகின்றன. தியானம் செய்து உங்களுடைய கர்மாவை ஒதுக்காவிட்டால் உங்களால் பூரண நிறைவுத் தன்மையை அடைய முடியாது. மனமாக இயங்குகின்ற ஆத்மாவை எல்லா நேரத்திலும் ஆத்மாவாகப் பார்த்தலே நிதித்யாசனம். எந்த நேரமும் சலனப் பட்டுக்கொண்டே இருக்கின்ற மனதின் உண்மைத் தன்மையை ஞானத்தால் அறிந்ததால் இப்போது அது எந்த வெளிp விவகாரத்தையும் தன்னில் ஏற்றிவைத்துக் குழம்பாமல் ஆத்மாவாகவே ஆகிவிட்டது. ஆத்மாவில்தான் நான் இருக்கிறேன். இந்த ஆத்மா எல்லா இடங்களிலுமே பரவி இருக்கின்றது. உயிர்ச் சக்தி இல்லாத இடமே இல்லை. காற்று இருப்பதால் உயிர்ச்சக்தி இருக்கிறது. இந்த உயிர்ச் சக்தியோடு பஞ்சபூதச் சேர்க்கையும் இயற்கையும் இணைந்து அதனுடைய பலவிதத் திருவிளையாடல்கள் வாழ்க்கையாக நிகழ்கின்றன.

பஞ்சபூத சக்திகளில் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கையும் நாம் தொடமுடியும். ஆகாயத்தைத் தொட முடியாது. இப்படிக் கையால் தொட முடியாத ஆகாயத்தை நீங்கள் தொட முடிய வேண்டும். எண்ணங்களாலும் ஆசைகளாலும் அலைபாய்ந்தபடி இருக்கின்ற மனம் வெறுமையாகி வெட்டவெளியானால் அதுதான் மனஆகாயம். வேறு எந்தப் பொய்யான வடிவங்களையும் மனதில் பதிக்காமல் அந்த ஆகாயத்தைப் பிடித்து அதன்மூலம் ஆத்மாவைத் தொடத் தியானத்தில் முயல வேண்டும். இந்த உண்மைதான் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரத்தில் சிதம்பர ரகசியம் என்ற பெயரில் காட்டப்படுகின்றது. இயக்கத்திற்கு இடம் தேவை. வெளியில் இயக்கம் நடக்கிறது. இப்படிப் பார்த்தால் உங்கள் மனம் மறைந்து ஆகாய சக்தியாய் இப்போது இருக்கிறது. அது வெண்ணிறமாய்த் தெரியும். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வோர் நிறம் வரும்.

இதில் உண்மை என்னவென்றால் ஆத்மாவாகிய மன ஆகாயவெளி தங்க நிறமாகத்தான் இருக்கிறது. ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று வேதம் சொல்கிறது. ஹிரண்யம் என்றால் தங்கம். உலகம் முழுவதும் ஒளி தங்கமயமாக மின்னுகின்றது. இப்போது உங்களில் தெரிகின்ற வௌ;ளி ஒளி (வெண்ணிற ஒளி) தங்க ஒளியாக மாறவேண்டும். தியானத்தில் நீங்கள் இந்த நிலையை எய்த வேண்டும். இதற்குத் தொடர்ந்த முயற்சி தேவை. நீங்கள் தியானத்தில் ஒன்றுமில்லாத நிலைக்குப் போகின்றபோது (சமாதி நிலை) பகலில் தெரிகின்ற சூரிய ஒளியில் ஊதா கலந்ததுபோல் தெரிந்து பிறகு ஒருவிதத் தங்க ஒளி காட்டி மறைந்துவிடும். இதைத்தான் பொன்னார் மேனியனே!.. என்று பாடினார். மூகாம்பிகை கோவிலில் லிங்கத்தில் தங்க ரேகை மின்னுவ தாகச் சொல்வதும் இதைக் குறித்துத்தான். தியானத்தின் இறுதிநிலை இந்தத் தங்க ஒளியைத் தரிசித்தல். அதன்பிறகு நீங்கள் உங்களை மானசீகமாக மனதில் பொன்னிறமான உருவமாக உச்சிமுதல் பாதம்வரை பொன்னிறமாக உருவகப் படுத்திப் பார்க்க முயல வேண்டும்.

எந்தவிதத் தடுப்புமில்லாமல், இடைஞ்சலில்லாமல் தங்கமாக மாற்ற முடியுமா? தியானத்தில் இது ஒரு பயிற்சி. இதைக் குறிப்பாக உணர்த்தத்தான் ஆலயங்களில் முக்கிய தினங்களில் விக்கிரகங்களுக்குத் தங்கக்கவசம் சாத்து கின்றனர். வௌ;ளிக் கவசமும் ஒளியைக் குறிப்பதுதான். உங்களை உங்களால் மனதில் தங்க ஒளியாகப் பதிக்க முடியுமா? உங்கள் மனம் தியானத்தால் பழக்கப்பட்டு ஞானத்தால் உரமேற்றி ஒளிமயமாகப் பார்த்து இப்போது தங்கமயமாக அந்த வெளியைப் பார்க்க வேண்டும். கஷ்டமாக இருக்கும். ஆனால் பயிற்சி மூலம் தங்க ஒளியைத் தரிசிக்க முடியும். சத்திய ஒளியின் மாறாத நிறம் தங்கம்.

வௌ;ளி ஒளியில்கூட மனம் அசையும். வேறு ஒன்றைக் கொண்டுவரும். தங்கத்தில் சிக்கிவிட்டாலோ பிறகு மனமே இருக்காது. ஆட்டமும் இல்லை, அசைவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். பரமாத்ம ஸ்வரூபம் பொன் நிறம். தங்க நிறத்தை தரிசித்தால் மூலத்தில் கொண்டு சேர்த்து விடும். உடலிலுள்ள எல்லாமே அடிப்படையில் தங்க நிறம். மருத்துவ மனையில் கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்துகின்ற சிகிச்சை (னுNஊ) செய்கின்றபோது அந்தக் கழிவைப் பரி சோதனைக்கு அனுப்புவார்கள். அதில் பொன்னிறத் துகள்கள் மின்னுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். உங்களுக்குள் தங்கம் இருக்கிறது. மனித உற்பத்திக்கு ஆதாரமான இடம் தங்கமயமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மனோநாசம் செய்துவிட்டீர்களென்றால் சமாதி நிலையில் தங்கமாக ஜொலிப்பீர்கள். சமாதி நிலையில் தங்கமாக எல்லாம் தெரிந்ததென்றால் என் அணுக்கள் அனைத்தும் தங்கத்தில் நிலைபெற்றவையாகிவிடும். தங்களது வளர்ச்சியான இயக்கத்தை நிறுத்திச் சமாதி நிலைக்கு அவை உதவி செய்யும். அதாவது இந்தப் பிறவியின் இறுதிநிலை வரை குறைவான நிலையில் இயங்கிவரும். நான் முற்றுமுழுதாய் அமைதிப்பட்டு அந்தத் தங்க நிலையை அடைந்தால் ஸெல்களும் மாறும். அப்படி இந்த ஸெல்கள் மாறினால்தான் நான் தங்க நிலையை அடைந்ததாக ஆகும். இந்தத் தங்க நிலையை யோசித்துவிட்டு உலகத்தில் மக்கள் நடக்கின்ற நிலையைக் கவனித்துப் பாருங்கள்.

நான் சொல்ல வந்தது தங்கநிலை பற்றியது அல்ல. பூரண அமைதி நிலைபற்றித்தான். இந்தப் பூரண அமைதி நிலையில் நான் முதுமையை நோக்கிச் செல்கின்ற பயணத்தை நிறுத்துகிறேன். எனது உடலிலுள்ள ஸெல்கள் அதிவிரை வாகச் செயல்பட்டு விரைவில் முதுமையை எய்தி விரைவாக இந்தப் பூமியைவிட்டு அனுப்புவதற்குத் தீவிரமாக ஈடுபட்டிருக் கின்றன. இவற்றை நான் அமைதிப்படுத்திவிட்டால் ஸெல்களின் இயக்கங்கள் மெதுவாக இருக்கும். அப்படி அவை குறைந்த விதத்தில் செயல்பட நான் அமைதி நிலையில் எப்போதும் இருக்க வேண்டும். மனம் கட்டுப் பட்டால்தான் அமைதியடையும். கண்ணுக்கு முன் இனிப்புப் பண்டம் இருந்தாலும் அதை எடுத்துத் தின்னாத கட்டுப்பாடு உங்களில் ஏற்பட வேண்டும். அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால்தான் வைராக்கியம் ஏற்படும். இல்லாவிடில் மனக்கட்டுப்பாடு இல்லாமல் உணர்ச்சி மேம்பட்டு எல்லாம் செய்வோம். ஒவ்வொரு நாளும் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்படுகின்ற போராட்டம்தான் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கை அறிவுபூர்வமாக இருக்கிறதா? உணர்ச்சி பூர்வமாகச் செல்கிறதா? என்று உங்களை நீங்கள் ஆராய்ந்தால் உண்மை புரியும். இனிப்பு நஞ்சாய் மாறும் என்பது ஞானம். ஞானத்திற்கு வந்துவிட்டால் ஒருவருடைய செயல்பாடுகள் உணர்ச்சி வசப்படாமல் பூரண நிலையில் இருக்கும். இந்த ஞானம் உங்களைக் கீழ்நிலைக்குப் போக விடாமல் தடுத்து மேலே உயர்த்தும். ஞானம் உள்ளவர்கள் என்றால் உணர்ச்சிக்கு அடிமையாகாதவர்கள், அறிவில் தெளிந்தவர்கள் என்று பொருள்.

ஞானம் சமுதாய வழக்கத்திற்கு மாறாகத்தான் பெரும்பாலும் இருக்கும். சமுதாயம் செய்துகொண்டு போகின்றவற்றை எல்லாம் ஞானமுள்ளவர்கள் செய்யமாட்டார்கள். சிந்தித்துச் செயல்படுவார்கள். உண்மை எது பொய் எது என்பது தெரிந்து, தனிப்பட்ட ரீதியில் ஞானத்தைப் பெற்றுச் சமுதாயம் எதிர்த்தாலும் தொடர்ந்து தமது முடிவைக் கைவிடாமல் கடைப்பிடித்து வாழ்பவர்கள்தான் ஆன்மீகவாதிகள். இனி நீங்கள் உங்களைத் தங்கமயமாகத்தான் பார்க்கப்பழக வேண்டும். தியானத்தில் உள்முகமாக உள்ளத்தினுள்ளே தங்க ஒளியைத் தரிசித்து அதை மெதுவாக உடல்முழுவதும் படரவிட வேண்டும். எனது இருப்பு நிலையை உணர்வால் காண உள்ளத்தால் பழகவேண்டும். எனது இருப்புநிலை தங்கம், அது மாறாது. மாறியவையெல்லாம் பார்வைக்குத் தெரிந்தபடி, எனது கர்மாவிற்கேற்றபடி, எந்த நிலையில் எனது பார்வை இருக்கின்றதோ அதற்கேற்றபடிதான் நிறம் மாறித் தோற்றமாகத் தெரியும். எனது கண் பார்ப்பது உண்மையல்ல என்பதுதான் நான் பெற்ற ஞானம். ஏனெனில் படைப்பிற்குக் கர்மாவையும், மாயையையும் இறைவன் பாவித்திருக்கிறான். இது கர்மா, இது மாயை என்று பிரித்துப் பார்ப்பவனுக்கு இறைவன் தங்கத்தில் காட்சியளிப்பான்.

வாழ்க்கையில் எதைச் செய்தாலும் எப்படி வாழ்ந்தாலும் கடைசியில் மிஞ்சுவது அனுபவம் மட்டுமே. எதை அனுபவித்தாலும் போகும்போது ஒன்றையும் கொண்டு செல்ல இயலாது. இங்கேயே விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். மாயை வலைக்குள் சிக்கினால் அப்படியே இழுத்துக் கொண்டு போய்விடும். காண்பவை எல்லாம் மாயை. படைப்பில் இருந்து விடுபடுகின்ற நிலைதான் ஞானம் பெறுதல். மாற்றத்தைப் புரிந்துகொண்டு விட்டால் மாறாததைப் புரிந்து கொள்ள முடியும். மனச்சாட்சி ஞானம் பெற்றால்தான் சரியாகச் செயல்படும்.

நிதித்யாசனம் என்ற தியானத்தில் மன ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஞானத்தையும் தியானத்தை யும் சேர்த்துச் செய்வது. சில கற்பனைகளுக்கும் சிந்தனை களுக்கும் பாவனைகளுக்கும் பெற்ற ஞானத்தைச் சிந்திப்பதற் கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு கற்பனை எப்பொழுது வேண்டுமானாலும் உண்மையாகலாம். இன்று முதல் முப்பது நாள்களுக்குப் பிறகு எனது கை, கால்கள் செயல்படாமல் போகிறது. இது ஒரு கற்பனை. அப்படியானால் இந்த முப்பது நாட்களுக்குள் இவற்றை எந்த விதத்தில் நான் பயன்படுத்திக் கொள்வேன்? முப்பது நாட்களுக்குப் பிறகு எனது கைகால்கள் அசைவின்றிப் போய்விட்டன. இப்போது உறவினர் என்னைச் சுற்றி இருந்து பார்க்கின்றனர். நான் அவர்களை எப்படி எதிர்கொள்வேன்? இந்த உலகை எப்படிப் பார்ப்பேன்? பழகியவர்களிடம் எனது உணர்வுகளை எப்படி விவரிப்பேன்? பணம், பட்டம், பதவி, வெற்றி, தோல்வி, தாழ்வு, உயர்வு மனப்பான்மை இவற்றின் நிலை என்ன? அகங்காரத்தின் நிலை எப்படி இருக்கும்? என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வத்தின் நிலை எப்படி இருக்கும்? என்னைக் கண்டு பயப்பட்டவர்களைக் கண்டு நான் பயப்படுவேன். அந்த நிலையில் உலகம் என்னை எப்படி நடத்தும்? நான் என்னையே எப்படிப் பார்ப்பேன்? சிந்தித்துப் பார்ப்போம்.

என் கை கால்களை நான் வெறுப்பேனா? இதுவரை செயல்பட்டதற்காக நன்றி செலுத்துவேனா? சிந்தித்துப் பார்ப்போம். இந்தச் சிந்தனையில் நாம் அடிபட்டுப் போய் விடக்கூடாது. கீழ்நிலைக்கு இறங்கி அனைத்தையும் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவையும் உன் கர்மாவோடு தொடர்புபட்டவையே. மனதில் எழக்கூடிய அனைத்துப் பயங் களையும் கற்பனை செய்து அவற்றால் நான் பாதிப்படையக் கூடாது என்பதற்காக என் மனதை ஆத்மாவாக மாற்றிவைத்து ஒரு மனப்பயிற்சியாக இதை எடுக்க வேண்டும். முக்திக்கும் அன்பு செய்வதற்கும் பயம் தடை. எதற்கும் தயார் என்ற துணிவு ஏற்படவே இப்படிப்பட்ட சிந்தனைகள்.

நிலையானதை உணர்த்தும் விதத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறோம். நிலையானதல்லாதவற்றை எல்லாம் நீக்குகிறோம். இங்கு ஒரு பாவனை. ஏழு நாட்களுக்குப் பிறகு நான் பார்வை அற்றவனாக இருக்கப் போகிறேன். அதுவரை நான் எதைப் பார்ப்பேன்? எந்தக் காட்சியை மனதில் பதிய வைத்து வாழ்க்கை முழுவதும் நினைத்துக் கொண்டிருப்பேன்? இந்த ஏழு நாட்கள் யாரை அல்லது எதைப் பார்க்கப் பயன் படுத்துவேன்? இந்தக் கற்பனை மூலம் கண்களின் மதிப்பும் நிலையாமையும் உணரப்படுகிறது. கண்களை இழந்தபின் என் உலகம் எப்படி இருக்கும்? எவற்றை மனக்கண் பார்க்கும்? இவ்வுலகம் என்னை எப்படி நடத்தும்? எனது கர்வம் எந்தநிலையை அடையும். நான் அடைந்த வெற்றி, செல்வம் போன்றவற்றை எப்படிப் பார்ப்பேன்? பார்வையிழந்தபின் எனது உலகம் பிரகாசமானதா? இருளானதா? பார்வை இருந்த காலத்தில் நான் துயரப்பட்டதில்லையா? இவற்றைச் சிந்திக்கும்போது அறிவுதான் நம் கண்கள் என்பதை அறி வோம்.

நிலையாமையைத் தியானித்து வருகிறோம். நமது உடல், செயல்படும் சக்திகள் உறவுகள் அனைத்தும் காலத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வறிவைப் பெற்றபிறகு நாம் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. கற்பனை ஒன்று; எனது உடல் செயல்படும் திறனை இழந்துவிட்டது. கால்கள் நடக்கும் சக்தியை இழந்துவிட்டன. அசைவற்ற நிலையில் படுத்திருக்கிறேன். உறவினர்கள் நண்பர்கள் என்னைச் சுற்றி வேடிக்கை பார்க்கிறார்கள். சமாதானப்படுத்துகிறார்கள். பேசும் திறனை இழந்த நான் இவ்வுலகத்தை எப்படிப் பார்ப்பேன்? நான் அடைந்த வெற்றிகளை எப்படிப் பார்ப்பேன்? அடைந்த தோல்விகளை எப்படிப் பார்ப்பேன்? என்னைத் துன்புறுத்தியவர்களை நான் எப்படிப் பார்ப்பேன்? அவர்களை மன்னிப்பேனா? அல்லது மனதில் சபிப்பேனா? எனக்கு உதவியவர்கள் சங்கடப்படுத்தியவர்கள் யாரும் எனக்கு எதுவும் தரமுடியாது. இந்நிலையில் இருக்கும் எனக்குப் புதிதாக அவர்கள் கஷ்டத்தைக் கொடுக்க முடியாது. நட்புகள், உறவினர்கள், பகைவர்கள் யாரும் இருந்தாலும் எனக்கு ஒன்றும் செய்ய முடியாது. இந்த நிலையில் இது புரிந்து என் மனதில் பற்றும் வெறுப்பும் நீங்கினால் எனது நோய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இப்படி நோய்வாய்பட்டு விருப்பு வெறுப்பு நீக்குவதை விடுத்து இப்போதே சாஸ்திரத்தின் துணையினால் விடைபெறவேண்டும். நான் ஏன் இப்போதே விருப்பு வெறுப்பிலிருந்து விடுதலை அடையக்கூடாது என்று சிந்தித்துப் பாருங்கள். நிதித்யாசனத் தின் ஒரு பகுதி உடல், உலகம் இவற்றின் நிலையற்ற தன்மையைத் தியானித்தல். மறுபகுதி ஆத்மாவின் நிலையான தன்மையைத் தியானித்தல். இப்போது ஆத்மாவின் நிலையான தன்மையை எடுத்துக் கொள்வோம். பிரம்ம சத்தியம், ஜகத்மித்யா. (பிரம்மமே சத்தியம், இந்த உலகம் பொய்) பிரம்ம சத்தியம் என்ற பகுதிக்கு வருவோம். ஆத்மா சத்தியம் என்பதற்கு வருவோம். ஆத்மா சத்தியம் என்பதற்குப் பல விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம். அந்த லட்சணங்களில் சிலவற்றைத் தியானிக்கப் போகிறோம்.

ஆத்மா என்ற சொல்லை நாம் அகம் என்று பொருள் படுத்துவோம். ஆத்மா நித்யம் என்றால் நான் நித்தியமானவன். ஆத்மா அழியாத பொருளென்றால் நான் அழியாத பொருள். ஆத்மா என்ற சொல்லை நான் என்ற சொரூபத்தில் தியானிக்கப் போகின்றோம். ஆத்மாவின் முதல் சொரூபம், சத்தியம், இருத்தல்; நுஒளைவநnஉந. நான் இருத்தல் சொரூப மானவன். இருத்தல் என்றால் எப்படி இருப்பவன் என்ற கேள்விக்குப் பதிலில்லை. இருப்பவனாக இருப்பவன் நான். உடலாகவோ பஞ்சபூத சேர்க்கையாகவோ இல்லாமல் வெறுமனே இருத்தல். எனது இருத்தலை வாங்கிக்கொண்டு உடல், உலகம் இருக்கிறது. (நானாகிய உயிர் அல்லது ஆத்மா இருப்பதால் உடலும் உலகமும் இருக்கின்றன. இருத்தலாகிய அந்த நான் விலகினால் உடலும் உலகமும் இல்லை.) உடலில்லாதவனுக்கு உலகமில்லை.

நான் சற்சொரூபமானவன். எனக்கு வேறாக எனது இருத்தலை அவை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றன. நான் ஒருவனே இருத்தலாகக் காட்சியளிப்பவன். அஹம் தத்சொரூபம். நான் தத்சொரூபமானவன். இந்த இருத்தலுக்கு இல்லாமை கிடை யாது. (மானிடர் ஆன்மா மரணம் எய்தாது) எனக்கு மரணம் இல்லை. மாற்றம் இந்த உடலுக்கு; எனக்கில்லை. இந்நிலையில் நான் என்பது அவனே.

இயற்கையை ரசிக்கின்ற தன்மை உங்களிடம் இருக்கிறதா? குளிர் வாட்டி எடுக்கிறது என்றாலும் கொட்டும் பனியின் அழகையும் அதன் தூய்மையையும் மனதில் ஆனந்தம் பொங்கக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்திருக்கிறீர்களா? இலைகளை உதிர்த்து மொட்டையாக நிற்கும் மரங்களிலே முத்துக்களாலும், மல்லிகை மொட்டுக்களாலும் சரம் கோர்த்து அலங்கரித்திருப்பதைப் போல் பனிக்கட்டிகள் சிறிதும் பெரிதுமாகக் கோலம் காட்டும் எழிலை நீங்கள் நின்று நிதானித்துக் கண்டிருக்கிறீர்களா? குளிர் காலத்தில் நமக்கு ஏற்படும் குறைபாடுகளைச் சொல்லிக் குளிரையும் பனியையும் திட்டியிருக்கிறீர்களே தவிர ஓரிடம் பாக்கி இல்லாமல் வெண்மை நிறம் பிரகாசித்து நகரத்தையே வௌ;ளி நகர மாகக் காட்டுகின்ற கவின்மிகுக் காட்சி உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறதா?

குழந்தைகள் பனியை ரசிப்பதைப்போல் நாம் ரசிப்பதில்லை. சிறுவர் சிறுமியர் பனி உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு அந்தப் பனியில் உருண்டு புரண்டு பனிக்கட்டிகளை ஒருவருக்கொருவர் வீசி எறிந்து இயற்கையோடு இயற்கையாக விளையாடி மகிழ்கின்றனர். வெப்ப நாடுகளில் வாழ்ந்த நாம் அங்கு வெயிலையும் ரசித்ததில்லை, இங்கு இந்தப் பனியை யும் ரசிப்பதில்லை. இயற்கையின் மாற்றங்கள் மனிதர்களால் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் அந்த மாற்றங்களை நாம் எப்படி எடுக்கிறோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

எனது குருநாதர் சுவாமி சின்மயானந்தர் ரிஷிகேஷில் மழை, பனித்தூறல் ஆகியவற்றிற்கிடையே நடந்து செல்லும்போது, ஐவள ய டிடநளளiபெ கசழஅ வாந hநயஎநn என்று சொல்வார். இயற்கை சக்தி இங்கு பனியாகப் பெய்து மூடாவிட்டால் கனடாவில் இயற்கைவளம் இருக்காது. இங்குள்ள சகல வளங்களுக்கும் இந்த இயற்கை அமைப்புத்தான் காரணம். எனவே இயற்கையை ஆராதியுங்கள். அதன் அழகைக் கொண்டாடிப் போற்றுங்கள். கொட்டும் பனியின் அழகைக் கண்டு ரசிக்கப் பழகுங்கள். கனடியர்கள் இந்தக் குளிரையும் பனியையும் ஏற்று, இதற்குள்ளேயே விளையாடிக் களிக்கின்றார்கள். அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழவும் பொழுது போக்கவும் கற்றிருக்கிறார்கள்.

நமக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் இயற்கையை ரசிப்பதும் அதனை உவந்து ஏற்பதும் ஒன்றாக இருக்கட்டும். ஆர்க்டிக் பகுதிக்குப் பக்கத்தில் கனடா இருப்பதால் இது ஒரு பரிசுத்தமான இடம். அங்கிருந்துதான் வளையம் வளைய மாகக் குளிர் பரவுகின்றது. இந்தக் குளிர் மிகச் சுத்தமானது. சுற்றுச் சூழல் மாசுபடாத விதத்தில் இங்கு நல்ல காற்றுக் கிடைக்கிறது. இந்தத் தூய்மையான இயற்கைச் சூழல், மக்களுக்கு நீண்ட ஆயுளைத் தருகின்றது. கனடா ஒரு மனிதாபிமானம் மிக்க, இயற்கை செல்வம் நிறைந்த பூமி என்றே சொல்லலாம்.

ஓர் உபநிஷதம் சொல்கின்றது, ‘நான் விடுகின்ற காற்றைத் தான் நீ சுவாசிக்கின்றாய்’ என்று. யாருடைய காற்றை யார் சுவாசிக்கின்றோம்? என்று யோசித்துப் பாருங்கள். காற்றும் பிரம்மமும் ஒன்று. எல்லா உயிரினங்களும் தாவரங்களும் விடுகின்ற காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம். ஒரு புற்று நோயாளியின் சுவாசமும் என் சுவாசத்தில் கலக்கின்றது. நமக்கென்று தனியாகக் காற்று வருவதில்லை. எப்படி ஆத்மா என்ற பெயரில் உயிர் எனக்குள் இருப்பது எனக்குத் தெரியாதோ, அதுபோல் காற்று எனக்குள் போய் வருகின்ற விதமும் எனக்குத் தெரியாது. தாவரங்கள் நாம் விடுகின்ற நச்சுக் காற்றைத்தான் இழுத்து ஆக்ஸிஜனை வெளியிட்டு நமக்குக் காற்றைச் சமநிலையாக்கி நன்மை செய்கின்றன. இப்படிப் பலவிதங்களில் இயற்கை நமக்கு உதவிக் கொண்டிருக்கிறது. ஆத்மாதான் எல்லாவற்றிற்குள்ளும் உயிராக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லாம் கலந்ததான காற்றைத்தான் நீ உயிர் வாழ்வதற்காகச் சுவாசிக்கிறாய். உன் படிப்புக்கும் பதவிக்கும் வசதிக்கும் ஏற்றபடி உனக்குத் தனிக்காற்று சுவாசமாவதில்லை. பன்றி விடும் மூச்சையே நீ திரும்ப இழுக்கிறாய். பிறகு உனக்கு ஏது தனித்தன்மை? நாம் நம்மை மிக உயர்ந்த நிலையில் வைத்து உயர்வாக நினைத்து வாழ்ந்தாலும் இதுவே உண்மையான என்னை விளங்கிக் கொள்ள மிக அருமையான சிந்தனை. எல்லாமே ஒன்று. பொய்யாக எல்லாம் பேதப்பட்டு நிற்கின்றன. இயற்கையின் சமத்துவத் தன்மையை விளக்கும் “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா? மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுப்பதில்லை” என்ற கவிஞர் வாலியின் இந்தப் பாடல் வரிகள் ஆழமாக சிந்திக்கத் தகுந்தவை. இயற்கையின் ஊடாக பிரம்மம் எப்படி அணைக்கிறது என்பது தெரியாமல் நாம் வாழ்கிறோம்.

Time Line என்ற ஒரு காலக்கணக்கு மூன்று விதத்தில் நமக்குள் இருக்கின்றது. ஒன்று சாதாரணமாக மூளை வேலை செய்கின்ற time line. ஆத்மாவோடு நான் இயங்குகின்றபோது time line அதுவே மாற்றுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை இந்த நாட்டில் வுiஅந டுiநெ மாறுவது என்பது மூன்றாவது time line. எனது ஆத்ம உயர்விற்கு ஏற்றபடி 2 வித timelineஐ எனக்குள் ஆத்மா மாற்றியமைக்கிறது. அதாவது மரபணுக்களின் வழியாக வந்த சிந்தனை இல்லாமல் நான் உண்மைப் பக்கம் சார்ந்து சிந்திக்க முற்படும்போது எனது உள்நோக்கம் மாற்றியமைக்கப்படுகிறது. அந்நிலையில் நேரம் போவதே நமக்குத் தெரிவதில்லை. நேரத்தை ஆத்மா மாற்றியமைக்கிறது. ஆழ்ந்த தியானத்திலோ ஆன்மீகப் பயிற்சிகளிலோ நாம் ஈடுபட்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் பறந்துவிடும்.

உங்களது நாளாந்த அலுவல்களில் நேரம் உங்களை விட்டு விலகிச் சென்றதுண்டா? உங்களை நேரம் தவறவிட்டதுண்டா? செய்கிற செயல்களில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டிருந்தால் நேரம் போவது தெரியாது. இந்த ஆழ்ந்த ஈடுபாடு தியான நேரத்தில் ஏற்பட்டதுண்டா? பூரண அமைதிதான் உங்களை ஆழமான நிலைக்குக் கொண்டு செல்லும். எதைச் செய்ய நீ முயல்கிறாயோ அங்கு உன் கர்மா வேலை செய்யும். எதை அது செய்யுமென்று விட்டாயோ அங்கு கர்மா வேலை செய்யவில்லை. அங்கு அதனுடைய கருணை மட்டும்தான் வேலை செய்யும்.

சும்மா இரு என்று சொன்னால் உங்களால் சும்மா இருக்க முடியுமா? அதையும் மறந்து இதையும் மறந்து பூரண நம்பிக்கை அதன்மேல் வைத்து எனக்குத் தேவை என்றால் அது செய்யும் என்று சும்மா இருக்க முடியுமா? உன்னில் நம்பிக்கை, நீ அதன் மீது வைத்த நம்பிக்கை, அதற்கும் உனக்கும் தொடர்பை ஏற்படுத்திய ஞானத்தில் நம்பிக்கை என்று உனது நம்பிக்கை மூன்று கோணங்களில் அமைய வேண்டும்.

நீ இறந்து போனாய்! என்று குரு சொன்னால் உன்னால் உடனடியாக இறந்து போகமுடியுமா? நான், இந்த இடம், இந்த ஆட்கள் போன்ற எதுவுமே இல்லாமல் முழு ஜடமாக உன்னால் ஆக முடியுமா? முடியாது, ஏனெனில் நீயே உன்னைத் தொந்தரவு செய்கிறாய். சரியான ஞானம் செயல்பட்டால் எதுவுமே எனக்குச் சொந்தமில்லை. இப்போதே என்னால் அனைத்தையும் துறந்து ஜடமாகிவிட முடியும் என்று சொல்ல முடியும். அப்படிச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். உங்களால் இப்போது அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அந்த நிலையில் நான் எப்படி இருப்பேன் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிப்பட்ட அந்த நிலையில் உன்னால் அத்தனையையும் விட்டுவிட்டுப் பேசாமல் இருக்க முடியுமா? ஏனென்றால் பிறவிகள் தோறும் எல்லாம் உன்னை வந்து சேர்ந்தவை. இவை அனைத்தையும் விட்டு உன்னால் மரணித்த நிலையில் இருக்க முடியுமா? ஆழம் விளங்குகின்றதா? ஒரு தூசு துரும்புகூட உங்கள் மனதில், எண்ணத்தில், நினைவில் ஒட்டியிருக்கக்கூடாது.

உன்னை வெறுமையாக்கிக் கொள்ள முடியுமா? வீடு, வாசல், திட்டங்கள், அனுபவித்தவை, இந்த உலகம் அனைத்தையும் விட்டு உன்னால் மரணித்த நிலையில் இருக்கமுடியுமா? சவாசனம் என்று ஓர் ஆசனம் யோகாவில் இருக்கிறது. சவம் மாதிரிக் கிடத்தல்தான் சவாசனம். நம்மை சவாசனத்தில் கிடத்துவதுதான் நித்திரை. தினமும் இரவில் நித்திரை கொள்வது தற்காலிக மரணம்தான். ‘நான்’ என்பது சாக வேண்டும். அந்த நானோடு சேர்ந்தவையெல்லாம் செத்து சவாசனத்திற்குப் போ என்று சொல்கிறேன். கற்பனையாக மரணத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நாளாந்த வாழ்க்கையில் ‘நான்’ என்பது செத்து வாழ்பவன் ஞானி. எல்லாவற்றையும் ஏற்றி வைத்திருப்பவன் சம்சாரி. எல்லாவற்றையும் துறந்தவன் ஞானி. எது அலைக்கழிக்கின்றதோ அது சம்சாரம்.

இயற்கை இறுதிநிலையில் நம்மை எல்லாவற்றையும் துறக்கச் செய்கிறது. துறவி என்பது மனத்தால் அனைத்தையும் துறந்து வாழ்வது. உலக விவகாரங்களையும் குடும்பப் பிரச்சனைகளையும் மனதில் சுமந்து தவித்தால் அது கடைசியில் மாரடைப்பில்தான் கொண்டுவிடும். இதையெல்லாம் புரிந்து கொண்டு செத்த நிலையில் வாழத்தான் இந்த வேதாந்தம். இந்த நிலையில் ஓர் இல்லறத்தானால் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஞானம் பெற்றபின் மனைவி என்பவள் என் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் எனக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தர வந்தவர்கள், அவர்களது குற்றங்குறைகள் எதுவும் என்னைப் பாதிக்காது என்று ஆழமாகச் சிந்தித்து உணர்ந்து வாழ்ந்தால் இல்லறத்தானும் செத்த நிலையில் சுகமாக வாழலாம். எனக்குக் கிடைத்தவை எல்லாம் எனக்கு இன்பம் பெறவும், அன்பு செலுத்தவும் வாய்த்தவை. இடைப்படும் துன்ப துயர நிகழ்வுகளெல்லாம் கர்மாவும் மாயையும் செய்பவை. இந்தப் பார்வை மாற்றம் நம்மில் ஏற்பட்டால்தான் அந்த நிலையை எட்ட முடியும்.

மரணத்தைப்பற்றி எல்லோரும் பயப்படுகிறார்களே தவிர, அதன் உண்மைத் தன்மையை யாரும் ஆராய்ந்து பார்ப்ப தில்லை. உண்மையில் மரணம் அழகானது. உடல் துன்பங் களிலிருந்து விடுபடுவது. மரணத்தில் பஞ்சமில்லை, நோயில்லை, இன்ப துன்பங்கள் இல்லை. வாழ்க்கையில் இருந்து நம்மை விடுவிப்பது மரணம். ஞானத்தால்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். நடைமுறைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் அப்போதுதான் ஏற்படும். நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

நான் உங்களை மனத்தால்தான் சாகச் சொல்கிறேன். இப்போது மனதால் தானே நாம் வாழ்கிறோம். பிறக்கும்போது மனமில்லை, மனம் செத்த நிலையில்தான் இருந்தது. அதுதான் சித்தநிலை. வளரவளர உங்களது கர்ம மூட்டை களும் இங்கு வாழ்ந்து பெற்றவையும் சேர்ந்து மனம் நிரம்பி வழிகின்றது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றீர்கள். உங்கள் உடல்பாரத்தைவிட மனப்பாரம்தான் அதிகமிருக்கிறது. மனப்பாரத்தை நீங்கள்தான் ஏற்படுத்தினீர்கள். மிக அழகான உலகம், அற்புதமாக நமக்காக அளிக்கப் பட்டிருக்கிறது. அதை அனுபவிக்காமல் என்னுடைய கர்மாவால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை வைத்துக் கொண்டு நான் தொடர்ந்து துன்பமாகவே இருப்பது புத்திசாலித்தனமா? யோசியுங்கள்.

எந்த அளவிற்கு நான் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்கின்றேனோ அந்த அளவிற்கு மன நிம்மதியை அனுபவிக்கலாம். ஆழ்ந்த தியானம் கைவரப் பெற்றால் ஆழ் நித்திரை ஏற்படும். ஆழ் நித்திரையில் நான் இருந்தேன் என்பதை எனக்கு அறிவிக்க மூன்றாமவன் எனக்குள் இருக்கிறான். அவனைத்தான் நாம் தேடுகிறோம். அவனே ஆத்மா. நீ செத்துப் போனாலும் உனது நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு அவன் இருக்கிறான். அவன் எனக்குச் சொந்தமில்லையென்று நீ நினைத்தாலும் உனக்கு உற்றதுணை அவனே. அவன்தான் நீ. என்னை விபத்துக்களிலிருந்தும் விஷங்களிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றுபவன் அவனே. அவன் என்னிடம் காட்டுகின்ற கருணையை ஏற்று நான் பிறரிடம் கருணை காட்டுகிறேனா? இப்படி மரணத்தின் தன்மையை அறிந்துகொண்டு சாவதற்குத் தயாரான நிலையில் இனி நீங்கள் வாழ வேண்டும்.

அப்படியென்றால் தற்கொலை செய்து கொள்பவர்களின் மன நிலை என்ன? என்று நீங்கள் கேட்கலாம். அது தெளிந்து எடுக்கும் முடிவல்ல, ஒரு பிரச்சனையைச் சந்திக்க முடியாத நேரத்தில் உடனடியாக எடுக்கின்ற ஒரு முடிவு. அதில் ஆத்மா விடுபடாது. மேலும் கேவலமான ஒரு பிறவியை அது எடுக்கும். வெறும் கோபத்திலும் பச்சாதாபத்திலும் தன்னால் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாது என்னும் பிழையான எண்ணத்திலும் எடுக்கப்படுகின்ற முடிவே, தற்கொலை செய்து கொள்வது. இயலாமையே அதற்குக் காரணம். ஒருவர் தனது வாழ்க்கையை வெறுப்பினால் துறந்து துறவை மேற்கொள்வதும் தற்கொலை போன்றதுதான். வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்க்கை பற்றிய உண்மைகளைத் தெளிவாக முழுமையும் விளங்கிக் கொண்டு வாழ்க்கையிலிருந்து விலகி நின்று ஞானத்தால் மேற்கொள் கின்ற துறவுதான் உண்மையான துறவு. மாறாக வாழ்க்கை யில் ஏற்பட்ட ஏதோ ஓர் இழப்பினால் அல்லது வெறுப்பினால் மேற்கொள்கின்ற துறவு உண்மையானதல்ல.

ரிஷிகேஷில் நான் சந்நியாசப் பயிற்சியில் ஈடுபட்டு ஆசிரமத் திலிருந்தபோது சேலத்து சுவாமி ஒருவர் தமிழில் பேசுவதற் காக அடிக்கடி என்னிடம் வந்து உரையாடுவார். அவர் பெரிய பணக்காரர், பல மில்களுக்குச் சொந்தக்காரர், அவரது மனைவி பிள்ளைப்பேற்றில் இறந்து விட்டார். துக்கத்தை வெல்லமுடியாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு சுவாமியாக அங்கு வந்துவிட்டார். இருந்தாலும் அவர் பேச்சு எப்போதும் கடந்தகால வாழ்க்கை பற்றியதாகவே இருக்கும். அவர் மனமோ தனது மில்லிலேயும் கோடிகளிலும் தன் மனைவி யிடமுமே இருந்தது. இதைக் கவனித்த நான் அவரிடம் இவை எல்லாவற்றையும் விட்டுத் திரும்பிப்போய் உங்கள் விவகாரங்களையெல்லாம் ஒழுங்கு செய்துவிட்டு வாருங்களேன் என்று சொன்னேன்.

ஆத்திரம், அவசரத்தில் சந்நியாசம் எடுப்பது உண்மையான சந்நியாசம் அல்ல. அது வாழ்க்கையை விட்டு ஒளிந்து ஓடுவது. இதைவிட இல்லறத்தில் இருந்தபடியே எல்லாம் செய்துகொண்டு பற்றின்றி வாழ்வது சிறந்தது. இதுபற்றிச் சிந்தியுங்கள். இப்பொழுது உபநிஷத்தில் உபதேசிக்கப்படும் இரண்டு முக்கிய கருத்துக்கள் என்ன என்று பார்ப்போம். ஒன்று பிரம்மம், சத்தியம். இரண்டாவது ஜகத் மித்யம் (பொய்யானது). உலகம் முழுவதுமே வெறும் தோற்றம் என்ற கருத்தைத் தியானிப்போம். வெளி உலகச் சூழல் மாற்றத்திற்கு உட்பட்டது, நித்தியமில்லாதது, நிலையற்றது என்று தியானிப்போம். இந்த உண்மையை நன்கு அறிந்து கொள்வோம். இனி உடலுக்கு வருகிறோம். உடல் அன்னமய கோசமென்ற ஸ்தூல சரீரம். இந்த உடலைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் மனதில் பார்த்து, இந்த உடலின் வயதைச் சிந்தியுங்கள். அவரவரும் தங்களின் இந்த உடல் ஐந்து வயதில் எப்படி இருந்தது என்று கற்பனை செய்யுங்கள். இதே உடல் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று நினையுங்கள். அதற்கு மேலும் 50 வயதில் 80 வயதில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு கட்டத்தில் இந்த உடல் இருக்கப்போவதில்லை. இந்த உடலின் மரணம் தியானத்திற்கு முக்கிய விஷயம். இந்த உடலை வைத்துக் கொண்டு நாம் ஞானம் சேகரிக்கிறோம். ஆனால் இந்த உடல் எதிர்காலத்தில் இல்லாமற் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பூரண ஞானம் விளங்குகிறதா? இதுநாள் வரை இந்த உடலை வைத்துத்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த உடலே ஒரு காலத்திற்குப் பின் இல்லாமற் போய்விடும் என்பது உண்மை.

நம்மோடு உள்ளவை எல்லாமே இந்த உடலோடு மட்டுமே சம்பந்தப்பட்டவை. இந்த உடலின் மரணத்தைத் தியானிக்கும் போது இந்த உடலின் நிலையாமை புரிந்து உடல்பற்று குறைந்துவிடும். மரணம் அமங்கலமல்ல, மங்களமானது. பழைய உடை அகற்றிப் புது உடை அணிவது மங்கள மானது. மரணம் மங்களமான நிகழ்ச்சி, காரணம் இந்த உடல் நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றது. நம்மால் அனுபவிக்கப்படும் அநாத்மா (ஆத்மா அல்லாதது) உடலும், உலகமும் ஆகும். உடலும் உலகமும் பொய்தானே. இப்போது நம் மனதில் நிற்பவை பொய்யான இந்த உடலும் உலகமும்தான். அப்படியென்றால் நாம் பொய்யில் வாழ் கிறோம் அல்லவா?

இதுவரை உலகத்தின் நிலையாமையைத் தியானித்தோம். நம் தூல உடலை மனக்கண்முன் நிறுத்தி இந்த உடலின் நிலையாமையைத் தியானித்தோம். இந்த உடல் சில காலங்களுக்குப் பிறகு இருக்கப் போவதில்லை. எரிந்து சாம்பலாகவோ அல்லது மண்ணோடு மண்ணாகவோ கலந்துவிட இருக்கிறது. மரணம் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த மரணம் இந்த சரீரத்திற்குத்தான். ஒரு கற்பனை; எனது உடல் மரணம் அடைந்து விட்டது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னை எப்படிப் பார்ப்பார்கள்? சூட்சுமமாக இருக்கின்ற நான் யாருக்கும் தெரியாமல் என் உடலைப் பார்க்கின்றேன். சிலர் கதறி அழுகிறார்கள், சிலர் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள், சிலர் வருத்தத்தைக் காட்டுகிறார்கள். எனது மரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வைக் கொடுக்கிறது.

எனது மரணத்திற்குப் பிறகு எல்லாம் சீராகவே நடைபெறு கிறது. சில வருடங்களுக்குப் பிறகு என்னை நினைப்பவர்கள் யாருமில்லை. பரந்த உலகில் எனது மரணம் ஒரு முக்கிய விஷயமில்லை. இப்படிப்பட்ட மரணத் தியானம் எனது வைராக்கியத்திற்கு ஒரு விதை. மரணத்தைத் தியானிக்கும் போது நிலையாமையில் நிஷ்டையை அடைவோம். பெரிய சிறிய பற்றுக்கள் விலகுவதை அறிவோம். பற்றுக்கள் விலகப் பிறவியில்லாமற் போகும்.

தொடர்ந்து நாம் நமது உடலின் நிலையாமையைத் தியானித்து வருகின்றோம். மரணம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி. மரணத்தை மறந்து விடுவதனால்தான் நமதுமனம் அநித்தியமான பொருள்களுக்குச் சண்டையிடுகின்றது, போட்டி யிடுகின்றது, பொறாமைப்படுகின்றது. மரணத்தை மறப்பதால் ஆபத்தில் ஈடுபடுகின்றோம். காலை எழுந்திருக்கும் பொழுது இன்று மாலை எனது மரணம் என்று நினைத்துக் காலையில் இருந்து மாலைவரை செயல்படுவாயாக. மரணத்தைச் சிந்தித்துக் கொண்டே இருக்கப்பழகினால் ஆசையே மனதில் எழாது. மனதில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்கள்தான் உடலில் வருத்தங்களாக வருகின்றன.

இந்த நாள்தான் எனது கடைசி நாள் என்று கற்பனை செய்து இந்த நாளைப் பயன்படுத்தப் பழக வேண்டும். இப்படி நினைத்துச் செயல்பட்டால் நாளைக்கு என்ற எண்ணமே எழாது. மிக அக்கறையாகக் கவனத்துடன் அனைத்தையும் செய்து முடிக்கத் தோன்றும். இக்கற்பனை ஒருநாள் உண்மையாக ஆகலாம். எனவே இந்த வாக்கியத்தைத் தியானித்து அமர்ந்திருப்போம். மரணத்தைப் பற்றித் தியானித்தோம். இனி நாம் உடலுக்கு வருகின்ற நோயைப் பற்றித் தியானிப்போம். எவன் ஒருவன் தனது நோயைப் பற்றிச் சிந்திக்கவில்லையோ அந்த நோய் அவனது உடலை விட்டு நீங்கும். நோயை வைத்திருப்பது மனம். அதை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சிந்திக்காமலே இருந்தால் நோய் நீங்கிவிடும். ஐயோ எனக்கு இப்படி வந்துவிட்டதே என்று சதா அதையே நினைத்திருந்தால் நோய் பெருகும். எவன் ஒருவன் தன் நோயைப்பற்றிச் சிந்திக்காமல் இருக்கிறானோ அவனுக்கு அந்த நோயால் துன்பமில்லை என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

மரணத்தைப் பற்றித் தியானித்த நாம் இப்போது நம் உடலுக்கு வருகின்ற நோயைப்பற்றி ஆராய்ந்து பார்க்கின் றோம். ஒரு கற்பனை. நம் உடலுக்கு ஒரு நோய் வந்து விட்டது. மருத்துவப்படி நாம் வாழப்போவது இன்னும் சில மாதங்களே என்பது தெரியவருகிறது. சில மாதங்கள் மட்டும் இந்த உடலுடன் நாம் இருக்கமுடியும் என்ற நிலமை ஏற்பட்டு விட்டது. நம் உடலை நாம் பார்க்கிறோம். என்னென்ன மாற்றங்கள் நம் மனதில் வரும்? எனது மரணத்தின்மீது எனது பாவனை எப்படி மாறும்? நான் வைத்திருக்கும் பணத்தின் மீது என் பாவனை எப்படி மாறும்? எனக்கு நன்மையையும் இன்பத்தையும் கொடுத்தவர்களிடம் எனது உணர்வு எப்படி இருக்கும்? சங்கடம் கொடுத்தவர்களிடம் பாவனை எப்படி இருக்கும்? பிறப்பு, உழைப்பு, உறவினர், நண்பர்கள் எதிரிகளை எல்லாம் நான் இப்போது எப்படிப் பார்ப்பேன். இந்தப் பாவனை நமக்குப் புதிய அறிவையும் உணர்வையும் கொடுக்கும். நான் இருக்கப் போகின்ற குறுகிய காலத்தில் எதைத் தேடுவேன் எதை ஒதுக்குவேன் என்று பார்க்கவும். இந்தச் சிந்தனை நிலையாமை பற்றிய அறிவைத் தந்து மன உறுதியை ஏற்படுத்துகின்றது.

மரணத்தைப் பற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தபின் வருகின்ற எந்த நோயையும், ஏற்படுகின்ற எவ்வளவு பெரிய பிரச்சனை யையும் ஏற்றுக் கொள்கின்ற தன்மை எனக்குள் ஏற்பட்டுவிடும். ஞானம்தான் அனைத்துத் துன்பங்களையும் வெல்லக்கூடிய சக்தி. முக்தியைத் தேடுகின்ற பயிற்சியில் மரணத்தைப் பற்றிய சிந்தனை தவிர்க்க முடியாத ஒன்றாகும். மரணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டபின் மனம் தெளிந்து ஆத்மாவாகி விடும்.

அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அவற்றை எதிர்கொண்டு அடிபட்டு அடிபட்டுப் பக்குவப்படத்தான் வேண்டும். சும்மா ஒன்றுமில்லாமல் ஹாய் என்று வாழ்ந்துவிட்டுப் போவது வாழ்க்கையல்ல. பிரச்சனைகளால் மனம் வெறுக்க வேண்டும். பற்றறுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அனைத்தையும் துறந்த நிலைக்குப் போக நாம் வாழுகின்ற முறைதான் செலுத்திச் செல்லும். உழுது கிளறப்படும் நிலம்தான் அதிக விளைச்சலைக் கொடுக்கும். ஆலையில் சிக்கிய கரும்புதான் சாறாக இனிக்கும். ஒருவனுக்குக் கிடைத்த தோல்விகளும் அவமானங் களும்தான் அவனது மனநிலையைப் பற்றின்றிச் செயல்படும் பக்குவத்திற்குக் கொண்டு செலுத்தும். மாறாகப் பழிவாங்கும் மனப்போக்கு ஏற்பட்டால் அது அவனைக் கீழ் நிலைக்குத் தள்ளி அழிவை ஏற்படுத்திவிடும்.

தியானப் பயிற்சிக்குக் குளிர்த்தன்மை மிகமிக அவசியம். குளிரில் குண்டலினி சக்தி உயரும், மனம் ஒடுங்கும். அதனால்தான் தவ முனிவர்கள் இமயமலையை நாடிச் சென்றார்கள். ஐம்பூத விளையாட்டுத்தான்; இயற்கை. இந்த ஐந்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கினைத் தொடலாம். ஆகாயத்தைத் தொட முடியாது. இந்த ஐம்பூதங்களின் ஒலிதான் சிவாயநம. தொடமுடியாத வெளியைத் தொடத்தான் நாம் முயற்சிக்கின்றோம். வேதாந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு எண்ணமும் நமக்குள் எழக்கூடாது. எண்ணங்கள் வருவது தோஷம். ஒரு பொருளைப் பார்த்ததும் என்னுடைய மதிப் பீட்டால் எனக்குள் ஓர் எண்ணம் வருகின்றது. அது எனக்குத் தரப்பட்ட சின்ன அறிவால் வருவது. எவ்வித எண்ணமும் எழாத அமைதி நிலையைத்தான் சும்மா இருத்தல் என்று சொல்வது. மனம் இழந்த அந்த நிலைதான் மோட்சத்தின் வாசற்படி.

முன்பு வாழ்ந்த நிலையையும் இப்போதுள்ள நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது என்னை நான் வெறுமையானவனாக மாற்றிக்கொண்டேனா என்று ஆராய்ந்தால் தேவையான வற்றைச் செய்ய வேண்டிய நேரத்தில் சரியாகச் செய்ய முடிகின்றது என்பது தெரியும். வேலைக்குப் போகின்றபோது குடும்பத்தில் ஈடுபட்டுச் செயல்படுகின்றபோது எதையாவது பேச வேண்டிவரும். எதையாவது சிந்திக்க வேண்டிவரும். சிந்தனையுமில்லை, பேச்சுமில்லை என்று இருக்கப் பழக வேண்டும். இதுநாள்வரை கடமையாகச் செய்த அனைத்தையும் தற்போது சேவையாகச் செய்ய மனம் பழக வேண்டும்.

நான் சுதந்திரமானவனா? என்ற வினாவை அடிக்கடி நமக்குள் நாம் கேட்க வேண்டும். நான் இங்கு வந்ததற்குக் காரணமான தாய் தகப்பனை எனக்குத் தெரியும். மூன்று தலைமுறைக்கு முன்னால் இருந்த எனது முன்னோர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. எதற்கு இங்கு வந்தேன் என்பது எனக்குத் தெரியாது. எங்கே போவேன் என்று தெரியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்க்கை எனக்குத் தரப் பட்டிருக்கிறது. இதில் எப்படி வாழ்வது என்பதும் தெரியாது. எனக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதைக்கொண்டு நான் ஏன் பிறந்தேன்? எனது பிறப்பின் நோக்கம் என்ன? என்றெல்லாம் யோசிக்கும்போது அது இறைவனிடம் என்னைக் கொண்டு சேர்க்கிறது.

இறைவன் இல்லை என்று சொல்வதுதான் பகுத்தறிவுக் கொள்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது அடிபட்டுப் போய்விட்டது. இந்தக் கணனி யுகத்தில் இறைவன் இருக்கிறான் என்பதற்குக் கோடிக்கணக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒருவரது மூளையின் செயல்திறன் பத்தாயிரம் கோடி கம்ப்யூட்டர் இணைப்பிற்குச் சமமானது. இப்படி ஒன்றைப் படைத்தது யார்? எந்த மட்டத்திலிருந்து நீ ஆராய் கின்றாயோ அந்த அளவிற்கு உனது பகுத்தறிவு வேலை செய்யும். உலகத்திலுள்ள அனைத்து மக்களையும் அணைத்துச் செல்வதுதான் கம்யூனிசக் கொள்கை. ஆனால் அது மனிதனுக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களைப் பகுத்தறி வாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். அது பகுத்தறிவு அல்ல.

எல்லோருக்கும் உள்ளே இருக்கின்ற மூல சக்தியைத் ‘தத்வமஸி’ என்று வேதாந்தம் சொல்கின்றது. நீ அதுவாக ஆகலாம் என்பதன் பொருள் நீ பிறந்தபோது எப்படி மலர்ந்து இருந்தாயோ அதுவாக இப்போது நீ ஆகலாம் என்பதாகும். ஏனெனில் உனது வளர்ச்சி அல்லது முயற்சி எல்லாம் நீ மனதில் சேர்த்து வைத்திருப்பவை. மனதில் எதையெல்லாம் கொண்டிருக்கிறாயோ அவைதான் உன் முயற்சி அல்லது வளர்ச்சி என்று சமூகம் சொல்லும் அல்லது நிராகரிக்கும்.

அதுவாகவே நீ ஆகின்றாய்! நீதான் அது! என்பவையெல்லாம் தத்வமஸி என்ற சொற்றொடரின் விளக்கம். மனித ஆராய்ச்சியின்படி ஏதோ ஒன்றில் பெரு வெடிப்பு (big bang) ஏற்பட்டு அதிலிருந்து எல்லாம் பல்கிப்பெருகி விரிந்தன என்று சொல்கின்றனர். அதற்குமுன் என்ன இருந்தது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதையே தோற்றமாக வைத்துக் கொண்டு பார்த்தாலும் அது ஏன் வெடித்தது? என்பதற்குப் பதிலில்லை. அந்த ஆற்றலைத் தான் நாம் இறைசக்தி என்று கூறுகிறோம். அதுதான் நானா கவும் இருக்கிறது என்பதை உணர்த்துகின்ற வேதவாக்கியம் தத்வமஸி.

ஆழ்ந்த நித்திரை கொள்வதன் அளவிற்கு உங்களது ஆழ்ந்த தியானம், முக்திநிலை போன்றவை சித்திக்கும். உடல் பற்றிய நினைவே இல்லாத செத்துப்போன நிலை என்று சொல்வதைப்போல ஆழ்ந்த நித்திரை அமைய வேண்டும். அந்த அளவிற்குக் கோடானகோடி வருடங்களாக உங்களுக் குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பதிவுகள், மனிதக் குப்பைகள் எல்லாம் உங்களுக்கு ஆழ்ந்த நித்திரை வர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. ஆழ்தியானம் பழகப்பழக ஆழ்ந்த நித்திரையும் வரும். நிகழ்வில் உணர முடியாததை நித்திரையில் உணரலாம். நித்திரை எனது ஆழ்ந்த அமைதியைக் குறிக்கின்றது.

என்னில் நினைவாக நிற்கின்ற எண்ணங்கள், நிறைவேறாத எண்ணங்கள். அவற்றை ஞானத்தாலும் தியானத்தாலும் இல்லாமற் செய்து கொண்டு வருகின்றேன். மனதை வெறுமை ஆக்குகிறேன். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவை இல்லை என்று திருமூலர் சொன்னார். அந்த மனதைத்தான் நாம் செம்மைப்படுத்தி வருகிறோம். மனதை இயங்கவிடாமல் செய்ய வேண்டும். எனது தேவைக்கு என்றால் கூட மனம் ஞாபகப்படுத்தி உதவி செய்ய முடியாத ஒரு நிலைக்கு வரவேண்டும். இது தோல்வியல்ல; வெற்றி. மனம் செயல்படா நிலை வெற்றி. ஆழமான தியானமும் ஆழமான பயிற்சியும் செய்பவர்களுக்குத்தான் மனம் மறைந்து போகும். மனம் மறைந்து போனால் அந்த இடம் வெற்றிடமில்லை. அந்த இடம் முழுவதும் தெய்வீக சக்தி நிரம்பியிருக்கும். தேவாத்ம சக்தி அது. எண்ணமில்லாத நிலையில் நானும் இறைவனும் ஒன்று.

எண்ணமென்பது அபிப்பிராயத்தில் இருந்தும் வரலாம். எனது அபிப்பிராயம் எதையாவது ஒன்றைப்பற்றி முழுமையாக இருக்கிறதா என்றால் இல்லை. யாருடைய கருத்தையோ நாம் வைத்திருக்கிறோம். பிறரது கருத்துக்களோ கண்டு பிடிப்புக் களோ இனி எனக்குத் தேவையில்லை. தேவாரம், திருவாசகம் எல்லாம் அவர்களுடையவை. அவர்களது அந்த அனுபவங்கள் எனக்கு வேண்டாம். எனக்குத் தேவை என்னுடைய அனுபவங்கள். எனது கருத்துக்கள் சரியானவை தானா என்பதை அறிவதற்கு அளவுகோல் எனது ஆத்மா. என்னுடைய ஆத்மா எனது அபிப்பிராயங்களைக் கவனித்து சரி பிழை சொல்லும். முன்பு மனம் மற்றவரின் கருத்துக் களைத் தனதாக்கிக்காட்டியது. இப்போது ஒரு கருத்துமில்லை; நான் அவனோடு இருக்கிறேன். அவன்தான் சொல்கிறான். நான் அதன்படி செய்கிறேன். இதில் குழப்பம் வந்தால் தோஷம்.

உன்னுடைய ஆத்மாவிலிருந்து உனக்கு வெளிப்பட்ட ஒளிதான் உனது தெய்வம். உங்களது உயிராகிய ஆத்மாவில் இருந்து நீங்கள் பெறுகின்ற அனுபவம்தான் உங்களது தெய்வீக அனுபவம். உங்களது செயலின் வெளிப்பாட்டிலும் இறைசக்தி, இறை சேவையாக வெளிப்பட வேண்டும். எனக்கு ஏற்படும் அளவிட முடியாத அமைதிதான் இதனால் விளையும் நன்மை. எனது அமைதியைக் குலைக்கும் விதமாக என்னை நோக்கி எதுவும் வருவதில்லை. அமைதி என்பது என்வாழ்வின் வெற்றி.

நானும் அவனும் ஒன்று. எனக்கு என்ன ஏற்பட்டாலும் அவை எனக்கு ஏற்பட்டதல்ல; அவனுக்கு ஏற்பட்டது. தோல்வி என்று சொல்லப்படுவதுகூட ஒத்திப்போடப்பட்ட வெற்றி. எனவே தோல்வி என்பதே இல்லை. எனக்கு இந்த வாழ்க்கையில் எதுவும் ஒரு பொருட்டல்ல. ஏனெனில் நான் முக்தியை நோக்கமாகக் கொண்டு முயன்று கொண்டிருக்கிறேன். இந்தப் பிறப்பில் நான் முக்தியடைந்தேன் எனில் அது எனக்கு வெற்றியேயன்றித் தோல்வியல்ல. ஏன் பிறந்தோம்? எங்கே போகிறோம்? சமுதாய ரிதியாக வாழ்க்கை, அனுபவங்களைச் சுமக்கச் செய்கிறது. அதிலிருந்து நான் பெற்றவை நாலைந்து பிள்ளைகளும் நானூறு பிரச்சனைகளும் அவ்வளவுதான். உலகத்தை நம்பி ஓடுகின்றவரை தலைகீழாய் விழவேண்டி வரும். ஆத்ம சக்தியை அண்டியிருந்து வாழ்ந்தால் அந்த வீழ்ச்சியில்லை. சமுதாயம் மதிப்பவை எல்லாம் உண்மை யான மதிப்புடையவை அல்ல. உலகம் போலித்தனமானது.

நாம் பெற்ற அறிவுடன் உலகச் சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டும். ஆத்ம ஞானத்துடன் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் சூழ்நிலைகள் நாம் பெற்ற அறிவை இழந்து விடும்படி செய்கின்றன. சூழ்நிலைகள் ஆத்ம அறி வின்படி செயல்பட வேண்டும். ஆனால் சூழ்நிலைகள் மாறாக அமைகின்றன. ஏனென்றால் அறிவு உணர்வாகாத நிலை. உணர்வு செயல்படுகின்ற நேரத்தில் சூழ்நிலைகள் அறிவை இழக்கச் செய்கின்றன. அறிவுடன் சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டும். சூழ்நிலைகள் அறிவை நம்மிடமிருந்து பிரித்து விடுகின்றன.

தியான காலத்தில் கற்பனையான சூழ்நிலைகளை பாவனை செய்கின்றோம். இந்தப் பயிற்சி உண்மையான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது அறிவை இழக்காமல் இருக்கச் செய்யும். அந்த நிலைகளில் வேதாந்தியாகச் செயல்படத் தெரிய வேண்டும். ஒரு வெளிச் சூழ்நிலையைக் கற்பனை செய்வோம். என்னை முழுமையாக ஏற்றுக் கொள்பவர் என்னுள் இருக்கிறார். என்னை முழுமையாக அன்பு செய்பவர் என்னுள் இருக்கிறார். என்னை ஏற்றுக்கொள்ளாதவா;, குறைகளைப் பார்ப்பவர், நிராகரிக்கின்ற ஒருவரும் என்னுள் இருக்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர், ஏற்றுக் கொள்ளா தவர் இருவரையும் பார்க்கின்றேன். ஏற்றுக் கொள்பவரிடம் எனக்கு வருகின்ற உணர்வைக் கவனிக்கின்றேன். ஏற்றுக் கொள்ளாதவரின் உணர்வையும் கவனிக்கின்றேன். யாரிடம் உள்ள உணர்வு எந்தவிதமானது என்பதையும் கவனிக் கின்றேன். என் எந்த உணர்வினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்பதைச் சிந்திக்கிறேன். அதில் உண்மை விளங்கு கிறது. என்னை ஏற்றுக்கொள்பவரிடமிருந்து நான் கொள்ளும் உணர்வே என்னை மகிழ்வைப் பெற வைக்கிறது. அதேபோல் என்னைத் துயரத்தில் ஆழ்த்துவது அவருடைய ஏற்றுக் கொள்ளாமையல்ல. அவரிடம் எனக்குத் தோன்றும் உணர்வு களே. நான் அந்த என் துயர உணர்வுகளை மாற்ற வேண்டும்.

எனக்குள் என்னை ஏற்றுக்கொள்பவரும் இருக்கின்றார்; ஏற்றுக் கொள்ளாதவரும் இருக்கின்றார். நான் என்னை ஏற்றுக் கொள்ளாதவரை வெறுக்கின்றேன். ஏற்றுக்கொள்பவரை அணைக்கின்றேன். ஆனால் இவை சரியல்ல. துயரத்தின்மீது எனக்குள்ள உணர்வுகளை நான் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் துயரத்திலிருந்து மீள என் உணர்வுகளை மாற்ற வேண்டும். சிலர் நம்மை மதிக்கிறார்கள்; புகழ்கிறார்கள். சிலர் நம்மை மதிப்பதில்லை; இகழ்கிறார்கள்.

இவற்றில் எது உண்மை? இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. உண்மையில் நம்மை அவர்கள் மதிப்பதுமில்லை; இகழ்வது மில்லை. நம்மைப்பற்றிச் சிலர் சில முடிவுகளைச் செய்துள் ளார்கள். என்னைப் பற்றி சில தீர்மானங்கள் செய்துள் ளார்கள். தீர்ப்பு அவர்கள் செய்த அந்த முடிவுதான். அந்த முடிவைத்தான் அவர்கள் மதிக்கிறார்கள்; இகழ்கிறார்கள். அந்த நான் அவர்கள் மனத்திலிருக்கின்ற நான். உண்மையில் நானல்;ல. நானாகிய நான் வேறு; அவர்கள் மனத்திலிருக்கும் நான் வேறு. அவர்கள் இகழ்வது அவர்கள் மனதிலுள்ள நான். அது சரியாக அல்லது பிழையாக இருக்கலாம். அது அவரவர் முடிவைப் பொறுத்தது. யாரும் நானாகிய என்னை மதிப்பதில்லை; யாரும் என்னை இகழ்வதுமில்லை.

ஒருவரைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கின்ற அபிப்பிராயம் முன்பு நீங்கள் கொண்டிருந்த அபிப்பிராயமா? இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கின்ற அபிப்பிராயமா? உங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றிய உங்கள் கருத்து பழைய விதத்திலேயே இருக்கிறதா? இப்போது மாறியிருக்கின்றதா? முன்பு விருப்பு வெறுப்புக்களின் வழியாகப் பார்த்தீர்கள். இப்போது ஆன்மீகப் பார்வையில் பார்க்கிறபோது முன் கூறியவை நீங்கி நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. குற்றம் குறைகள் தெரியாத அல்லது பார்க்காத உயர்ந்த நிலை இது. இது உங்களில் ஏற்பட வேண்டிய பார்வை மாற்றம்.

ஒன்றைப் பற்றிய உங்களது கருத்து ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இருக்க வேண்டும். பழைய பார்வையை மாற்றி இன்றைய மன உயர்விற்குத் தக்கபடி நீங்கள் பிறரை அணுக வேண்டும். அவர்களும் நான்தான் என்று பார்த்து அதன்படி அவர்களை நடத்த வேண்டும். நானாகிய என்னை அவர்கள் மதிப்பதுமில்லை; இகழ்வதுமில்லை. அவர்கள் தங்களுக்குள் வைத்து இருக்கும் என்னைப் புகழ்கிறார்கள்; இகழ்கிறார்கள். உண்மை இப்படி இருக்கும்போது யார்யாரைக் கோபப்படுவது? உன்னை அவன் அப்படிச் சொன்னானப்பா! என்று ஒருவர் சொன்னால் அவன் என்னைச் சொல்லவில்லை; அவனுக்குள் இருக்கும் என்னை அப்படிச் சொல்லியிருக்கிறான் என்பதுதான் என் பதிலாக இருக்க வேண்டும். உண்மையான தன்னை அவரவர்தான் அறிய முடியும். பிறரால் அறிய இயலாது. பிறர் என்னைப் பற்றித் தான் வைத்திருக்கின்ற பழைய அபிப்பிராயத்தைத்தான் இப்போதும் சொல்வான். நான் புதிதாக முளைத்திருப்பது அவர்களுக்குத் தெரியாது.

இப்போது நான் எவரிடம் பழகி வருகின்றேனோ அவர்களால் பாதிக்கப்படுகின்றேன்; அவர்களால் துயரப்படுகின்றேன். இந்தத் துயரத்திலிருந்து விடுபட ஒரு கற்பனை. யார் மூலமாக நாம் துயரப்படுகிறோமோ அவர்கள் பத்து பன்னிரெண்டு வருடங் களுக்குமுன் எப்படி இருந்தார்களென்பதை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு எப்படி இருப்பார்கள் என்று நினைத்துப் பார்ப்போம். நம்மைத் துயரப்படுத்துபவர் அறுபது வயதில் இருக்கிறார். அவர் இன்னும் சில வருடங்களுக்குப்பின் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்தால் அக்கற்பனை அவர்கள்மீது அனுதாபத்தையும் அன்பையும் ஏற்படுத்தும். தனது உயர்வு மனப்பான்மை, ஈகோ, செல்வச் செருக்கு, ஆரோக்கியம் போன்றவை அப்போது அவரிடம் இருப்பதில்லை. இக்கற்பனையின் மூலம் கருணையை உருவாக்கி இப்போதே ஏன் அவரிடம் அக் கருணையைக் காட்டக்கூடாது என்று சிந்திக்க வேண்டும். அவர் எண்பது வயதில் இருப்பதாக நினைத்து அவரிடம் கருணையை உருவாக்கி இப்போதே காட்ட வேண்டும் என்று சிந்தித்துத் தியானிக்க வேண்டும்.

எந்தக் கட்டத்திலும் கருணை மறையக்கூடாது. ஏனென்றால் கருணைதான் தெய்வீகம் தவழ்ந்து வரக்கூடிய இலகுவான வழி. எல்லோரையுமே கருணையுடன் பார்க்க வேண்டும். கருணை என்னில் இல்லாவிட்டால் கடவுள் தன்மை வராது. நமக்கு வெளியே உள்ள சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய சிந்தனையைப் பயிற்சி செய்து வருகின்றோம். நாம் எவருடன் பழகுகிறோமோ அவர்களை ஐந்து வயதுக் குழந்தையாகவோ 90 வயதுக்கு மேலான தளர்ந்த முதியவராகவோ கற்பனை செய்து பார்ப்போம். அக்கற்பனையுடன் அவரைப்பார்க்கும் போது அவரது நடத்தை, சொற்கள் நம்மைப் பாதிக்காது.

இவ்வாக்கியத்தைச் சிந்திப்போம். இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் என்று சிந்தித்து அமர்ந்திருப்போம். குழந்தைகளின் பிடிவாதம், முதிர்ந்தவர்களின் பிடிவாதம், அறியாமை, இயலாமைகளின் விளைவு இவைகளை இப்போது நாம் உணரும்போது நம்மனம் பாதிப்புக்கு உட்படுவதில்லை. இவ்விதம் பிறரின் தன்மையையும் அவர்களின் நிலைமையையும் சிந்தித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டு அவர்களிடம் நாம் பழகத் துவங்குகின்றபோது முதலில் இருவருக்குமிடையே ஓர் அமைதி அலை உருவாகின்றது. அவர்களை நாம் சகித்துக் கொள்ள முயல்வதால் நம்மிடம் வெறுப்பும் எதிர்ப்பும் எழுவ தில்லை. அவர்கள் செய்கின்ற வேண்டாதவைகளைக் கூட ஏற்றுக்கொள்ள முற்படுகின்றோம். எதிர்ப்பு எழாத நிலையில் சகித்துக் கொள்வதால் நம் அமைதி கெடுவதில்லை. அதே நேரம் கர்மாவும் கழிகின்றது. இதுதான் நமது ஆன்ம முன்னேற்றத்திற்கான முயற்சி.

 

ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு மைல்கல்லைக் கடக்கிறீர்கள் என்பது தெரியுமா? உங்களை நோக்கி வருகின்ற பிரச்சனைகளுக் கெல்லாம் ஆன்மீகத் தீர்வைக் காண்கின்றீர்களா? அல்லது பழைய முறையில்தான் அவற்றை அணுகுகின்றீர்களா? உப தேசமே உங்களை அந்த வளர்ச்சிக்குக் கொண்டு சென்றாலும் நீங்கள் அதைச் சரியாக உணர்ந்து உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மட்டும்தான் முன்னேறலாம். ஏனெனில் இது சாதாரண பாதையல்ல. பிறப்புக்களையே மாற்றி வைக்கின்ற பாதை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்றாடம் ஈடுபடுகின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்குப் பெரிதாகத் தெரியலாம். ஆனால் உண்மையில் ஞானத்தின்படி பார்த்தால் இதுதான் பெரியது. அந்தப் பிரச்சனைகளையும் தீர்க்கத்தானே வேண்டும் என்று நீங்கள் கருதினால் நீங்கள் தொடர்ந்து இந்த முயற்சியில் முன்னேறிக் கொண்டு போனால் அந்தப் பிரச்சனைகள் தானாகவே முடிவடைந்து விடும். இதுதான் இதன் சிறப்பு.

எல்லாம் ஒளிமயமாகத் தெரிகின்றதா? ஏனெனில் எல்லா வற்றையும் ஒளிமயமாகப் பார்க்கின்ற அறிவு உங்களுக்கு வந்து விட்டது. வேதாந்த ஞானத்தால் பார்க்கின்றபோது எல்லாம் ஒளி. ஒளியின் மாறுபட்ட தோற்றம்தான் உலகில் உள்ள எல்லாப் பொருள்களும். ஆத்மாவும் ஒளியே. இந்த ஒளியைப் பிடித்தால்தான் கர்மா உங்களை விடும். வாழ்க்கையில் என்ன வெற்றி வந்தாலும் அது நிற்காது. கர்மா அதை மாற்றி விட்டுவிடும் என்பது நியதி. எனக்கு ஒரு மில்லியன் டாலர் அதிர்ஷ்டப் பரிசு கிடைத்து விட்டது. இனி எதற்கு ஆன்மீக வகுப்பிற்குப் போகவேண்டும்? என்று நீங்கள் நினைத்தால் விழுந்த எண் பிழையானது, மாறி விட்டது, உங்களுக்குக் கிடைத்த தகவல் தவறு! என்று உடனே செய்தி வரும்.

உலகம் முழுவதுமே மாயையின் சுழற்சிதான். ஒரு பிரச்சனை தீர்ந்தால் உடனடியாக இன்னொரு பிரச்சனை கிளம்பும். இவை அனைத்திலிருந்தும் விடுபட்டால்தான் விடுதலை. நான் சொல்லிச் சொல்லி நீங்கள் பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. நீங்களாகவே ஈடுபட வேண்டும். பயிற்சி இன்றி முன்னேற முடியாது, வராது. தியானத்தில் நற்பண்புகளை உருவாக்கு வதைப்பற்றி நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். இந்த நற்பண்புகளெல்லாம் உங்களிடம் முன்பிருந்தே உங்கள் உள்ளத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் சிறப்பு களை உணராமலேயே அவற்றைக் கவனமின்றிக் கையாண் டிருக்கிறீர்கள். அதுபோலத் தீய பண்புகளின் எதிர்மறை விளைவுகளைக் கவனிக்காமலேயே தொடர்ந்து அவற்றை வெளிப்படுத்திப் பாதிப்பை அடைந்திருக்கிறீர்கள். பழைய வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சற்று எடுத்துச் சிந்தித்துப் பார்த்தால் நான் சொல்கின்ற உண்மை விளங்கும். முன்பிருந்த கோபம், பொறாமை, எரிச்சல் எல்லாம் இப்போது உங்களிடம் இருக்கிறதா? இடையில் என்ன நடந்தது? உங்கள் உள்ளத்தை நீங்களே ஆராய்ந்து கர்மாவால் ஏற்பட்டிருந்த தீய உணர்வுகளை அறவே நீக்கிவிட்டீர்கள்.

இந்த ஒரு வருடமாக உங்கள் மனதை மாற்றுவதற்கான பயிற்சிகளாகத்தான் எனது உபதேசத்தை வடிவமைத்து வழங்கி வருகின்றேன். இப்போதும் பழைய போக்கு மிகச் சிறிய அளவிலாவது உங்களுக்குள்ளே இருக்கும். ஆனால் ஞானம் அவற்றை வலுவிழக்கச் செய்துவிட்டதால் செயல் படாது. உலகத்தோடு இயங்கிக் கொண்டிருப்பதால் இந்த நிலை. தொடர்ந்து நீங்கள் மேற்கொள்கின்ற பயிற்சிகளால் தான், தொடர்ந்து கண்காணித்தால்தான் தீய குணங்கள் வெளிப்படாமல் மெலிந்து இல்லாமற் போகும்.

இந்தக் குணங்களின் நன்மை தீமையான விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் முன்பு வாழ்ந்தபோது உங்களிலிருந்து நற்பண்பு கள் அதிகம் வெளிப்பட்டனவா? அல்லது ஈகோவுடன் கோபம், வெறுப்பு, டம்பம், எரிச்சல் போன்ற தீயகுணங்கள் வெளிப்பட்டு உங்களைப் பாடாய்ப் படுத்தினவா? என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள். அடங்காமல் எதிர்த்துப் பேசிச் சண்டையிட்டு அதிகாரம் செய்து உங்களைப்பார்த்தாலே மற்றவர்கள் மனதிற்குள் முணுமுணுக்கும் அளவிற்கு நடந்து கொண்டீர் களா? அதோ வருகிறானே அவன் நல்லவன், தன்மையாக நடந்து கொள்வான் என்று மற்றவர்கள் சொல்லும் நிலையில் வாழ்ந்தீர்களா? அதுபோன்ற நிகழ்ச்சிகள் இப்போது நடந்தால், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். ஏற்பட்ட மாற்றத்தின் அளவு தெரியும். அறியாமை யால் செய்துவிட்ட தவறுகளால் அனுபவித்த வேதனைகளின் அளவு தெரியும். (இப்போது நீங்கள் பழைய நிலையில்தான் நடந்து கொள்கிறீர்களா என்று இதற்காகத்தான் கேட்டேன்) ஞானம் பெற்ற பிறகு இப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு நீங்கள் பெற்ற ஞானத்தால் தான் தீர்வு எடுக்க வேண்டும். பழையபடி ஈகோவால் தீர்வு காணக்கூடாது. தோற்றாலும் பரவாயில்லை. நீங்கள் தியானத்தில் உங்களது வேண்டுதல்களைப் பிரார்த்தனையாகக் கேட்கின்றபோது இன்னும் உலக விவகாரங்களில் பெறவேண்டியவற்றைப் பற்றித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஆன்ம முன்னேற்றத்திற்கான பிரார்த்தனைகளை மேற்கொள்கிறீர்களா? எனக்குத் தியானம் இன்னும் நன்றாக வரவேண்டும், நான் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும், நான் உன்னைக் காண வேண்டும், உன்னோடு நான் பேச வேண்டும், எனக்கு நீ வழிகாட்ட வேண்டும், உன்னோடு நான் ஒன்றாக வேண்டும்! இப்படிப்பட்ட உள்ளார்ந்த பேச்சுகளாக, உயர்ந்த விதத்தில் உங்கள் பிரார்த்தனைகள் அமைய வேண்டும்.

உபநிஷதத்தில் இப்படி ஒரு பிரார்த்தனை இருக்கிறது. உங்களுக்கு மிகப் பழக்கமான, மிகவும் தேவையான பிரார்த்தனை இது. “அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல், அஸத்தோமா, ஸத்கமய! இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்! தமஸோமா, ஜோதிர்கமய! மரணத்திலிருந்து மரணம் இல்லா நிலைக்கு அழைத்துச் செல்! மிருத்யோர்மா அமிர்தம்கமய!” இந்தப் பிரார்த்தனை நம்மைப் பொய்யிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், அழிவிலிருந்து ஆக்கத்திற்கும் அழைத்துச் செல்லும்படி நாம் வேண்டுவதாகும்.

மரணம் என்பது உடலுக்குத்தான், எனக்கல்ல! என்ற உண்மை விளங்க வேண்டும். ஆதிசங்கரர், பாரதியார் போன்ற பெரியோர்களின் உடல் மறைந்து விட்டாலும் அவர்கள் எல்லாம் இன்றளவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் கள்.

நாம் வெறும் காட்சியைக் கருத்தாக்கி அதைத்தான் அடைய வேண்டுமென்ற ஆவலில் இந்தப் பூமியில் உழல்கிறோம். வெறும் தோற்றம் என்பது பொய். (மித்யா) சத்யம் என்பது அன்பானது, அழகானது. இந்தப் “பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்க!” என்ற வரியைத் தியானிப்போமாக! இதன் பொருளை உணர்ந்தாலே மோட்சம். அறியாமையில் இருந்து அறிவிற்கு என்னை அழைத்துச் செல்! என்ற பிரார்த்தனை அறியாமையுடன் நாம் இருப்பதை உணர்ந்து அறிவை நாடிக் கேட்பதாக அமைகின்றது. நாம் பூரணத்தை அடைவதற்காகப் பூரணமாகத் திகழ்கின்ற பேராற்றலிடம் சரணடைந்து வேண்டுகின்ற நிலை இது.

இறைவனிடத்தில் செலுத்தப்படும் பிரார்த்தனை தியானமாக மாறும்போது அதற்கு அதிகப் பலன் கிடைக்கிறது. இந்தப் பிரார்த்தனையின் இறுதிவரி, மரணத்திலிருந்து மரணம் இன்மைக்கு அழைத்துச் செல். இந்த வரியைத் தியானத்தில் மீண்டும் மீண்டும் தியானிப்போம். உபநிஷத்துக்களில் உள்ள சாந்தி பாடங்கள் நம்முடைய தியானத்திற்கு மிக உகந்தவை. மூன்று வரிகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை. ஏனெனில் பேராற்றலிடமிருந்து சக்தியைத்தான் நாம் கேட்கின்றோம்.

அடுத்துத் தியானத்திற்கு எடுத்துக்கொள்ளும் பண்பு அபயம். (பயமின்மை) மக்கள் தெய்வமாக வழிபடுகின்ற எல்லா விக்கிரகங்களும் தமது வலது கரத்தை உயர்த்தி விரித்துக் காட்டியபடி இருக்கும். அதற்கு அபயஹஸ்த முத்திரை என்று பெயர். இதன் பொருள் பயப்படாதே! சில தெய்வப் படங்களில் யாமிருக்கப் பயமேன்? என்று எழுதியிருக்கும். கையைக் காட்டாத தெய்வங்களே இல்லை. வாழ்க்கையில் பார்த்தால் பயமில்லாதவர் என்று ஒருத்தருமில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் கூடப் பயம் நிச்சயம் ஏற்படும். பயத்திற்கும் அசாதாரணத் துணிவிற்கும் இடையில் நிற்கத் தெரிய வேண்டும். எதிலும் நிதானம் இருக்க வேண்டும். பயப்படுவோர்களுக்காகத்தான் முத்துக்கருப்பு சாமி, நரசிம்மர், துர்க்கை, காளி என்றெல்லாம் கடவுள் சக்திகளைப் பயங்கரமாகவும் உருவகப்படுத்தி இருக்கின்றனர். இவற்றைப் பார்த்து வழிபடுகின்றபோது பயம் போய்விடும். கொடூர பாவனை கொண்ட இந்தத் தெய்வங்களுக்கு ஏற்றபடி சிங்கம், புலி, சிறுத்தை, எருமை என்று வாகனங்களையும் அமைத்து வைத்தனர். ஏனெனில் பிழையான செயல்களை செய்பவர்களை இத்தனை தெய்வங்கள் கட்டாயம் தண்டிக்குமென்றும் அநியாயம் செய்பவர்களைத் தட்டிக் கேட்க வலிமை இல்லாமல் பயப்படுபவர்களுக்கு பக்கபலமாக இருந்து இவை உதவும் என்றும் உளவியல் ரீதியான ஒரு நம்பிக்கையை, பயத்தை, மையமாக வைத்து ஏற்படுத்தியுள்ளனர். மேலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கைச் சக்திகள் கொடூரமான ஆற்றலை உள்ளடக்கியவை என்ற பொருளும் இதில் இருக்கிறது.

எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எல்லோரிடத்திலும் இந்தப் பயம் இருக்கிறது. பயம் இல்லாதவர்களே இல்லை. கயிறு பாம்பாகத் தெரிவதும், இருட்டு வெருட்டுவதும் பயத்தால்தான். எங்கும் பயம் இருந்தாலும் பயப்படாதே! என்று சொல்லும்போது அங்கு ‘நான்’ வந்துவிடுகிறது. மனித மனதில் பயம் என்பது மிக வலுவான இடத்தில் இருக்கிறது. நான் என்பது இல்லாமற் போனால் பயம் இருக்காது. நான் என்ற இடத்தில் ஜீவன் என்று வைத்துப் பார்த்துப் பழகினால் பயம் போய்விடும். இந்த பயம் எனக்கு இல்லை. இந்த ஜீவனுக்குத்தான்! என்று ஒருவாரம் மனதில் தொடர்ந்து பழகிப் பாருங்கள். படிப்படியாகப் பயம் குறைந்து பிறகு இல்லாமற் போகும்.

பயப்படக்கூடாது, பயம் தேவையற்றது என்பதையெல்லாம் அறிவாக நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பயத்தில் இருந்து விடுபடமுடியவில்லை, பயந்து பயந்து வாழ்கின்றோம். பயப்படுவது சாதாரணமாக அமைந்து விட்டது. உயிரைக் காக்கின்ற வேளைகளில் பயம் ஒரு ஆற்றலாக வெளிப்பட்டுச் செயல்பட்டிருக்கின்றது. மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தப் பயமே உதவி செய்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பயப்படுகின்ற நல்லவர்களுக்கும் கதியற்றவர்களுக் கும் இறை சக்திதான் ஆற்றலாக இருந்து தூண்டி அப்படிச் செயல்பட வைக்கிறது. அவரவர் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அதிசயங்கள் எவ்வளவோ நிகழ்ந்திருப்பதை இப்போது நினைத்துப் பாருங்கள். இறையருள் தக்கசமயத்தில் நிச்சயம் காக்கும்.

பயப்படுதல் சாதாரணமாகிவிட்டது. பயத்தை வெறும் அறி வினால் மட்டும் நீக்க முடியாது. அபயம் அவசியமாகிறது. இந்தத் தியானத்தில் இப்போது எதைக்கொண்டு, எவ்வளவு நம்மனம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். பயத்தின் அளவு, காலம், காரணம் ஆகியவற்றைக் கண்டறிதல் முதற்படி. எதைக்கண்டு நாம் அதிகமாகப் பயப்படுகிறோம்? எவ்வளவு காலம் பயம் நீடிக்கிறது? என்ற உண்மைகள் அமைதியான மனதில் வெளிப்படும். இப்பொழுது இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலை அறிய முயல்வோம். ஒவ்வொருவருக்கும் பய அளவு மாறுபடும். பொதுவாக எதைக் கொண்டு பயப்படுகிறோம் என்பதை அவரவர் கேட்டுக் கொள்ள வேண்டும். பயத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எதைக்கண்டு அதிகம் பயப்படுகின் றேன் என்ற கேள்விக்கு அமைதியான மனதில் பதில் கிடைக்கும். அபயம் என்பது பயத்திலிருந்து விடுதலை. நமது மனம் பயந்து பழகியிருக்கிறது. உண்மையில் பயப்படு வதற்குக் காரணங்கள் இல்லை என்று அறிந்த போதிலும், பயம் பயனற்றது என்று அறிந்த போதிலும் பயத்தை விடமுடிவதில்லை.

பயந்து பழகிய நாம் மீண்டும் பழக்கத்தால் பயத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும். தியானத்தில் எதைக் குறித்த பயம் என்னைத் தாக்குகிறது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். நான் ஆத்மா, ஆத்மா பரமாத்மாவின் ஒரு துளி என்பதை அறிந்த பிறகு நாம் ஏன் அல்லது எதற்குப் பயப்பட வேண்டும்? இதை உறுதியாக நம்பினால் நமக்குப் பயம் எதற்கு? பயம் என்பது மனம் சார்ந்த பிரச்சனை. பிறகு அது உடல் சார்ந்த பிரச்சனையாக மாறிவிடும். எனவே மனம் சார்ந்த பிரச்சனையை மனத்தாலேயே வெல்ல வேண்டும். எனக்கு ஊறு வரும் என்பதால்தான் பயம். எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டால் பயம் எப்படி வரும்? ஒரு துணையில்லாமல் பயத்தை விரட்ட முடியாதா? துணை இருப்பவர்கள் எல்லாம் பயப்படுவதில்லையா?

நான் இறப்பதில்லை. எனக்குள் அவன் இருக்கிறான். அவனுக் குள் இந்த உலகம் முழுவதும் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஆற்றல் என்னோடு இருக்கிறது என்ற உண்மை என்னில் பதிந்தால் எனக்குப் பயமிருக்காது. நான் இனிப் பெற்றுக் கொள்ளவும் இந்த உலகில் எதுவுமில்லை. இந்தப் பூரண மனநிலை இருந்தால் எந்தப் பயமும் என்னைத் தாக்காது. நீங்கள் ஒழுங்காகத் தியானம் செய்து அதனுடன் உள்ளார்ந்த தொடர்பு கொண்ட நிலையிலேயே இருந்தீர்கள் என்றால் உங்கள் ஆன்மீக சக்தியின் வலிமை உங்கள் குடும்பத்தையும் உங்களது சூழ்நிலையையுமே சரியாகக் கொண்டு செல்லும். உங்களது பிள்ளைகளின் எதிர்காலத் தைப் பற்றிய பயம் தேவையில்லை. தியானம் செய்பவரின் வீட்டிலுள்ள பிள்ளைகள் பிழையாக நடந்து கொண்டாலும் அது பழுதாகப் போய்விடாது. விபத்துக்கள் எதுவும் ஏற்படாது. கர்மாவின் பயனாக ஆக்ஸிடண்ட் ஏற்படும் நிலை வந்தாலும் கடைசி நிமிடத்தில் சமாளிக்கப்பட்டுச் சிறிய அளவில் முடிந்து விடும். உங்களது அலைகளின் தொடர்பினால் உங்கள் குடும்பத்தவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். துரதிர்ஷ்ட மான எதுவும் நடக்காது. மாறாக நல்லவை நடக்கும். உங்கள் வீடு, அதன் சூழ்நிலை, செய்கின்ற செயல்கள், பு+ங்கன்றுகள் போன்ற எல்லாமே உயர்வாக சிறப்பாக இருக்கும். ஆனால் தியானமே செய்யாமல் வரவேண்டிய நன்மைகளை மட்டும் அதிகமாக எதிர்பார்த்தால் அப்படி நடக்காது. உங்களில் ஆத்மசக்தி எழும்பி விட்டதென்றால் கிரகங்கள்கூடக் கடுமை யாகச் செயல்பட்டு வருந்தாது. கர்மாவால் நிகழவேண்டியவை நிகழ்ந்தாலும் அதுகூடக் கர்மக் கழிவாக அமையுமே தவிர உங்களைத் தாக்காது. இயற்கைச் சக்திகூட உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுமே தவிர எதிராகச் செயல்படாது. இந்த ஆனமீகப் பயிற்சிகளில் அயராமல் தொடர்ந்து ஈடுபட்டு ஆத்மாவுடனேயே இணைந்துள்ள நிலையில் இருக்கப்பழகி விட்டீர்களென்றால் குடும்பத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. கடவுளும் நானும் வேறல்ல என்பது ஞானம் பெற்றவர்களுக்கு நன்கு விளங்கும்.

ஒருசிலரை மட்டும் இந்த ஆத்ம வித்தையைப் பயில்வதற்குப் பிரம்மம் தேர்ந்தெடுத்திருக்கிறது என்றால் இது சாதாரண ஒரு விஷயமல்ல. அறியவேண்டும் என்று மிகப்பலர் விரும்பினாலும் கூட அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது. பாpணாமத்தில் முன்னேறிய ஜீவன்களுக்கு வாழ்க்கைப் பாதை ஆன்மீகத்தை நோக்கித் திரும்பும். அப்படியே சிலர் விரும்பி வந்தாலும் தொடர்ந்து இதேபாதையில் செல்ல அனுமதிக்காது. ஏனெனில் இங்கு ஆத்மா அல்லாத மற்ற பொய்யான எல்லாமும் உடைத்து எறியப்படுகின்றன. இதுவரை தொpயாத ஒரு புதிய பாதையை நோக்கி நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள். ஆத்மா இல்லாத மற்ற அனைத்துமே பொய் என்றும் வெறும் தோற்ற மயக்கங்கள் என்றும் இப்போது நீங்கள் அறிந்து விட்டீர்கள்.

இந்த இடத்தில் என்னுடைய சிந்தனை என்னவென்றால் இந்தப் பயிற்சியில் உங்களின் தொடர்ச்சி இல்லை என்பது தான். வாழ்க்கையைவிட்டு விலகித் தொடர்ச்சியைத் தொட்டு விட்டீர்கள் என்றால் மிகச் சிறப்பு. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக உங்களில் ஆத்மத் தொடர்பு ஏற்படவிடாமல் கர்மாவும் மாயையும் தடுக்கின்றன. மாயை என்பது உலகம். கர்மா என்பது அவரவாpன் வினைப்பயன். தனிப்பட்ட விதத்தில் பங்கீடு செய்யப்பட்ட மாயைக்குக் கர்மா என்று பெயர். மாயையும் கர்மாவும் உங்களைப் போட்டு அலைக்கழித்திருக் கின்றன. வாழ்க்கையில் எத்தனையோ அடிகளைக் கொடுத்து உங்களை அழ வைத்திருக்கின்றன. பாpணாமத்தில் உயர்ந்த நிலையில் நிற்பவர்களுக்கு அதிகளவில் அடிகள் விழுந்திருக் காது. அப்படிப்பட்டவர்களால்தான் இந்த ஆத்ம கல்வியில் தொடர்ந்து ஈடுபட முடியும்.

இப்படி இங்குவந்து இதைக்கேட்பதற்கே ஒரு பலன் உண்டு என்பது உங்களுக்குத் தொpயுமா? இறை சக்தியான ஆத்மாவோடு நீங்கள் இணைந்து விட்டீர்கள் என்றால் பிறகு எந்தப் பிரச்சனை உங்களுக்கு ஏற்பட்டாலும் அது கழற்றி விட்டுவிடும். வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ பிரச்சனைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள். ஆன்மீகத்தை நோக்கி நீங்கள் திரும்பியபிறகு அவை எல்லாம் தானாகவே விடுபட்டுப் போய்விடும். முன் நிகழ்ந்தவற்றை ஓடவிட்டுப் பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை விளங்கும். மாயையும் கர்மாவும் நடத்திய கூட்டுச் சதியில் இருந்து பிரம்மம் உங்களை விடுவித்திருக்கிறது.

“என்னைப்பற்றி யார் மற்றவர்களுக்குச் சொல்கிறானோ, அவனது அலுவல்களை நான் பார்க்கிறேன்” என்று கீதையில் கண்ணன் சொல்கிறார். அவனைப் பற்றியே எப்பொழுதும் உங்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பதால் எதுவுமற்ற நிலையிலும் நான் ஆனந்தமாக எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றேன். உங்களுடைய கர்மாவையும் மாயையையும் உங்களில் இருந்து நீக்குவதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

இப்பொழுது நான் உங்களிடம் கேட்பது, தியானத்தில் எது பற்றிய பயம் உங்களைத் தாக்குகின்றது? நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளா? அல்லது செய்த வேலைகளா? செய்தவை, முடிந்து போனவை. அவை அறியாமையால் செய்தவை. எனவே அவற்றைப் பற்றிய பயம் அர்த்தமற்றது. நாளையோ என்ன நடக்கும் என்பது தொpயாத ஒன்று. அது அவனுடைய விருப்பம். எனவே இரண்டு விதத்திலும் இந்த நிலைக்கு வந்தபிறகு பயம் என்பது இல்லை. ஆரோக்கியம், பொருளாதாரம், உறவுகள் இவ்விதம் பல காரணம் பலருக்கு இருக்கலாம். பாதுகாப்பின்மையும் பயத்திற்கு ஒரு காரணம். இக்காரணங்களை அறிந்ததற்குப் பின் இவை பயத்திற்கான காரணமாகத் தோன்றுகின்றனவே அன்றி இவை உண்மையான காரணமில்லை. இருந்தாலும் இவை ஏன் பயமாகத் தோன்று கின்றது என்றால் உண்மையை அறிந்தும் அறியாமையில் இருப்பதால்.

உண்மை என்பது சத்தியம். எனக்குள் அது இருக்கிறது. அப்படி இருந்தும் இன்னும் பல விஷயங்களுக்குப் பயப்படு கின்றேன் என்றால் மனம்தான் அதற்குக் காரணம். மனம் வேண்டுமென்றே நம்மைப் பரம்பொருளிடம் சேரவிடாமல் பிhpப்பதற்காகப் பயத்தை உண்டாக்குகிறது. எனக்கு உண்மை தொpயும். நீ என்னைப் பயப்படுத்தாதே. பேசாமல் இரு என்றால் பின்பு பயம் போய்விடும். பயப்படுவது மாயையால்தான். எவற்றைக் காரணம் என்று நினைத்தோமோ அவை காரண மல்ல. அவை வெறும் தோற்றம். மனம் காரணமாகத்தான் பயம் தோன்றுகிறது. பயத்திற்குப் பொய்யான காரணம் மரணம். எதைக் காரணமாகக் கண்டறிகிறோமோ அவை உண்மை அல்ல. இதை உணரும்போது பயமும் மெதுவாக நீங்கி விடுவதை உணரலாம். எது எனது பயத்திற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேனோ அது கற்பனை. மனதின் சேட்டை அது.

நான் பயத்திற்குக் காரணமாக நினைப்பது மற்றவர்களுக்குப் பயத்தின் காரணமாக இருப்பதில்லை. ஞானிக்கு மரணம் பயக் காரணமல்ல. ஞானியால் மரணத்தை நீட்டிக்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். பரமாத்மாவான அவனுக்கு எல்லாம் தொpயும். உங்களையும் அவனுக்கு மிக நன்றாகத் தொpயும். தியானம் என்று உங்கள் சக்தியை ஒழுங்கு படுத்தி அவனை நோக்கி எப்பொழுதும் செலுத்திக் கொண்டு இருங்கள் என்று குருவாகிய நான் மிக அதிகளவில் தூண்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அதை முழு முயற்சியுடன் நிறை வேற்ற வேண்டிய கடமை உங்களுடையது. உங்களது முயற்சி வெற்றி அடைகின்றதோ இல்லையோ முயற்சியை நீங்கள் கைவிடாமல் தொடர்ந்து முயல வேண்டும். உங்களுக்குத் தரப்பட்ட சக்தியை வேறு பக்கமாகச் செலுத்தாமல் அவனை அடையவே முயலுங்கள். மற்றவை அவன் பொறுப்பு. மிகப் பொpய சக்தியின் கையில் இருப்பதாக நினைத்து சதாசர்வ காலமும் தியான மன நிலையில் அவனையே நினைத்து வாழுங்கள். எவ்வித பயமும் நடுக்கமும் உங்களுக்கு ஏற்படாது. வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது கிடைக்கும்.

தியானம் செய்பவர்களுக்குக் குளிர்ச் சூழ்நிலை மிக உகந்தது.  இந்தியாவில் தியானம் மேற்கொண்ட ரிஷிகள் இமயமலையை நாடிச்சென்றது குளிரில் தியானம் மிகச் சிறப்பாக அமையும் என்பதற்காகத்தான். தெற்குப் பகுதிகளில் வாழ்ந்த சந்நியாசிகள் பெரும்பாலோரும் இமயமலை நோக்கிச் சென்றுதான் தவம் செய்தனர்.  ஏனெனில் தெற்கில் வெப்பம் அதிகம். வியர்த்துக் கொட்டும்.  இதோடு குளிரில் குண்டலினி சக்தி விரைவாக மேலே ஏறும்.  திருநெல்வேலியிலிருந்த னுச. குப்புசாமி என்பவர்தான் சுவாமி சிவானந்தராக ரிஷிகேஷ் சென்று அங்கு தங்கி காட்டுப்பகுதிகளை வெட்டிச் சீராக்கி சிவானந்தா ஆசிரமத்தை சிறுசிறு குடிசைகளாக உருவாக்கி னார். தென்னிந்தியாவில் இருந்து சென்ற சிதாநந்தா, சின்மயானந்தா போன்ற சந்நியாசிகள் எல்லாம் அங்கு சென்று தங்கினர்.  தவத்தில் மேம்பட்டனர்.  அதோடு மட்டுமன்றி குளிர்ந்த மலைப்பகுதிகளில் ஏறுகின்றபோது உடலிலும் உள்ளத்திலும் ஓர் அமைதி ஏற்படும். கனடாவில் எல்லோருக் கும் கடுமையாகத் தெரிகின்ற இந்தக் குளிர் நிறைவான தியானத்திற்கென உங்களுக்கு உதவவேண்டும்.  அதிக நேரத்தைத் தியானத்திற்கெனப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.தியானம் செய்பவர்களுக்குக் குளிர்ச் சூழ்நிலை மிக உகந்தது.  இந்தியாவில் தியானம் மேற்கொண்ட ரிஷிகள் இமயமலையை நாடிச்சென்றது குளிரில் தியானம் மிகச் சிறப்பாக அமையும் என்பதற்காகத்தான். தெற்குப் பகுதிகளில் வாழ்ந்த சந்நியாசிகள் பெரும்பாலோரும் இமயமலை நோக்கிச் சென்றுதான் தவம் செய்தனர்.  ஏனெனில் தெற்கில் வெப்பம் அதிகம். வியர்த்துக் கொட்டும்.  இதோடு குளிரில் குண்டலினி சக்தி விரைவாக மேலே ஏறும்.  திருநெல்வேலியிலிருந்த னுச. குப்புசாமி என்பவர்தான் சுவாமி சிவானந்தராக ரிஷிகேஷ் சென்று அங்கு தங்கி காட்டுப்பகுதிகளை வெட்டிச் சீராக்கி சிவானந்தா ஆசிரமத்தை சிறுசிறு குடிசைகளாக உருவாக்கி னார். தென்னிந்தியாவில் இருந்து சென்ற சிதாநந்தா, சின்மயானந்தா போன்ற சந்நியாசிகள் எல்லாம் அங்கு சென்று தங்கினர்.  தவத்தில் மேம்பட்டனர்.  அதோடு மட்டுமன்றி குளிர்ந்த மலைப்பகுதிகளில் ஏறுகின்றபோது உடலிலும் உள்ளத்திலும் ஓர் அமைதி ஏற்படும். கனடாவில் எல்லோருக் கும் கடுமையாகத் தெரிகின்ற இந்தக் குளிர் நிறைவான தியானத்திற்கென உங்களுக்கு உதவவேண்டும்.  அதிக நேரத்தைத் தியானத்திற்கெனப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Consciousess என்னும் சித்தத்திற்குள் சித்தாக இருக்கின்ற ஒன்று பிரபஞ்சம் முழுவதுமாகப் பரவியிருக்கிறது.  அதை நாங்கள் எங்களது பொருள் முதல் சிந்தனையிலிருந்து  பொருளில்லா சித்தத்திற்கு மாற்ற வேண்டும். அதை நோக்கிச் செல்வதும் உண்மையை அறிவதும் ஆகிய இரண்டையும் சேர்த்துத்தான் ஆன்மீகம் என்று சொல்கிறோம்.  உலகத்தில் குறிப்பிடுகின்ற அன்பு என்ற சொல்லுக்கு அதை வெளிப்படுத்த ஓர் ஆள் அல்லது ஒரு பொருள் தேவை.  நான் சொல்கின்ற அன்பு என்ற சொல்லுக்குப் பொருளோ மனிதர்களோ தேவை யில்லை.  எந்தவித எதிர்பார்ப்புமின்றித் தானாக வெளிப்படு கின்ற அன்பு இது.  இதை நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் அன்பு செலுத்த வேறு எதுவும் தேவையில்லாமல் இயல்பாக நம்மிலிருந்து பெருகுகின்ற அன்பு என்று விளங்கும்.  உங்களை நீங்களே அன்பு செலுத்துகின்ற நிலை இது.

உங்கள் வாழ்க்கையில் கர்மாவால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிப் பிழையாக நடந்துகொண்டுவிட்டுப் பிறகு அதற்காக உங்களை நீங்களே வெறுத்திருக்கின்ற சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன.  நான் அறியாமையால் அப்படிச் செய்துவிட்டேன் என்று உங்களை நீங்கள் வெறுக் காமல் பார்த்திருக்க வேண்டும்.  முன்பு சரியாகத் தெரிந்தது இப்போது முட்டாள் தனமாகவும் பிழை செய்து விட்டேன் என்ற குற்ற உணர்வையும் தருகின்றபோது கர்மா வழி காட்டியது, நான் அதைச் செய்தேன் என்று சிந்தித்தால் உங்கள்மீது உங்களுக்கு வெறுப்பு வராது.

நாம் நமது வாழ்க்கைப் பயணத்தில் எந்தவித முயற்சியும் இல்லாமலே மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்    கிறோம்.  இதற்குள் நம்மாலான முயற்சிகளைச் செய்து இன்னொரு பிறப்பு என்ற பயணத்தில் சிக்காமல் தப்பிக்க வழியைத் தேடவேண்டும்.  அதற்கு நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனைப் பற்றிய சிந்தனை நிறைந்திருக்க வேண்டும்.  நினைவு கலங்கி உயிர் பிரிகின்ற நேரத்தில் அவ்வளவு சுலபமாக இறை எண்ணம் எழாது.  ஆன்மீகப் பயிற்சியால் எந்த நேரமும் அவனையே மனதில் நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பயிற்சி தந்த முதிர்ச்சியில் மரண நேரத்தில் மனம் இறைவனை நினைத்துச் சரணடைய முடியும்.

மனதைப் பொறுத்துத்தான் வாழ்வு என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.  நாம் யாரையாவது பகையாக நினைத்தால் அந்த நினைவு நம்மையே தாக்குகிறது. எதிர்மறைச் சிந்தனை நம் உடலிலுள்ள மிக நுண்ணிய அணுக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கின்றது.  எண்ணத்திற்கும், வாக்கிற்கும், மனதிற்கும் அவ்வளவு நுட்பமான தொடர்பு இருக்கிறது.  எப்பொழுதும் நல்லதையே நினைக்கின்ற பயிற்சி வேண்டும்.  ஏனெனில் எனக்கும் எண்ணத்திற்கும் கர்மத் தொடர்பு இருக்கிறது.  எண்ணம்தான் வாழ்க்கையாகப் போகின்றது.  இந்நிலையில் அமைதியாக இருக்கப் பழகுகின்ற பயிற்சி எண்ணங்களை எழவிடாமற் செய்கிறது.  இவ்வாறு நான் சொல்கின்ற பயிற்சிகளெல்லாம் கர்மாவை இயங்கவிடாமல் உங்கள் மனதிலிருந்து கர்மாவை அழிப்பதற்கான வழிகள்.  கர்மாவை அழித்து விட்டால் ஜீவன் என்பது மாறி, இருப்பது உயிராக நிற்கிறது.  படைப்பின் கீழ்நிலை ஜீவன்.  நடுநிலை உயிர்.  உண்மைநிலை ஆத்மா.  ஆத்மா + கா;மா ஸ்ரீ ஜீவன்.  கர்மா இல்லையெனில் அது உயிராய் இருக்கிறது.  அந் நிலையில் எனது உள்ளுணர்வை ஞானத்தால் உயர்த்திய வுடன் அது ஆத்மாவாயிற்று.  நான் இதை என் உணர்வால் தான் ஆத்மாவாக மாற்றமுடியும்.  அறிவால் அறியலாம்.  ஆனால் உணர்வால்தான் ஆத்மாவாக மாற்றமுடியும்.  ஏனெனில் இந்த உலகம் உணர்வால்தான் பின்னப்பட்டிருக்கிறது.

உங்களோடு பழகுபவர்கள் உங்கள் கர்மாவோடு தொடர்பு பட்டவர்கள்.  எனது கருத்து எனது கர்மாவிலிருந்து வெளிவருவது.  கர்மாவும் மாயையும் ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டவை.  நிகழ்வது மாயை என்பது தெரியும்.  ஆனால் அதை விலக்க முடியவில்லை. விலக்க முடிந்தவர்கள் ஞானிகள்.  உங்கள் பார்வை இறைப்பார்வையாய் இருந்தால் மாயையை நீக்கிப் பார்க்கும்.  இப்போது நாம் கர்மாவை வெல்ல முயற்சி செய்துகொண்டு வருகிறோம். மாயை பற்றிய அறிவு வரவர கர்மா சேர்வது குறையும். மனிதரைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ பத்து வருடங்களுக்கு முன்னால் கொண்டிருந்த அபிப்பிராயம் இப்போது இல்லை.  கருத்து மாறிக் கொண்டே போகிறது.  உங்களைப் பற்றிய கருத்தும் இந்த சாகாக் கல்வியான வேதாந்தத்தை அறிவதால் மாறி யிருக்க வேண்டும்.  உங்களது பரிணாம வளர்ச்சி உயர்ந் திருக்க வேண்டும்.  இப்படிப் பரிணாமத்தில் உயர்கின்றவன் மீண்டும் பிறப்பில்லாத நிலைக்குப் போகிறான்.  போனவருஷம் நீங்கள் ஆன்மீகத்தைப் பற்றிக் கொண்டிருந்த  கருத்து இந்த வருடம் மாறியிருக்க வேண்டும்.  கோவில்களோடு நின்றிருந்த ஆன்மீக அறிவு, பூஜை, வழிபாடு, சடங்குகள், வேண்டுதல்கள், என்றெல்லாம் மாறி மாறி இப்போது அவன்தான் நான் என்ற அறிவில் வந்து நிற்கிறது.  சமூக நடைமுறைகள் இந்தப் பரிணாம உயர்விற்குத் தடையாக இருக்கின்றன.
தொடர்ந்து இறையனுபவத்தை நன்றியுணர்வுடன் அனுபவித் துக் கொண்டிருக்கும் விதமாக என்னை நான் மாற்றிவிட்டேன் என்றால், மரணநேரத்தில் அது தானாகவே என்னுள் எழும்.  பயிற்சியில்லையென்றால் பயமும், தவிப்பும்தான் ஏற்படுமே தவிர இறை சிந்தனை வராது. தொடர்ந்த பயிற்சியும் ஞானமும்தான் இதற்கு அவசியம்.  சொல்வதை அப்படியே கேட்டு அதை விடாமல் தொடர்ந்து பயிற்சி பண்ணினால் தான் அது உணர்வாக மாறும்.  உணர்வாய் மாறினால்தான் அது என்னில் பதியும்.

வாழ்வில் ஏற்படுகின்ற அன்றாடப் பிரச்சனைகளைத் தவிர வேறு தனியாக என்ன பிரச்சனை இப்போது இருக்கிறது?  அப்படியே பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் ஏற்பட்டிருந்தாலும் அது உன் கர்மாவால் ஏற்பட்டது என்ற அறிவு இப்போது உனக்கு இருக்கிறது. அது காலத்தால் தீரவேண்டிய விதத்தில் தீர்ந்து போகும் என்ற தெளிவும் ஏற்பட்டுவிட்டது.  மேலும் பிரச்சனையாகத் தெரிவது மனதின் எண்ணமே தவிரப் பிரச்சனை உண்மையில் நம்மைப் பாதிப்பதில்லை.  நித்திரையில் பிரச்சனை நம்மை வருத்துவதில்லை.  ஏனெனில் நித்திரையில் மனமில்லை.  ஆகவே மனதை ஒழுங்குபடுத்தி அறிவுபு+ர்வமாகச் சிந்தித்தால் பிரச்சனை தீர வழி தெரியுமே தவிர உன்னைப் போட்டு அலைக்கழிக்காது.

உன்னைப் படைத்த நாளிலிருந்து உனக்குத் தேவையான வற்றையெல்லாம் அதுதான் செய்து கொண்டிருக்கிறது.  ஆன்மீகத்தை அறிந்து ஞானம் பெறுவதற்கு முன்பும் நீ எப்போதும் வெறும் துன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்ததில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் சிரித்து, மகிழ்ந்து மிக சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித் திருக்கிறாய்.  அந்த சந்தோசத்தை அனுபவிக்கச் செய்தது எது? உனக்குள் இருக்கும் சக்திதான் உனக்கு அந்த மகிழ்ச்சி நிலையை நீ அறியாமலேயே உனக்குத் தந்திருக் கிறது.  இப்போது நீ அதுதான் எனக்கு எல்லாமாய் இருந்து செயல்படுகிறது என்ற உண்மையை அறிந்து சந்தோசப்படு. நான் விரும்பி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் அவன் விருப்பப்படிதான் நடக்கின்றன. சில எனக்குச் சாதகமாகவும் சில எனக்குப் பாதகமாகவும் என் கர்மாவின்படி நடக்கின்றன.  நான் எதைச் செய்தாலும் அவனும் நானும் சேர்ந்துதான் அது செய்யப்படுகின்றது.  சில வேளைகளில் பொங்கிப் பெருகு கிறது. சில நேரங்களில் அசையக்கூட மறுக்கிறது.  அனைத் திற்கும் பின்னால் அவனும் நானும் இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தால் எதுவுமே நம்மைப் பாதிக்காது.

அறிவையும் ஞானத்தையும் நாம் பெறலாம்.  ஆனால் பெற்ற அறிவு அறிவாக மட்டும் இருக்காமல் உணர்வாக மாற இப்படிப்பட்ட பயிற்சிகளில் எப்போதும் நாம் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  பரிணாமத்தில் உயர்ந்து விட்டோம் என்றால் புத்திக்கு வேலையில்லை.  அதற்குப் பதிலாகப் புத்தியின் இடத்தில் ஆத்மா நின்று வேலை செய்யும்.  இது ஞானம்.  நடைமுறையில் இதை நீங்கள் கொண்டு வந்தால்தான் நீங்கள் இன்னொரு பிறவி எடுக்காமல் மீள முடியும்.  எனது உணர்வு முழுவதும் அவனைச் சார்ந்தே இருக்க வேண்டும்.  இத்தனை பிறவிகளையும் இறைவன்தான் தந்தான்.  இந்தப் பிறவியையும் அவன்தான் தந்திருக்கிறான்.  மேலும் அவனது நியதிப்படி படைப்பாகிய என்னால் இங்கிருந்து எதையும் கொண்டு போக இயலாது.  நானாக எதையும் உருவாக்கவும் இயலாது.  இருப்பவற்றைச் சேர்த்து வைத்து ஏதேதோ செய்து கண்டுபிடிக்கிறோமே தவிரப் புதிதாக எதுவுமே செய்ய முடியாது. அப்படியெனில் என்னுடையது என்று சொல்கின்றபோது ஏற்படுகின்ற கர்வம் அவனுடையது என்று சொல்கின்றபோது இல்லை.
ஒரு பொருள் என்பது உண்மையில் ஒளி.  மாயையால் அது பொருளாய் தெரிகிறது.  ஒரு பொருளின் உள்ளே இருக்கின்ற ஒளியைப் பார்ப்பதற்குத் தகுந்த பயிற்சி தேவை.  அன்பு என்பது இயல்பானது.  அது பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் படருவதாகத் தெரிகிறதே ஒழிய அன்பு என்பது எனக்குள் இருப்பது.  நீ உன்னை முழு அன்பால் நிறைத்து அந்த அன்பால் வெளியிலுள்ள அனைத்தையும் நிரப்பினால் தான் உனக்கு முக்தி.  அந்த அன்பெனும் சக்தி இறைவனிட மிருந்து கருணையாக வருகிறது.  அன்பு செலுத்துகின்றபோது என்னில் நிறைவு ஏற்படுகின்றது.  அன்பில்லாவிட்டால் ஓர் அணுவும் மற்றொரு அணுவும் ஒட்டாது.  நாம் குறையாக இருப்பதற்குக் காரணம் கருணையை நிரப்பாததுதான். அன்பும் கருணையும் வெளிப்படுவதற்கு ஞானம் தேவையில்லை.  உலகத்தில் எவ்வளவோ பேர் ஒன்றும் தெரியாதவர்களாக இருந்தாலும் இயல்பாகவே அன்பை அள்ளிச் சொரிவார்கள்.  அவர்கள் பேசுவதே மிக இதமாக இருக்கும்.  கருணையே வடிவாக நடந்து கொள்வார்கள்.  மிருகங்களிடம்கூட மிக அன்பாகப் பேசி அரவணைப்பார்கள்.  அவையெல்லாம் நாம் அவற்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வதற்காகத்தான்.

தனி மனிதனின் பரிணாம வளர்ச்சிதான் பிரபஞ்ச சுழற்சியின் நோக்கம். நீ பரிணாம உயர்வு பெறாவிட்டால் தூக்கி அடித்து விடும். உலகத்தோடு மனிதர்களுக்காகவும் பொருள்களுக் காகவும்தான் போராட்டம் நடைபெறுகிறது.  அருளிலிருந்து தான் பொருள் வந்தது.  பொருளைப் பெறுவதற்கும் அருள் வேண்டும்.  படைக்கப்பட்டவை அனைத்தையும் அவரவர் கர்ம வாசனையின் அடிப்படையால்தான் அணுகுகிறார்கள், விரும்பு கிறார்கள், வெறுக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தி ஞானத் தால் கர்மாவையும் மாயையையும் வெல்ல வேண்டும்.

முயற்சி இல்லாத மாற்றமொன்று உங்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறதா? ஞானத்தைக் காதால் கேட்டதால், மனதால் சிந்தித்ததால் உணர்வாக மாற்றியதால் உங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முயற்சியில்லாத மாற்றமாகத் தெரி கிறதா? வாழ்க்கையின் விதிகளை அறிந்தபடியால் நீ எங்கும் இருக்கின்ற ஆத்மாவோடு சங்கமிக்கிறாய்.  அதனால் ஆன்மீக வளர்ச்சியாலும் அக மாற்றத்தினாலும் ஆனந்தம் நிரம்பிய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.  நீ என்ன செய்தாலும் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உனது அடிநாதமாக உள்ளார்ந்த மகிழ்ச்சி உனக்குள் இருக்கின்றதா? உலகாயதமாக வாழ்க்கையில் எது நடந்தாலும் அது உன்னைப் பாதிக்காமல் யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

பிரபஞ்சத்தைப் பற்றிய சகல உண்மைகளும் ஒரு சாவிபோல வேதாந்தம் மூலம் உங்கள் கைகளில் தரப்பட்டிருக்கிறது.  ஒரு பொருளை நீங்கள் பார்க்கின்றபோது அது மாயத் தோற்றம் என்று உங்களுக்குத் தெரியும்.  ஆனால் அதில் மயங்குவீர்களா மயங்க மாட்டீர்களா என்பது தெரியாது.  மயங்கினால் கர்மா வேலை செய்கிறது என்று பொருள்.  மயங்காவிடில் ஞானம் வேலை செய்கிறது என்று அர்த்தம்.  எல்லாவற்றையும் ஆன்மீகம் தீர்மானிக்கட்டும். மயக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. ஆசைதான் இந்த மயக்கங்களுக்குக் காரணம்.  இறைவனிடத்தில் நம்மிடம் இல்லாததை வேண்டுதல் பிரார்த்தனை. நம்மிடம் இருப்பது, நமக்குக் கிடைத்தது ஆகிய வற்றிற்காக இறைவனிடம் நன்றி செலுத்துவதும் பிரார்த்த னையே.  நம்மிடம் இல்லாததைப் பார்க்கும் மனம், அறிவு, செல்வம், சூழ்நிலை, நல்உறவுகள், நமக்குக் கிடைத்த நன்மைகள் ஆகியவற்றைப் பார்த்து அவற்றிற்கெல்லாம் நன்றி செலுத்துவதும் பிரார்த்தனை. நமக்குக் கிடைத்ததை நினைத்து இறைவனிடம் நன்றி செலுத்துவோம்.  இறைவா! இவ்விதம் இன்று நான் இருப்பதற்குக் காரணமாயிருக்கின்ற உனக்கு எனது நன்றி.  இந்தப் பிரார்த்தனையை உள்ளம் ஏற்றதென்றால் இல்லையே, இல்லையே என்ற ஏக்கம் வராது.  மாறாக என்னுடைய வாழ்க்கை அவனது பிரசாதம் என்ற உணர்வும் ஏற்பட்டுவிடும். நன்றியுணர்வுடன் இதைத் தியானித் துக் கொண்டு இருக்க வேண்டும்.

இறைவனிடத்தில் பலவிதமான வேண்டுதல்களைப் பிரார்த் தனைகளாகத் தியானத்தில் செய்து வருகிறோம்.  உபநிஷத் துக்களில் அமைந்துள்ள சில பிரார்த்தனைகளைத் தியானமாக்க வேண்டும்.  அம்மந்திரங்களை ஓதினால் பாராயணம்.  மனதிற்குள் ஜபித்தால் தியானம். இவற்றில் முதல் பிரார்த்தனை ‘உபநிஷத்துக்களில் கூறிய அறப்பண்புகள் என்னிடம் இருக்கட்டும்’. மந்திரம் முக்கியமில்லை.  அர்த்தம் தான் முக்கியம். ‘தர்ம நெறிப்படி நான் வாழ வேண்டும்’ எனது உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும்! இந்த ஆரோக்கியம் மோட்சத்திற்காகவே அன்றி போகத்திற்காக அல்ல.  எனது சொற்கள் இனிமையாக இருக்கட்டும். இனிமை என்பது மற்றவர்களையும் என்னையும் புண்படுத்தாமல் பேசுவது.  இந்த வாக்கியத்தைத் தொடர்ந்து தியானிப்போம்.  வாக்தபஸ் என்பது மிகமுக்கியம். வாய் பேசுகின்றபோது புத்தி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  நானும் அவனும் வேறு வேறல்ல.  இருவருமே ஆத்மா.  ஆத்மாவிடம் ஆத்மா பேசுகிறது.  அதை உணர்ந்து முறையாகப் பேசவேண்டும்.  நம்மையும் மீறி சொற்கள் பிறர் மனதைப் புண்படுத்தி விடு கின்றன.  இறைவா! என் வாக்கு இனிமையாக, மென்மையாக இருக்கட்டும்! இதை மெதுவாகத் தியானித்துக் கொண்டு அமர்ந்திருப்போம்.

உலகத்தோடு வாழ்ந்தாலும் உங்களோடு நீங்கள் இருக்கின்ற பரிபக்குவம் இப்போது உங்களுக்கு ஏற்பட்டு விட்டதா? அப்படி இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது, தெரியுமா? எதிர்மறையான குணங்கள் இப்போது உங்களிடம் இருக்காது. எல்லாவற் றையும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தன்மை வந்திருக்கும். வருபவற்றை நிராகரிக்க நான் யார்? படைப்பு, பாதுகாத்தல், திரும்ப அழைத்தல் போன்ற எல்லாமே அவனிடம் இருக்கின்ற போது நான் என்ன செய்ய முடியும். ஏதோ ஒன்று என்னை நோக்கி வருகின்றதென்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

இந்த நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால் ஊழபnவைiஎந டிழைடழபல (அறிவாற்றல் உயிரியல்) யில் மிக மிக நுண்ணிய னுNயு தன்னருகில் உள்ள னுNயு ஐ அடையாளம் காண்கிறது. அடையாளம் காண்பது மட்டுமன்றி அதனோடு உறவாடுகிறது என்ற உண்மையே ஆகும். இதை அறிந்த பின்பு விஞ்ஞானிகள் ஒளியைப்பற்றிப் பேசத் துவங்கி விட்டார்கள். ஒவ்வொரு அணுக்களும் பரிமாறிக் கொள்கின்ற தகவல்களைக் கண்டுபிடித்தவர்கள், இவற்றிற்குப் பின்னால் மிகப்பெரிய சக்தி ஒன்று இருக்கிறது. அது பேரியக்கமாகச் செயல்படுகிறது என்று கடவுள் இருப்பதை ஒப்புக் கொள்ளத் துவங்கி விட்டனர்.

உலக இயக்கம், உடல் இயக்கம் எல்லாமே மிகச்சிறிய உயிர்ப்பொறி மற்றதை அடையாளம் காண்கின்ற விதத்தில் செயல்படுகின்றன. ஆனால் நம்மால் நம்மைப்பற்றி முழுமை யாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாமலே வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் அந்த அணுக்களும் அவற்றின் தொடர்பாடலும் சக்தி வழியே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரியாமலேயே நம்மைப் பற்றிய தகவல்கள் எல்லா இடங்களுக்கும் செல்கின்றன. நுஅயடை வைத்திருப்பவர்கள், செல்போன் வைத்திருப்பவர்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அமெரிக்காவில் சேகரித்து வைத்திருக்கிறார்கள். உங்களைப் பற்றிய விபரங்கள் வெளியில் சென்ற பிறகு நீங்கள் சுதந்திரமானவர்களா?

இதேபோலத்தான் நம்மைப்பற்றிய முழுவிவரங்களும் இறைவனின் பதிவேட்டில் ஒன்று விடாமல் பதியப்படுகின்றன. நமது புராணங்கள் அப்படிப் பதிபவரை சித்திர குப்தனார் என்று பெயரிட்டிருக்கின்றன. சித்திரகுப்தன் கணக்கு தப்பாது. நீங்கள் எப்போதும் உங்களுடனேயே இருப்பதாக எனக்குச் சொன்னாலும் உங்களுக்கு உள்ளே இருக்கின்ற அவனுக்கு உங்களைப்பற்றிய உண்மை மிக நன்றாகத் தெரியும்.

பரமாத்மாவின் ஒரு துகள் ஆத்மா. அந்தத் துகளான ஆத்மாவை எனது கர்மா சுற்றி இருப்பதுதான் ஜீவாத்மா. இந்த ஜீவனில் சுற்றியிருக்கின்ற கர்மாவை எடுப்பதில்தான் இவ்வளவு வில்லங்கம். கர்மா நீங்கிவிட்டால் இது பரமாத்மா வின் ஒரு துளி. எது எல்லாவற்றிற்கும் காரணமோ அதனோடு நான் நெருங்கி நெருக்கமாக இருக்கிறேன். அதனிடம் எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன் என்று சொன்னாலும் அதன் உண்மை அவனுக்குத் தெரியும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

சடப்பொருளிலிருந்து உயிர் வந்தது என்று விஞ்ஞானம் சொல்கிறது. உயிரிலிருந்து சடப்பொருள் வந்தது என்று வேதாந்தம் சொல்கிறது. எது உண்மை? பொதுவாக சடப் பொருள்தான் மாறிமாறி வளர்ந்து உயிராக வந்தது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் உயிரென்ற ஆத்மாவில் இருந்துதான் சடப்பொருள் வந்தது. ஏனெனில் சடப்பொருள் எரியும். எரியக்கூடிய உயிர்த்தன்மை சடப்பொருளுக்கு இருக்கிறது. உயிர் உறைந்திருக்கும் நிலை சடநிலை. உயிர்ப்பொருளிலிருந்துதான் சடப்பொருள் வந்தது. விதைகள் உறங்கிய நிலைக்குப் பிறகுதான் உயிர்த்து செடியாக வெளிப்படுகின்றன. ‘விறகிடை உறங்கும் தீ’ என்று சொல்வார்கள். அந்த விறகு சடப்பொருள் என்றாலும் அதனுள் எரியும் தன்மை இருக்கிறது. பிரம்மம் என்ற சக்தி இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தபோது மாயை, கர்மா என்ற இரண்டை யும் கலந்து படைத்தது. மாயையையும் கர்மாவையும் நீக்கி விட்டால் நான் மூலம். மாயையால் ஏற்பட்ட கர்மா மனதில் ஒட்டி நிற்கிறது. ஆகையால் இந்த மனதைக் கர்மாவிலிருந்து விடுவிப்பதற்குத்தான் இந்த உபதேசம்.

இந்த மனதில் மாயை உள்ளது, கர்மா உள்ளது, இரவல் உள்ளது. அப்படிப்பட்ட உங்கள் மனம் ஆன்மீக உபதேசத் தால் கண்ணாடி போல் வந்து விட்டதா? உயிர் எல்லா மட்டத்திலும் தன்னை மற்றவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. தெரிந்தோ தெரியாமலோ எல்லோரிலும் நான் பிரபலமானவராக ஆக வேண்டும், என்னை நாலுபேர் மதிக்க வேண்டும் என்ற ஆவலும் உந்துதலும் இருக்கிற தல்லவா? என்னை நான் அறிய இங்கு வந்ததற்குக் காரணம் என்னில் தூண்டப்பட்ட அறிவா? அல்லது சமுதாயத்தில் உள்ள கேடா? அல்லது நான்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட வழியைத் தேடியதாலா? என்று ஆராய்ந்தால் எத்தனையோ பேர் என்னைவிட அதிக அளவு துன்பத்தில் அவதிப்பட்டாலும் அந்தத் துன்பத்தைத் தீர்க்க வேண்டுமென்று ஓடுகின்றார்களே தவிர இங்கு வருவதில்லை. இதற்கான காரணம் என்ன? இது ஏன் என்னைச் சுற்றிப் பிடிக்கிறது என்று சிந்திக்கக்கூடிய ஓர் உயர்வு நிலை அவர்களிடம் இல்லை. தங்களைப்பற்றி ஆராய முற்படுபவர்கள், வாழ்க்கையின் உண்மைத் தன்மை என்ன என்று அறிய விரும்புபவர்கள் தான் ஆன்மீகத்தைத் தேடி இங்கு வருகிறார்கள்.

படைப்பான இந்தப் பிரபஞ்சம் உயிரை மையப் புள்ளியாகக் கொண்டு இயங்குகிறது. எல்லாமே உயிர். உயிரில்லாதது எதுவுமில்லை. குவித்து வைக்கப்பட்ட சாணத்தில்கூட மூன்றாம் நாள் அதிலிருந்து உயிருடன் புழு வெளிப்படுகிறது. பழுதான உணவுப் பொருள்களில் பூஞ்சணம் என்ற உயிரி வெளிப்படு கிறது. எந்தப் பொருளாயிருந்தாலும் அதற்குள் உயிர் இருக்கிறது. அப்படி எங்கும் உயிராக நிறைந்திருக்கும் பிரம்மத்தை உங்களிலிருந்து இனி வெளிப்படச் செய்ய வேண்டும். உபதேசத்தால் கிடைத்த ஞானத்தால் பிரம்மம் எனக்குள் உயிராக இருக்கிறது. கர்மாவாலும் மாயையாலும் இயங்கிக்கொண்டிருக்கின்ற இந்தப்பிறவி இனி அவை நீங்கி மனம் கண்ணாடியாகி மாறி பிரம்மத்தை வெளிப்படுத்த வேண்டும். அறிவு உணர்வாக வெளிப்பட வேண்டும். குருவாகிய நான் அறிவாகத்தான் அதைத்தர முடியும். இனி நீங்கள்தான் அதை உணர்வால் தட்டி எழுப்ப வேண்டும். ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உலகம் உங்களைத் தடுக்கிறது. அறிவால் அதை வெளிப்படுத்த முடியாது. உணர்வால்தான் அதை வெளிப்படுத்த முடியும். அதற்கு அன்பு, கருணை, அவனே எல்லாம் என்ற தெளிந்த அறிவு, அழியக்கூடியவை பற்றிய தெளிவு, குறிப்பாகப் பரிணாம வளர்ச்சி, அவனது அருள் எல்லாம் தேவை. அல்லது குரு சொல்வது உண்மை என்று ஏற்கின்ற தன்மை வலுவாக ஏற்பட வேண்டும். அறிவு உணர்வாக மாறுவதற்கு எந்த நேரமும் என்னை நான் கவனித்துக் கொண்டிருக்கின்ற விழிப்புணர்வு தேவை. அது உன்னிலிருந்து வெளிப்படுவதை நீங்கள் அனுபவிக்கின்ற அமைதியின் அளவையும், சந்தோசத்தின் அளவையும் கொண்டுதான் அறியலாம். வேறு ஒன்றாலும் அறிய முடியாது.

இந்த அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தை களால் விவரிக்க இயலாது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் பாரீசுக்குப்போ என்ற நாவலில் கதையின் நாயகன் தனது காதலியை நினைத்துப் பேசுகின்றபோது அவளைப்பற்றிய அந்த உணர்வை என்னால் சொல்லால் விவரிக்க முடிய வில்லை, வயலினில் இசைத்துத்தான் அதை வெளிப்படுத்த முடியும் என்று சொல்வான். சொற்களின் இயலாமை அந்த இடத்தில் நமக்கு மிக நன்றாக விளங்கும். அதைத்தான் இங்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. அவனோடு நான் இணைந்திருக்கின்ற அந்தத் தருணத்தைச் சொற்களால் வெளிப்படுத்த முடியாது. அந்த அமைதியையும் நிறைவையும் ஆனந்தத்தையும் அப்படியே மெய்மறந்து அனுபவிக்கத் தான் முடியும். ஏனெனில் இந்த உடல் வரையறைக்குட்பட்டது. வரையறையற்ற ஒன்றை எப்படி எடுத்துரைக்க முடியும்?

மூளையிலுள்ள ஸெல்கள் ஒரு பிரச்சனையைப் புரிந்து கொள்கின்றபோது ஒளிரும். மூளையிலுள்ள அனைத்து ஸெல்களும் ஒளி பெற்றுப் பிரகாசித்தால் அது அறிவொளியாகிய ஞானம். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாமே விளங்கும். ஒரு பிறவியில் புரிந்துகொண்டு ஒளிர்ந்த ஸெல்கள் அப்படியே பிறவி தோறும் தொடர்ந்து பிரகாசிக்கும். இதைத்தான் ‘ஒருமைக்கண் தான் பெற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’ என்று சொல்லியிருக்கின்றனர். வேதாந்தம் சாகாக்கல்வி. பிறவிதோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இப்போது நான் உங்களை என்ன அதிசயம் உங்களுக்கு வாழ்க்கையில் நடந்தது? என்று கேட்கவில்லை. நீங்கள் ஆத்மாவிற்கு அருகில் நிற்கிறீர்கள். அறிவால், ஞானத்தால் நின்றாலே உணர்வால் நிற்பதற்குச் சமம். உங்களது அன்றாட வாழ்க்கையில் இன்னொருவரும் (இறைவன்) உங்களோடு சேர்ந்து எல்லாவற்றையும் இழுக்கிறாரா? அந்தத் தெய்வீக சக்தி எல்லா விதத்திலும் உதவி செய்யத் துவங்கி விட்டதா? நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் சுகமாக்கி இழுத்துக்கொண்டு வருகிறதா? நீங்கள் மட்டும் இழுத்ததை இன்னொரு சக்தியும் சேர்ந்து இழுத்து உதவுகின்றதா? அல்லது முன்போல நீங்களே போட்டு உடைத்துக் குழம்புகிறீர்களா? அவரே மட்டும் இழுத்துக்கொண்டு போகின்ற நிலைக்கு நீங்கள் போய்க் கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் பிரச்சனைகளைத் தண்ணீருக்குள் பாரத்தை இழுப்பதுபோல் இலேசாகக் கொண்டு செல்ல முடிகிறதா? அவன்தான் செய்கிறான் என்ற உணர்வுடன் ஈகோ இல்லாமல் சரியாகச் சிந்தித்துச் செய்தால் எல்லாம் இலகுவாக இருக்கும்.

எல்லாப் பக்கத்தாலும் ஆராய்ந்து பார்த்தால் அதுதான் இருக்கிறது, அதுதான் வழிகாட்டுகிறது, அதுதான் கூப்பிட்ட குரலுக்கு வருகிறது, எல்லாம் செய்கிறது. ஆனால் எனக்குள் அது வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. உலகத்தில் தேவையான தேவையற்ற பொருள்களைக் கேட்டுவிடுவாய் என்று அது வெளிப்படாமல் இருக்கின்றதா? உன்னை இறைவனாக உணர்ந்து முழுமையான தகுதியுடன் சரணடைந்தால் அது வரும். உங்களுடன் பேசும்.

பண்புகளைத் தியானித்து வருகின்றோம். அதில் பிரார்த்தனை யைப் பண்பாக எடுத்துக் கொண்டோம். நல்ல பண்புகளை வளர்த்தும் தீய பண்புகளை நீக்கியும் மனதில் இல்லாதவை என்ற எண்ணமே எழாதபடி செய்தும் நிறைவடையச் செய்த பின், ஆசையை நீக்கியபின் வேண்டுதலைத் துவக்குகின்றோம். ‘என்னை உன்னிடத்தில் அழை’ என்று பிரார்த்தனை செய்கிறோம். மாயையால் இயங்கிய மனதை அழித்த பின்பு ‘உன்னை எனக்குத் தா!’ என்கிறோம்.

இப்போது ஒரு பிரார்த்தனையைப் பார்ப்போம். பொருளை உணர்ந்து கொண்டு வேண்டுவோம். “இறைவா! மனத் தூய்மையை, மனோ பலத்தை என்னுடைய சுயமுயற்சியாய், அகங்காரத்தின் பலத்தினால் மட்டும் அடைய முடியாது என்பதை எனக்கு உணர்த்தி உன்னிடம் சரணடையச் செய்வாயாக” இதைத் தியானித்து அமர்ந்திருங்கள்.

ஜபம் வேறு, பிரார்த்தனை வேறு. ஜபத்தில் சப்தம் முக்கியம். பிரார்த்தனையில் அர்த்தம் முக்கியம். இறைவனிடம் நாம் என்ன வேண்டுகிறோம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். உணர்வு பூர்வமாக வேண்டுதலை விடுக்க வேண்டும். ஜபம் மாதிரி பிரார்த்தனையை மேற்கொள்ளக் கூடாது. “இறைவா எவற்றையெல்லாம் எனக்குக் கொடுத்தாயோ அவைகளுக்கு ஒருமுறை நன்றி செலுத்துகிறேன். எவற்றை எல்லாம் எனக்குக் கொடுக்க மறுத்தாயோ அவற்றிற்குப் பலமுறை நன்றி செலுத்துகிறேன். காரணம் எனக்கு எது உகந்ததென்பதை நீயே அறிவாய். எனவேதான் எனக்குக் கொடுத்தவைகளுக்கு ஒரு நன்றியும் மறுத்தவற்றிற்குப் பலமுறை நன்றியும் சொல்கிறேன்” இப்பிரார்த்தனையில் சரணாகதி நிறைந்திருக்கிறது.

இப்போது ஒரு பிரார்த்தனையை மேற்கொள்வோம். “இறைவா! என்னுடைய பலவீனங்களை நான் நியாயப் படுத்தாமல் இருப்பேனாக. இறைவா! எனது குறைகளை நியாயப்படுத் தாமல் இருப்பேனாக” இவ்வாக்கியத்தை மெதுவாக இறைவனிடம் கூறிக்கொண்டு அமர்ந்திருப்போம். நம் மனதை மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள். நம் மனதிலுள்ள குறைகளை மற்றவர்கள் அறிவார்கள். நம்மால் கண்டுகொள்ள முடியாத நம் குறைகளை மற்றவர்கள் அறிவார்கள். நாம் அறிவதில்லை. அக்குறைகளை நம்மிடம் சுட்டிக்காட்டும் போது நாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஏற்றுக் கொள்ளாமை பெரிய குறை. எதுவாக இருந்தாலும் குறைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். யுஉஉநிவ யள வை ளை. னுழn’வ சநதநஉவ யலெவாiபெ.

தியானம் என்பது மனதிலுள்ள கர்மா, மாயை ஆகியவற்றை நீக்கி மனதிற்கு சக்தியை ஏற்படுத்துதல். அதற்கு சக்தி கொடுப்பதற்கு ஞானம் உதவுகின்றது. ஏற்றுக் கொள்கிறேன் என்னும் மனப்போக்கு ஏற்படுவது ஆன்மீக முயற்சியில் மிகப் பெரியதொரு பயிற்சி. எனக்குத் தரப்பட்ட எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்ற மனநிலை ஏற்பட்டு விட்டதா? அப்படி ஏற்க முயன்றால் முரண்பாடு இல்லாமற் போகும். இந்நிலையை அடைய மிக அதிக முயற்சி தேவை.